இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. “ஓர் இரவு” என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் தேஷ் ராகத்தில்) மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).
4 Comments
Leave a Reply
Previous Post: இதயம் கழன்று விழும் அபாயம்!
Next Post: உயிர்கொல்லிப் பூச்சிகள்
Permalink
Superb! Nostalgic!
மிக்க நன்றி. வணக்கம்
Permalink
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
atputhamaana paadal
Permalink
அய்யா, நல்ல பதிவு. பாடலைக் கேட்டேன். அருமை. ஆனால் இசை நீங்கள் குறிப்பிட்டது போல் தேசிகர் அல்ல. சுதர்சனமோ சி.ஆர். சுப்பராமனோ தான். நிச்சயம் தேசிகர் இல்லை.
அன்புடன்
– சுவாமி
Permalink
மறுமொழியிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
சுவாமிநாதன்,
ஓரிரவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் சுதர்சனம் அவர்கள்தான். எனினும் இந்தப் பாடலுக்கு மட்டும் தண்டபாணி தேசிகர் முன்னமையே அமைத்திருந்த மெட்டை அவருடைய அனுமதி பெற்று பயன்படுத்தியுள்ளனர் என்று “தூள்.காம்” வலைத்தளத்திலிருந்து அறிகிறேன்.
நன்றி
எஸ்.கே