துளித்துளி

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

சினிமா

2

Super Singer Priyanka

"சூப்பர் சிங்கர் ஜூனியரா"க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா தற்போது "அவன் இவன்" திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு சிறந்த மெலடி சாங் பாடியிருக்கிறார். அதைக் கேளுங்கள்:

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சார்ந்த வகை: இசை :: நாள்: . 2 மறுமொழிகள்#

2

"பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்."

மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!

இதோ அந்தக் கேள்விகள்:-

  1. போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?
  2. பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?
  3. மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?
  4. ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?
  5. ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?
  6. காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?
  7. கென்னடியைக் கொன்றது யார்?
5

"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

சார்ந்த வகை: இசை :: நாள்: . 5 மறுமொழிகள்#