‘chennai’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

வசந்தத்தின் மேலேறிய திருத்தலம்

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

நிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்!

Sacred heart on a full stomach

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1038 முறை) ::

பொஸ்தகக் கண்காட்சி – 2009

புத்தகப் பரண் :: 3 மறுமொழிகள் »

இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம்.

அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி டைப்பில் கூட!

ஓலைச்சுவடி என்றும் ஒரு புத்தகம் நிறைய விற்றுக் கொண்டிருந்தது – ”தளியோலா” என்னும் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம்.

சே கவேராவும் நிறைய கண்ணில் பட்டார். அவரைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட அந்த மீமில் ஆட்பட்டிருந்தனர்!

நான் நேரம் (சில இடங்களில் பணமும்) செலவிட்ட ஸ்டால்கள்:

ரிசர்வ் வங்கி
பி.எஸ்.என்.எல்
கீதா பிரஸ்
தினமணி
சென்னை பல்கலைக் கழகம்
விஜயபாரதம்
நிவேதிதா பதிப்பகம்
Asian Educational Services (அபிதான சிந்தாமணி)
இன்னும் சில…

பளிரென்று கண்ணைப் பறிக்கும் விதமாக நூல்களை வடிவமைத்து அளிப்பவர்கள் (நான் பார்த்தவரை):

கிழக்கு (வரம்…etc)
ஆனந்த விகடன்
உயிர்மை
இராமகிருஷ்ண மடம்

மற்றபடி ஒரே மாதிரி ஸ்டால்கள். ஒரே மாதிரி புத்தகங்கள்.

மூன்று மணி நேரத்திற்குமேல் சுற்றிவிட்டு ஒன் பாத்ரூம் போகலாமென்றால் கண்காட்சிக்கு வெளியே வந்து காடு மலை வனாந்திரமெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நல்ல வேளை அப்போது மழை பெய்யவில்லை.

நான் சென்றது திங்கட்கிழமையாதலால் ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் கேண்டீனில் நல்ல கூட்டம் (குட்டி இட்லி, பானி பூரி, ஃப்ரெஞ்ச் ஃபிரை, தோசை, போளி, ஃபிரைடு ரைஸ்…). கால் அசந்து உட்காரலாமென்றால் நாற்காலி ஏதும் காலி இல்லை. ஆள் இல்லாத இருக்கைகளில் கூட பைகளைப் போட்டு இடம் பிடித்துவிட்டு டோக்கன் வாங்கச் சென்றிருந்தனர் ஆண்கள்; பெண்கள் அனைவரும் இருக்கை நிறைந்து அமர்ந்திருந்தனர்!

புதிய தமிழ் ஒன்றை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அறிஞர் ஒருவர் அளிக்கும் சொற்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். அவைகளின் பொருள் புரிந்து எனக்குச் சொன்னால் உங்களுக்கென்று மலிவு விலையில் 5 ரூபாய்க்கு புத்தகக் கண்காட்சி நுழைவுச் சீட்டு ஒன்று கிடைக்கும்.

பொத்தக வியந்தை
தளி
படி
வாழ்வரை

இப்போது காட்சிகள் இரண்டு:

சந்தை பற்றிய விவரங்களும் சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது)

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 947 முறை) ::

சென்னை செம குப்பை

சிங்காரச் சென்னை :: மறுமொழி இனிமேல்தான் »

இந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 964 முறை) ::

ஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்

மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே "புர்"ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!

அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். "ஆகா, என்னே என் பாக்கியம்!" என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!

ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.

ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.

ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. "தோடா!" – என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

"சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்."

அவர் கண்கள் கலங்கி இருந்தன.

நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!

இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,
:: (பார்வை 835 முறை) ::

சென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்?

சிங்காரச் சென்னை :: 9 மறுமொழிகள் »

இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.

எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – "சூடு" வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). "பட்"டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் "no-holds-barred" event-ல் தங்கப்பதக்கம் வாங்கி "வையகமெல்லம் வாரியிறையடா தமிழா" என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது. கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!

இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன. ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், "நடைபாதை என்றால் என்ன" என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1609 முறை) ::

 

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 48 access attempts in the last 7 days.