‘மனித நேயம்’ வகைசார்ந்த இடுகைகள்

துன்பம் நேர்கையில்…

இசை, பொது, மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. "ஓர் இரவு" என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).


Metacafé - வீடியோவைக் காணுங்கள் 

இந்தப் பாடலின் ஆடியோவை மட்டும் கேட்டு இன்புற விரும்பினால் இந்த சுட்டிக்குச் செல்க.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 339 முறை) ::

அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்!

மனித நேயம் :: மறுமொழி ஒன்று »

இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:-

இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.

ஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.

எழுத்தாளர் ஜெயமோஹன் தன் வலைப்பதிவில் எழுதியுள்ள ஒரு விளக்கத்திலிருந்து பிய்த்த பகுதி இது. என்ன சொல்லவருகிறார் என்பது உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ! எனக்குப் புரியவில்லை ஐயா!

முதலில் 'பின் நவீனத்துவம்" என்னும் அறிவுசால் குறிச்சொல்லை எடுத்துக் கொள்வோம். பரமபத சோபன படத்திலுள்ள மகாப் பெரிய ஏணிபோன்றது இந்த பரிபாஷை. நீங்கள் எதை எழுதினாலும் அதில் இந்தச் சொல்லை சகாயமாக ஆங்காங்கே தெளித்துவிட்டீர்களானால் திராவிட மற்றும் இடதுசாரி அறிவு ஜீவிகள் மத்தியிலும் பொதுவாக இலக்கியவாதிகள் குழுமத்திலும் உங்கள் மதிப்பு ஜிவ்வென்று உயர்ந்துவிடும். எங்கும் பரவலாகப் பேசப்படுவீர்கள். இத்தன்மையான வெகுஜனப் புரிதலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகளுக்கென்று உள்ள அலங்காரங்களான குர்தா, ஜோல்னாப்பை ஏதும் தேவையில்லை! நீங்கள் உங்கள் தெரிவுக்குற்கேற்ப சஃபாரி சூட் பொன்ற நாட்டு சோக்காளி உடையலங்கரங்களை மாட்டிக்கொண்டு பவனி வரலாம்!

கிழ்க்கண்ட சொற்சிதைவுகளை ஏதோவொரு வலைப் பதிவில் பர்த்தேன் - எதிலென்று நினைவில்லை. இதுபோன்று சொற்களால் சிலந்திவலை பின்னுவதும் ஒரு "பின் நவீ…" முறைதான்!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 426 முறை) ::

சிறுவர்கள் ஜாக்கிரதை!

மனித நேயம் :: மறுமொழி ஒன்று »

இரயில் பயணங்களில் சில சிறுவர்கள் ஒரே இடத்தில் போரடித்துக்கொண்டு உட்காராமல் பெட்டிக்குப் பெட்டி இணைப்புக் கூண்டு (vestibule) வழியே தாண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு த்ரில்! அதுபோல் தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சில சமயம் நம் எதிரில் வந்து மோதிக்கொள்வதுண்டு. அதன் எதிர்வினை பெரும்பாலும் "பாத்துப் போங்கப்பா", "ஏய், விழுந்தூடப்போற", "பைய, பைய" போன்றவையாக இருக்கும். இன்னும் சிலர் கோபமாக முறைப்பதும் உண்டு. ஆனால் அந்தச் சிறுவர்கள் சிரித்துவிட்டுச் செல்வார்கள்; அல்லது தங்களுக்குள் நமக்கு ஒரு பெயர் வைத்து ஜோக்கடித்துக்கொண்டே செல்வார்கள்.

அதுபோன்ற தருணங்களில் நான் பெரும்பாலும் அவர்களைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, ஏதாவது கடி ஜோக்கையோ, சொல் விளையாட்டையோ, யுக்தியான வினாக்களையோ சொல்லிவிட்டு உடனே கழண்டிவிடுவேன் (அவர்களாகக் கழளுவதற்கு முன்னால்!) :)

வெற்றிக்கொடிகட்டுஇது எனக்கு ஒரு பழக்கமாகவே தொற்றிக்கொண்டு விட்டது. சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நண்பர் வீட்டுத் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தபோது கும்பலாக வந்த சிறுவர், சிறுமியர்களிடம் அமேரிக்க "தேசி"களையும், இந்தியப் பெண்களையும் இணைத்து சில ஜோக்குக்களையும், சில விடுகதைகளையும் சொல்லி சிரிக்கவைத்தேன். பிறகு உணவருந்தச் சென்றோம். அதற்குள் அங்கு குழுமியிருந்த குழந்தைகளுக்கிடையே நான் மிகப் பிரபலமாகிவிட்டேன்.

அதுபோல் சில சிறார்களிடம் பேசிச் சிறித்துக்கொண்டிருந்தபோது ஒரு பையனின் பெற்றோர் வந்து அவனை அழைத்துச் சென்றனர். ஆனால் அப்போது அந்தப் பையனின் தாய் என்னைப் பார்த்த பார்வை என் மனத்தில் சுட்டது. "ஒரு மாதிரியாக" என்பார்களே அதுபோல் என்னை நோக்கி "frown in consternation" ஒன்றை வீசிவிட்டுச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு என் மூடும் மாறிவிட்டது. ஒன்றும் பேசாமல் என் "ஐபாடை" வெளியில் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிட்டேன்.

ஓரிரெண்டு நாட்களுக்குப்பின் எங்கள் வீட்டிற்கு வந்த சிலர் மூன்று கையேடுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதில் இளம் சிறுவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தும் பாதகச் செயல் பெருகிவிட்ட விவரங்களையும், அத்தகைய நிகழ்வுகளிடமிருந்து குழந்தைகளைக் காக்கும் முறைகள் பற்றியும் எழுதியிருந்தது.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாக நடக்க்கின்றன. இந்தியா பொன்ற ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்தாலும், வெளிவராமலிருக்கலாம். ஆனால் அமேரிக்காவில் பல கிறிஸ்தவ மத குருமார்கள் இதுபோல் சிறார்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதும், அதனால் அவர்கள் சார்ந்த மத அமைப்புக்கள் பெருந்தொகைகளை நஷ்ட ஈடாகக் கொடுக்க நேர்வதும் ஊடகங்களில் வெளிவந்து அனைவரும் அறிந்த செய்தி. அங்கு இதுபோன்ற தவறிழைக்கும் பாதிரிகளால் ஏற்படும் இழப்புக்கள் அநேகம். "டைம்ஸ்" இதழ் செய்தியின்படி 2005 ஆண்டுவரையிலேயே சுமார் 4,000 பாதிரியார்கள் இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததாக அடையாளம் காணப்பட்டு, அவற்றினால் ஏற்பட்ட நீதிமன்ற சிலவினால் சுமார் 800 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு பல மாதாகோயில்கள் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு யாஹூ செய்தித் தொகுப்பு அளிக்கும் தரவுகளின்படிப் பார்த்தால் அவர்கள் கொடுத்துள்ள நஷ்ட ஈட்டுத்துகையே "மில்லியன்" அளவுகளைத்தாண்டி "பில்லியனு"க்குச் செல்லும்போல் தோன்றுகிறது!

இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே ஒரு இலட்சத்த் தாண்டும் என மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகள் பல இலைமறை காய்மறையாக பல சமூகங்களீல் குடும்ப சூழலிலும் நிகழ்வது மக்களுக்குத் தெரியவருவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பிறருடன் நெருங்கிப் பழகும்போது மிகக் கவனத்துடன் கண்காணிக்கிறார்கள். இதன் அவசியத்தை நானும் "திண்ணை" இணைய வார இதழில் வெளிவந்த "மக்கள் மெய்தீண்டல்" என்னும் கட்டுரைமூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.

ஆகையால் தோழர்களே, சிறு குழந்தைகளைக் கண்டால் ஓடுங்கள் காத தூரம். இல்லையெனில் உங்களையும் "பிள்ளை கெடுப்பவன்" லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 312 முறை) ::

பிஞ்சு மனங்களைப் புரிந்துகொள்ளுங்கள்

மனித நேயம் :: மறுமொழி இனிமேல்தான் »

நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுகிறோமா? இல்லையே!

அவர்கள் வளர்ந்தவர்கள்போல் நடக்கவேண்டும் என்றல்லவோ எதிர்பார்க்கிறோம்!

இதோ அஜீவன் அவர்களின் ஒரு குறும்படம்!


Google - வீடியோவைக் காணுங்கள் Tender Heart

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 335 முறை) ::

என்று நிரம்பும் இவர்தம் வயிறு

மனித நேயம் :: 6 மறுமொழிகள் »

பசியோடு கையேந்தி நிற்கும் ஏழைகளஇந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே கேட்டுவிட்டு ஒருவருக்கொருவர் கைகுலுக்க்கிக் கொண்டோம்!

உண்மையில் நம் நாட்டில் அத்தனை சுபிட்சம் நிலவுகிறதா?

பங்கு மார்க்கெட் குறியீடு 20,000-த்தை தாண்டிய அதே நாளில் 20,000 ஏழைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து தலைநகர் புதுடில்லி வந்து தர்னா செய்திருக்கிறார்கள்.

அவர்கள் வேண்டியது என்ன? பல காரணங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு ஜீவனத்திற்கு வேறு ஒன்றுமே கிடையாது. முழுப் பட்டினி. ஆம் பட்டினி! பட்டினி, பசி இதற்கெல்லாம் நமக்கு - நன்கு தின்று கொழித்து கொலெஸ்டிராலைக் குறைக்க காலையில் சோம்பலோடு நடை பழகுகிறோமே அந்த நமக்கு - என்னவென்று தெரியுமா?

நம் நாட்டில் இன்னமும் பல கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள். அரசியல்வாதிகளைக் கேளுங்கள். ஏழைகளின் துயர் தீர்க்க அவதாரமெடுத்தவர்கள். உணர்ச்சி பொங்க வீராவேசத்துடன் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, காரில் பவனி வந்தபின் கைத்தடிகள் படைசூழ விமானமேறிச் சென்று விடுவார்கள். பிரச்னை தீர்ந்ததா!

இரெயில் வண்டியில் நெடு தூரம் பயணம் செய்திருக்கின்றீர்களா? வண்டியில் கொடுக்கப்படும் உணவை நீங்கள் சாப்பிட்டபின் அதில் ஒட்டியிருக்கும் எச்சில் உணவுத் துண்டுகளை வழித்து உண்ணும் ஏழைச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறீர்களா! இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. வயிற்றை என்னமோ செய்கிறது. :sad:

என்று விடியும் இது போன்ற ஏழைகளுக்கு!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 392 முறை) ::

பிழைக்கத் தெரிய வேண்டும்!

மனித நேயம் :: 4 மறுமொழிகள் »

ஆம், இவ்வுலகில் புத்திசாலித்தனமாக பிழைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கோ யாரோ சொன்னார், எந்த நூலிலோ எழுதியிருக்கிறது என்று வரட்டு சித்தாந்தங்களில் மூழ்கி, தன் வாழ்க்கையையும், தன் குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுபவர் அநேகம். மக்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து நம் எதிவினையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் பிழைக்கும் வழி. :lol:

நண்பர் பிகேபி தன் வலைப் பதிவில் கீழ்க்கண்ட செய்தியை எழுதியுள்ளார். அது உங்கள் மனத்தைத் தொடும் என்று என்ணுகிறேன்!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 361 முறை) ::

ஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்

மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே "புர்"ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!

அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். "ஆகா, என்னே என் பாக்கியம்!" என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!

ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.

ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.

ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. "தோடா!" - என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

"சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்."

அவர் கண்கள் கலங்கி இருந்தன.

நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!

இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,
:: (பார்வை 340 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in