2005

இது ஒரு அவசரப் பதிவு. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை – தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது. […]

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது. http://india.gov.in/ நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில […]

சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். […]

இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் 130-வது பிறந்த நாள். ஒரு தலை சிறந்த நிர்வாகி, நாட்டுப்பற்றே மூச்சாக வாழ்ந்த விவசாயி – அவருடைய தொண்டினை இன்று நினைவு கூர்வோம். நம் பாரத நாட்டின் […]

வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் […]

இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம். சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் “குடிசை”, […]

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google’s aggregator service). இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே […]

ஏனிந்த அவசர வாழ்க்கை? ஏன் இவ்வளவு பரபரப்பு? நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன? நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும்? “அடுத்த வீட்டுப் பெண்”ணில் வரும் “எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது […]

பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் […]

என் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சித்தேன். ஆனால் அந்த எம்பி3 காணாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் பாடலை நான் விடவில்லை! இந்த […]