பழக்க ஒழுக்கம்

முன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு கதையில் எழுதியிருந்தார், “அந்த ஊரில் எல்லோரும் எச்சல் துப்பிக்கொண்டிருந்தார்கள்” என்று. எச்சில் துப்புவது நம் தேசியக்கடமைபோல யாரைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எப்போது துப்புவார்கள் என்று கவலைப் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் – அப்போதுதானே ஸ்பிரே தாக்கும்போது பௌன்ஸரிலிருந்து தப்பிக்க duck செய்வது போல அந்தப் பன்னீரிலிருந்து தப்பிக்கலாம்.

சரி, நீங்கள் பஸ்ஸுக்கு வெளியில் இருந்தால் மட்டும் தப்பிக்க முடியுமா? பஸ்ஸுக்கு அருகில் வந்தால் “பளிச்” சென்று விழும் கொத்திலிருந்து தப்பித்தாலும் வாந்தியிலிருந்து தப்பிக்க முடியாது. “துப்பாய தூவும் மழை”தான்!
துப்புவதிலும் பல முறைகள் உள்ளன. பல்லிடுக்கால் பிரீசசிடல், உதடுகளைக் குவித்து இரு விரல்களுக்கிடையில் பீச்சியடித்தல், காறிக் கரண்டி கன்னபின்னாவென்று துப்புதல் இது தவிர வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவை கலந்த value-added spitting!

இவற்றில் தாங்க முடியாத கொடுமை இந்தக் “காறித்” துப்புதல்தான. ஹோட்டலில் டிபன் சாப்பிடப்போனால் வாஷ் பேஸினுக்கு அருகில் உட்கார்ந்தால் தொலைந்தீர்கள். பலர் வாய்வழியே குடலில் தங்கியுள்ள அனைத்தையும் வெளிக்கொணறும் முயற்சியில் இறங்கி கர்ணகடூரமான ஓசைகளை எழுப்பி நம் குடலைப்பிடுங்கி வெளியே எறியும் உணர்வை உண்டாக்குவார்கள். அடுத்த முறை ஓட்டலுக்குச் செல்லும்போது கைகழுவும் இடத்துக்கு எவ்வளவு எட்டத்தில் உட்கார முடியுமோ அவ்வளவு தொலைவு சென்றால்தான் இந்தக் காறல், கோழை, கொப்பளிப்பு போன்ற அந்தரங்க சுத்திகரிப்பு அசிங்கங்களிலிருந்து தப்பிக்கலாம்.

Pages: 1 2 3

3 Comments


  1. அருமையாக பதிவு எஸ்.கே. பல நேரங்களில் பேருந்திலும் உணவகங்களிலும் அனுபவிக்கும் துன்பம் இது. சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு சில விஷயங்களை பழக்கப்படுத்த வேண்டும்.

    நான் கொஞ்சம் அதிகமாக பழகிவிட்டேன் போல, என் காலை யாராவது மிதித்தால் கூட நான் “ஸாரி” சொல்கிறேன்.


  2. பாவம் கிச்சு. ரொம்பதான் கஷ்டப் பட்டு இருக்கிறீர்கள்! நானும் உணவகங்களுக்குச் சென்றால் கைகழுவுமிடம் அருகே இனி அமரமாட்டேன். நான் அதிர நடந்தால் பூமிக்கு வலிக்குமோ என நினைப்பவன். எனவே நான் துப்பலில் இறங்கமாட்டேன். தைரியமாக நீங்கள் அருகே வரலாம்!


  3. துப்பறதுல இத்தனை விதம் இருக்குன்னு எனக்கு இப்பதான் தெரியும். னல்லா எழுதரீங்க. ஆனா இந்த வடமொழி தாக்கத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே. அதிகமா இருக்கோன்னு தோணுது.

Leave a Reply

Your email address will not be published.