‘life’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

வாரியாரின் மணிமொழிகள்

நல்வாழ்வு :: 3 மறுமொழிகள் »

கிருபானந்த வாரியார்திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் "கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி" எடுத்த "மணிமொழிகள்" (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:

  • இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.
  • பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.
  • அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.
    • பார்த்துக் கெட்டது பிள்ளை
    • பார்க்காது கெட்டது பயிர்
    • இட்டுக் கெட்டது காது
    • இடாது கெட்டது கண்
    • கேட்டுக் கெட்டது குடும்பம்
    • கேளாது கெட்டது கடன்
    • உண்டு கெட்டது வயிறு
    • உண்ணாது கெட்டது உறவு
    • கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்
    • திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்
    • ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்
    • பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்
    • கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்
    • நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்
  • சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே
  • மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.
  • வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது
  • அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.
  • சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது
  • விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.
  • கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் – இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.
  • மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.
  • தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.
  • நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.
  • ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.
  • இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்
    மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்
    தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்
    வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்
  • இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் – இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
  • ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.

அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 1389 முறை) ::

பிழைக்கத் தெரிய வேண்டும்!

மனித நேயம் :: 4 மறுமொழிகள் »

ஆம், இவ்வுலகில் புத்திசாலித்தனமாக பிழைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கோ யாரோ சொன்னார், எந்த நூலிலோ எழுதியிருக்கிறது என்று வரட்டு சித்தாந்தங்களில் மூழ்கி, தன் வாழ்க்கையையும், தன் குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுபவர் அநேகம். மக்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து நம் எதிவினையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் பிழைக்கும் வழி. :lol:

நண்பர் பிகேபி தன் வலைப் பதிவில் கீழ்க்கண்ட செய்தியை எழுதியுள்ளார். அது உங்கள் மனத்தைத் தொடும் என்று என்ணுகிறேன்!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 781 முறை) ::

பறப்பு, பரபரப்பு

நல்வாழ்வு :: மறுமொழி இனிமேல்தான் »

ஏனிந்த அவசர வாழ்க்கை? ஏன் இவ்வளவு பரபரப்பு?
நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன?
நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும்?

"அடுத்த வீட்டுப் பெண்"ணில் வரும் "எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது அப்ப அப்போ அப்படி அப்படிதானே நடக்கும்" என்கிற வசனம் என் மனத்துக்கு மிக்க இசைவானது! (யார் அந்த நடிகர் – பக்கிரிசாமியா?)

வாழ்வில் அவசரமே கூடாது என்கிற இந்த எண்ண அலையை பிறிதொரு தொடர்பில் என் ஆங்கில வலையின்பால் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் கோனேரிராஜபுரம் சுப்புணி. மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 1285 முறை) ::

வேலை வேண்டுமா? விழியைத் திறந்து வைத்துக்கொள்!

கணினி :: மறுமொழி ஒன்று »

தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது "கட்டுக்கட" மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.
புரிந்தவர் சென்றனர், வென்றனர்! Electronic Arts

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 905 முறை) ::

 

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 7453 access attempts in the last 7 days.