அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்!

இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:-

இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.

ஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.

எழுத்தாளர் ஜெயமோஹன் தன் வலைப்பதிவில் எழுதியுள்ள ஒரு விளக்கத்திலிருந்து பிய்த்த பகுதி இது. என்ன சொல்லவருகிறார் என்பது உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ! எனக்குப் புரியவில்லை ஐயா!

முதலில் ‘பின் நவீனத்துவம்” என்னும் அறிவுசால் குறிச்சொல்லை எடுத்துக் கொள்வோம். பரமபத சோபன படத்திலுள்ள மகாப் பெரிய ஏணிபோன்றது இந்த பரிபாஷை. நீங்கள் எதை எழுதினாலும் அதில் இந்தச் சொல்லை சகாயமாக ஆங்காங்கே தெளித்துவிட்டீர்களானால் திராவிட மற்றும் இடதுசாரி அறிவு ஜீவிகள் மத்தியிலும் பொதுவாக இலக்கியவாதிகள் குழுமத்திலும் உங்கள் மதிப்பு ஜிவ்வென்று உயர்ந்துவிடும். எங்கும் பரவலாகப் பேசப்படுவீர்கள். இத்தன்மையான வெகுஜனப் புரிதலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகளுக்கென்று உள்ள அலங்காரங்களான குர்தா, ஜோல்னாப்பை ஏதும் தேவையில்லை! நீங்கள் உங்கள் தெரிவுக்குற்கேற்ப சஃபாரி சூட் பொன்ற நாட்டு சோக்காளி உடையலங்கரங்களை மாட்டிக்கொண்டு பவனி வரலாம்!

கிழ்க்கண்ட சொற்சிதைவுகளை ஏதோவொரு வலைப் பதிவில் பர்த்தேன் – எதிலென்று நினைவில்லை. இதுபோன்று சொற்களால் சிலந்திவலை பின்னுவதும் ஒரு “பின் நவீ…” முறைதான்!

“ஒரு நீண்ட வரிசையில் பத்தவதாக நிற்கும் நீல சட்டைகாரனின் காலுக்கு அடியில் சில சித்தெரும்ம்புகள் வரிசையாக அணிவெருத்து செல்வதை மிக முக்கியமாக சொல்வதற்கு காரணம் என்னவென்றால்”

இஃதொன்றும் வஞ்சகத்தாருக்குரியதன்று-நிந்திப்பாருக்கான நிலைப்படுத்தலை இற்றுவரை ஏந்திப்பிடித்தலும்,அதன் பின்பான பராக்கிரமத்தைக் குறித்து மகுடம் சூடிக்கொள்ளக் கனவைத் தனதாக்கிக் கட்டியணைக்கும் சில வெட்டுப் பூச்சிகளுக்குச் சிறகொடிப்பதற்கான முயற்சியில் விந்தியத்துக்கு முந்தின முயற்சிகளிலொன்றென்றால் மிகையிருக்குமாவென்ன?அப்பப்ப பாடித்தானாகணுமெனுங் நல்ல மனதின் நன்றியறிதலைக் குறித்த கவனக் குறிப்பொன்றைச் சொல்வதற்குத் தகுதியுடை மாமனிதரைக்காணுமொரு வழித் தேடலில் நன்றிக்கும்-நல்ல மனதிற்கும் பாத்திரமுடையவரானவர் யார்!

இதுபோன்று எழுதினால் உங்களுக்கு உடனடியாக “பி.நவீ்” அந்தஸ்து வழங்கப்படும். இந்த நடையில் மிக முக்கியமாகக் கைக்கொள்ளவேண்டிய நெறி என்னவென்றால் அந்த வரிகளின் இடையில் கமாவோ, நிறுத்தற்குறிகளோ இலலாமல் நீண்டு நெடுகச் சென்று, படிப்பவர்களைச் சுற்றி இறுக்கமாக வலைபோல் பின்னிச் செல்லவேண்டும்! இது போன்ற “பின்-நவீ” பதிவுகளைப் பார்வையிட்ட ஒரு நபரின் இன்றைய நிலையைப் பாருங்கள்!

இந்த “பின் நவீனத்துவம்” என்னும் வஸ்து யாது, இதன் விழுமியங்கள் (இது என்னது புது பூதம்!) என்னவென்று சிறிது ஆராய்வோம். இந்தச் சொல் “Postmodernism” என்னும் buzzword-ன் ‘முழி’பெயர்ப்பு என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தமிழ்ப் “படுத்தலே” முதற்கண் அடிப்படைத்தவறு. “பின்” என்பது காலத்தை அலகாகக் கொண்டுள்ள குறிப்பா, அல்லது பின்னோக்கிச் செல்லும் அணுகுமுறையா, அல்லது பின் புறத்தில் (பிருஷ்ட பாகம் போன்றவை) பாவிக்கப்படும் நவீன முறைகளா, என்னத்தைத்தான் இது சுட்டுகிறது?

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் இந்தப் பின்னாடி, முன்னாடி தத்துவத்தைப் பற்றி என்ன பேசறாங்கன்னு பார்ப்போமா:-

  • ஒரு கருத்தை புதிய முறையில் விளக்குகிறேன் என்று சொல்வதற்கு அதனை கட்டுடைக்கிறேன் என நம்ம ஊரு பின்னவினத்துவக்காரர்கள் சொல்லப்போக இப்பொழுது கட்டுடைப்பது தான் பின்னவினத்துவம் என ஆகிவிட்டது
  • இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இணையானது ஆனால் ஒன்றல்ல.
  • கட்டுடைத்தல்(deconstructionism) என்பது கிட்டத்தட்ட reverse engineering என்பது போல எதனையும் விளக்க ,அதன் உட்பொருளைக்காட்ட , பிரித்து மேய பயன்படுத்தலாம். அதை அதிகம் பயன் படுத்திக்கொண்டது நம்ம பி.ந காரர்கள் தான்.
  • செவ்வியல் பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப் படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான்.
  • புரியாத கருமத்திற்கு பெயர் பின்நவீனம்.. ஆபாச சொற்பிரயோகமா பின்நவீனம்..இப்படி நாம் எல்லாத்துக்கும் ஒரு லேபிள் கொடுத்து பழகிட்டோம்
  • எதையாவது எழுதுங்க.. கொஞ்ச பெருக்கு புரியுது.. கொஞ்ச பேருக்கு புரியலையா.. அது சாதா நவீனம்யா…
    எழுதின உங்களுக்கு மட்டும் புரியுது வேற யாருக்குமே புரியலையா? அது முன் நவீனத்துவம்
    எழுதின உங்களுக்கே புரியலையா? அதான்யா பின் நவீனத்துவம்!

பின்ன, அது என்னத்தைத்தான் அந்த பி.ந குறிக்கிறது? என் மனத்தில் எழும் கேள்விகள் இவை:-

  1. நம்மை வளர்த்து, வார்த்து, வளமாக்குவது பெற்றோரது கடமை (நம்ப என்ன, உங்களுக்கு மகனாகப் பிறக்கணும்னு அப்ளிகேஷனா போட்டோம்? அவிங்களோட குசும்பு, நம்பளைப் பெத்துகிட்டாய்ங்க!). அதனால அது என்னமோ நமக்காக பெரிய தியாகம் செய்த மாதிரி சொல்லிக்கிட்டு, “கடைசி காலத்தில எங்களை நீந்தான் கவனிச்சுக்கணும்” என்கிறதெல்லாம் இனிமேல் நடக்காது. எந்த ஜீவராசிகளில் அதுபோன்ற நடைமுறை இருக்கிறது? ஆகையால் அவிங்களே ஒரு நல்ல முதியோர் காப்பகமாப் பார்த்து குந்திக்கிட வேண்டியதுதான், அடுத்த தலைமுறையைத் தொந்தரவு செய்யாமல் – இதுதானா இந்தப் பி.நவீயின் வேளிப்பாடு?
  2. திருமணம் செய்துகொண்டவுடனேயே கணவன் தனக்கு அடிமையாகி, தான் எப்படி நடந்துகொண்டாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல், பேற்றொரை விரட்டிவிட்டு, வாசற்படியருகேயிருக்கும் கால்மிதியிலும் கேடாகக் கிடக்கவேண்டும் என எதிர்பார்க்கும் பெண்களின் முற்போக்குப் புதுமைதானா இதன் வடிவமைப்பு?
  3. குடும்ப நல நீதிமன்றங்களில் தினமும் பதிவாகும் நூறுக்கணக்கான மணமுறிவு கேசுகள்தான் இந்தப் பின்நவீயின் அலகா?
  4. மேலே குறிப்பிட்டபடி அடிமை சாஸனத்தினுள் படியவில்லையென்றால், கனவன் மற்றும் அவனது உற்றார்மேல் ஒருசார்புச் சட்டமான 498அ பிரிவை ஏவிவிட்டு கதற அடிப்போமென்று கிளம்பியிருக்கிறார்களே, அதுதான் அந்த நவீனத்துவத்தின் உருவாக்கமா?

கொடுமை ஐயா!

சரி. இச்சொல் ஆங்கிலத்திலமைந்ததொரு சொல்லின் மொழிபெயர்ப்புத்தான் என்னும் நிலையில், அந்த தமிழாக்கமே பிழையானது என்று ஏன் சொல்கிறேன்?

விடை அடுத்த இடுகையில்!!

Leave a Reply

Your email address will not be published.