‘நல்வாழ்வு’ வகைசார்ந்த இடுகைகள்

சிறு விஷயங்களில் கவனம் தேவை!

நல்வாழ்வு :: மறுமொழி ஒன்று »

சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் போடுவது, ஷூ லேஸ்களை சரியாகக் கட்டுவது, சட்டையை பாண்டிற்குள் "டக் இன்" செய்தால் அதனை நேர்சீராகச் செய்வது - இப்படி பலவகை சாதாரணச் செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுக்காமல் செய்கிறோம். ஆனால் உணமையில் அவை மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அறியாமலிருப்பது நமக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் நாம் அறிந்தோமில்லை!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம் நடையுடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் உள்ளார்கள் என்று அறியும்போது நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கும். நாம் நம்மையறியாமல் செய்யும் (sometimes due to nervous habits) அங்க சேஷ்டைகளை மக்கள் கூர்ந்து கவனித்து கிண்டலடிப்பது நமக்கு பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் நாம் சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முன்றாம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து கேலி செய்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த கதிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

சாதாரணமாக இத்தகைய உரையாடல்களை அன்றாடம் செவிமடுக்கிறோம்:

"அவரா, எப்போதும் பங்கி மாதிரி தொளதொள சட்டை போட்டுகிட்டு வருவாரே, அவர்தானே"
"அந்த மூக்கு நோண்டிதானே"
"நேத்து அந்த 'நாக்கு துருத்தி' வந்திருந்தான்ய்யா"
"ஏனய்யா, அந்த ஆளு தலையை சீவவே மாட்டானா? எப்ப பாத்தாலும் இப்பத்தான் படுக்கையிலேருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கான்"

இதையெல்லாம் விடுங்க. நீங்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தாலோ அல்லது அங்கு சென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராயிருந்தாலோ நீங்கள் கட்டாயம் உங்கள், டிரெஸ், உடலசைவு, அனிச்சைச் செயல்கள் இவற்றில் முழுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் செயல்களை வைத்தே உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டிவிடுவார்கள். அதுவும் இப்போதைய இண்டெர்நெட் உலகில் தொழில்நுட்பத்தை வைத்தே உங்களை பாடுபடுத்தி விடுவார்கள்.

என் நண்பர் ஒருவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி விட்டு வந்தார். அவர் ரொம்பப் பேசி "கிரைண்டு" பண்ணினாரோ, அல்லது பசங்களுக்கு வெறுப்பேத்தரமாதிரி ஏதேனும் அறிவுரை கொடுத்துவிட்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் சென்று வந்த ஓரிரு நாட்களில் யூடியூபில் (YouTube) ஒரு வீடியோ படத்தை வலையேறிவிட்டார்கள், அந்த கல்லூரி மாணவ மணிகள். அந்த வீடியோ குறும்படத்தில், என் நண்பர் கையைச் சொறிவதும், பிருஷ்ட பகத்தில் சொறிவதும், மூக்கிலிருந்து தங்கப் பாளம் தோண்டுவதும், மேலும் அவர் முகத்தில் தோன்றிய பலவித அஷ்டக் கோணல்களும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டன!

இன்னொருவர் தன் உறவினரின் பையனைச் சந்திக்கச் சென்றார். அவன் ஒரு பேச்சிலர். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருந்தான். அவனுடன் ஒரிரு நாட்கள் தங்கியிருந்து சென்றார். பாவம், அவர் குடும்பஸ்தர், பலவித கவலைகள். லாட்ஜிலிருக்கும் காமன் பாத்ரூமுக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு ஏதோ நினைவில் ஃபிளஷ் செய்யாமல் சென்று விட்டார். பாவம், அந்தப் பையன். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதம் இதை வைத்தே காய்ச்சிவிட்டனர், அந்த லாட்ஜில் தங்கியிருந்தவர்கள். அதனால், மகாஜனங்களே, பாது ரூமிற்குச் சென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஃபிளஷ் செய்து விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனைவியே உங்களை கிண்டல் செய்வார்!

ஆமாம், ஏதோ இழப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே! அவை அடுத்த இடுகையில்…!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 350 முறை) ::

பண்பாடு

நல்வாழ்வு :: 5 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் How responsible are we towards the society?

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 349 முறை) ::

இணையம் என்றொரு போதை!

கணினி, நல்வாழ்வு :: 3 மறுமொழிகள் »

கணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா? இல்லையே.

சிறு குழந்தைகள் பலருக்கு கவனக் குறைபாடு (Attention Deficit Disorder) தோன்றுவதுண்டு. கவனம் ஓரிடத்தில் நில்லாமல் அலை பாய்ந்துகொண்டே யிருத்தல். பிறகு சிறிது நாட்களில் அவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால் இணையத்தில் உலா வருவதால் நமக்கு ஏற்படும் கவனக் குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புக்களே குறைவு என்று தோன்றும் நிலை இருக்கிறது. ஒரு தளத்தில் மேயத் தொடங்கியவுடனேயே அங்கே "பளிச்" என்று மின்னும் ஒரு சுட்டியை கிளிக்கென்று கிள்ளி விட்டு ஒரு வீடியோவைக் காணத் துடிக்கிறது மனம். அங்கே சென்றால் வீடியோ கீழிறங்க நேரம் பிடிக்கிறது (சில சமயம் கழுநீர் மாதிரி கூட இறங்கும்). அந்த நேரத்தில் "டிங்" என்று ஒரு சத்தம் யாஹூவிலிருந்தோ, ஜீடாக்கிலிருந்தோ - அவ்வளவுதான் கவனம் சிதறி வேறிடத்துக்குத் தாவி விட்டது! இப்படி தளத் தவளைகளாய் தத்திக் கொண்டிருந்தால் முழுமையான செய்தியை, அறிவைப் பெறுவதென்பதேது!

இப்படி கிளிக்கிட்டுக் கொண்டே செல்லும்போது இந்த "வெட்டி புரௌசிங்"கிலேயே நெரம் கழிந்து விடுகிறது. இரண்டு, மூன்று மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்ட பிறகு சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை யென்பது தெளிவாகும்.

நம்மை இன்னும் ஆழமாக இந்தப் புதை மணலில் உள்ளிழுத்துக் கொண்டிருப்பவை, "ப்ளாக்" என்றழைக்கப்படும் வலைப் பதிவுகள்தான்! ஐந்து நிமிஷத்தில் பதிவை அமைத்து விட்டு (Push-button Publishing), ஏதேதோ மனதில் பட்டதைக் கொட்டி விடுவார்கள். அதில் இன்னும் பலர் சென்று அங்கேயிருக்கும் கருத்துப் பெட்டியில் அவர்கள்தம் மேதா விலாசத்தைக் காண்பிக்க ஏதோ உளறி வைப்பார்கள். அதோடு நிற்பதில்லை. இணையத்தின் பெயரறியா நிலையைப் (anonymity) பயன்படுத்தி ஒருவருக்கொருவர் கண்டபடி திட்டிக் கொண்டிருப்பர். இதை சுவாரசியமாக ரசித்துப் படித்துக் கொண்டிக்கும் சிலர் அரிப்பை அடக்க முடியாமல், நாய் கரண்டுக் கம்பத்தைக் கண்டால் "சிர்ர்க்" என்று சிறிது பீய்ச்சுமே அதைப்போல் எதோ இரண்டு வார்த்தைகள் சிந்தி விட்டுச் செல்வர். அவ்வளவுதான். மனம் அங்கேஏயே சுற்றும். நம் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினை வந்திருக்கிறதா பார்ப்போமே"!

வலைப் பதிவு எழுதுவோரும் இப்படித்தான். ஏதோ மேதாவித்தனமாக எழுதுவதாக என்ணிக் கொண்டு இரண்டு பத்தி கிறுக்கி விட்டு, கூகிளில் தேடி இரண்டு படங்க்களையும் போட்டுவிட்டு. சிலந்தி வலை பின்னி விட்டுக் காத்திருப்பதுபோல் யாராவது மறுமொழி ("பின்னூட்டம்" என்றும் சிலர் அழைப்பர். ஆனால் அந்தச் சொல் "ஒரு மாதிரி" பொருளைத் தோற்றுவிப்பதால் அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்). இடுவார்களா ஏன்று காத்திருப்பது சிலர் வழக்கம்.

எப்படியோ நேரம் விரயமாகிறது, உருப்படியாக ஏதும் செய்யாமல். இணையத்தில் விஷயங்கள் கொட்டிக் கிடப்பது உண்மைதான். ஆனால் நம்மால் அந்தத் தகவல் ஒன்றையும் நிதானமாகப் பொறுக்கி உள்வாங்கத்தான் இயலவில்லை.

முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு "ஹாயா"க எங்காவது போய் ஒவ்வொரு பக்கமாகப் படித்து, அதில் ஆழ்ந்து, அந்த உணர்வுகளைத் துய்த்து, அந்த கதா பாத்திரங்களாகவே மாறி, கற்பனையில் துய்ந்து … ஆகா அந்த அனுபவம் போல் வருமா!

சரி சரி . நேரமாகி விட்டது. எனக்கு இன்னும் இரண்டு வலைப் பதிவுகள் எழுதியாக வேண்டும்!

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 524 முறை) ::

வாரியாரின் மணிமொழிகள்

நல்வாழ்வு :: 2 மறுமொழிகள் »

கிருபானந்த வாரியார்திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் "கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி" எடுத்த "மணிமொழிகள்" (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:

  • இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.
  • பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.
  • அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.
    • பார்த்துக் கெட்டது பிள்ளை
    • பார்க்காது கெட்டது பயிர்
    • இட்டுக் கெட்டது காது
    • இடாது கெட்டது கண்
    • கேட்டுக் கெட்டது குடும்பம்
    • கேளாது கெட்டது கடன்
    • உண்டு கெட்டது வயிறு
    • உண்ணாது கெட்டது உறவு
    • கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்
    • திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்
    • ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்
    • பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்
    • கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்
    • நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்
  • சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே
  • மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.
  • வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது
  • அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.
  • சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது
  • விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.
  • கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் - இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.
  • மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.
  • தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.
  • நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.
  • ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.
  • இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்
    மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்
    தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்
    வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்
  • இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் - இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
  • ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.

அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 428 முறை) ::

ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யலாமே!

நல்வாழ்வு :: 2 மறுமொழிகள் »

வேண்டாமே இந்த வேலை!

குறிச்சொற்கள்: ,
:: (பார்வை 396 முறை) ::

காணுமிடமெல்லாம் கழிப்பிடமா?

நல்வாழ்வு :: 5 மறுமொழிகள் »

கழிப்பிடம்தேடி களிப்பீர்! எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன?

இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!!

படம் - நன்றி: Mike Jolley

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 428 முறை) ::

நாலரைப் பாலா நச்சுப் பாலா!

நல்வாழ்வு :: 2 மறுமொழிகள் »

aavin "வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு" என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று "வெளுத்தவர்கள்" இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை!

cow இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம் - இங்கு பால் என்று நாம் குறிப்பிடுவது பசு மற்றும் எருமைப் பாலைப் பற்றித்தான் - புலிப்பால், ஆட்டுப் பால், தாய்ப்பால் இவைகளைப் பற்றியல்ல!

child-milk அடிப்படையில் பால் அருந்துவதே மனிதனுக்குக் கெடுதல் என்று கூவி பால்காரர்கள்தம் வாழ்வாதாரத்தில் கைவைக்க முயல்வோர் பலருண்டு பாரில்! அந்த பால் எதிர்ப்புக் கழகத்தார்களிடம் "குறையென்ன கண்டீர் எந்தம் மக்கள் அன்றாடம் பருகிடும் ஆவின் பாலில்?" என்று கேட்போமா:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 478 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in