இப்போதெல்லாம் தமிழ்மணத்தால் திரட்டப்படும் வலைப் பதிவுகள் பலவற்றில் பிராமணர்களை தரக் குறைவாக தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வகை தொகை இல்லாமல் வாய்கூசும் சொற்களால் ஏசப்படுகிறது. இது தவிர எனையோர் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் பல பெயர்களிலும் பெயரிலிகளாகவும் நுழைந்து இன்னும் பல மடங்கு தரம் தாழ்ந்த முறையில் பார்ப்பன அர்ச்சனை நடக்கிறது. இவற்றை சிலர் மட்டுறுத்தல் செய்கின்றனர். ஆனால் பலர் அப்படியே விட்டுவிடுகின்றனர். பார்ப்பானைத்தானே திட்டுகிறார்கள், நமக்கென்ன என்கிற எண்ணமா அல்லது இவ்வாறு திட்டும் நபர் யாரென்று பலருக்குத் தெரியுமென்பதால் (அவருடைய எழுத்தை மட்டுறுத்தல் செய்தால் தாமும் தம் குடும்பத்தாரும் சந்தி சிரிக்கும் அவலத்தை சந்திக்க நேரிடும் என்பதால்) எதற்கு வம்பு என்கிற தற்காப்பு அணுகுமுறையா, நான் அறியேன்.
சரி. இதுபோன்று பதிவுகளை எழுதுபவர்கள் உண்மையில் பார்ப்பனர்கள்மேல் வெறுப்பு கொண்டவர்களா, அல்லது பார்ப்பன ஆதிக்க வெறியினால் பாதிக்கப்பட்டவர்களா என்கிற கேள்வியை கேட்டோமானால் அதற்கு பதில் அத்தகைய இடுகைகளைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நீங்கள் இவற்றில் பொதுவாக ஒரு pattern-ஐக் காணலாம். அதாவது, பார்ப்பன வசை பாடுதலும், இந்துமத எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஓரிழையாக செல்வதைக் காணலாம். இந்து மதக் கடவுட்களையும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிஹாஸங்கள் போன்றவற்றை திரித்து மனம் போனபடி விமரிசித்து, அதனூடே இதெல்லாம் பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், ஏனைய தமிழர்களையும் இரண்டாம்தர குடிகளாக நடத்துவதற்கான சூழ்ச்சிகள் எனக் கொண்டு செல்வார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். அதாவது, முதலில் பார்ப்பானைத் திட்டு; அனைத்து பிரச்னைகளுக்கும் அவனையே காரணமாக்கு (இந்தியா பங்களாதேஷிடம் தோற்றது உட்பட). சரி, பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்தாயிற்றா, பின் இந்து மதம் பார்ப்பனருக்காக, பார்ப்பனரால் தோற்றுவிக்கப்பட்ட மதம், பார்ப்பனரல்லாத ஏனைய சாதியினருக்கும் இந்து மதத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற வாதத்தை நிலைநிறுத்த முயற்சி செய் – இதுதான் அவர்களின் முயற்சி. உண்மையில் அவர்களுக்கு பார்ப்பனர்மேல் யாதொரு வெறுப்பும் கிடையாது. இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சிலரால் ஏவப்பட்டு இவர்கள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்கிற அச்சம் எழுகிறது.
ஆனால் இவர்களின் இத்தகைய முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்று பார்க்க எண்ணினால், ஒரு முறை ஏதாவதொரு கோவிலுக்கோ, சமயச் சொற்பொழிவுக்கோ, திருவிழாவுக்கோ சென்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் "ஜேஜே" என்று கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் பன்மடங்கு பெருகி வருவதைக் காண முடிகிறது.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: மனித நேயம் :: நாள்: மா 19th, 2007. 38 மறுமொழிகள்.
தற்போது சக பதிவாளர்கள் பலர் பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என்று கூச்சலிடுகின்றனர். அந்த வஸ்து என்ன என்பது எனக்கு சிறிதளவும் புரியவில்லை. பிராமணர்களின் தற்போதைய நிலை, அவர்களின் எண்ணப்போக்கு இவை எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக சென்ற பதிவில் எழுதிவிட்டேன். பலரும் பின்னூட்டங்களில் மேலதிக விவரமும் தந்துள்ளனர். சரி, இவர்கள் பார்ப்பனர்கள்மேல் என்னதான் பழி சுமத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அத்தகைய துவேஷ பதிவுகளுக்குச் சென்றேன். அவர்கள் மொத்தத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்:
1. பார்ப்பனர் ஒருசுரண்டல் வர்க்கம். அவர்கள் மற்றவர் உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுக்கிறார்கள்.
2. அதென்ன பார்ப்பனர் மட்டும்தான் கோயிற்களில் அர்ச்சகராக இருக்கவேண்டுமா? அதுவும் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் அர்ச்சனை செய்யவேண்டுமா? இதென்ன அராஜகம்?
ஒவ்வொன்றாக அலசுவோம்.
முதல் பழி அர்த்தமற்றது. அபாண்டமானது. பார்ப்பனர்கள் யாரை சுரண்டுகிறார்கள, எவ்வகையில் சுரண்டுகிறார்கள்? அவர்கள் என்ன மொத்த வியாபாரிகளா? ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலாளிகளா? பெரும் நிலச்சுவாந்தார்களா? கேட்ட பணத்தை கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் "சுபாரி" காண்டிராக்ட் போடும் D-கம்பெனியா? ஆட்டோவில் வரும் கும்பலா? மாமூல் தாதாக்களா? இவர்களால் சுரண்டப்படுவர்கள் யார்?
ஓகோ, புரிகிறது. திருமணம் முதலிய சடங்குகளில் மந்திரம் சொல்லி பிழைப்பதைச் சொல்கிறார்களோ? ஐயா, தச்சு வேலை இருந்தால் கார்ப்பெண்டரைக் கூப்பிடுகிறீர்கள்; பைப் லீக்கானால் பிளம்பரைத் தேடுகிறீர்கள்; சுவிச் ஷாக் அடித்தால் எலெக்ட்ரீஷியனை விளிக்கிறீர்கள். அதைபோல் சடங்குகள் செய்விப்பதற்கு "ஐயரை"க் கூப்பிடுகிறீர்கள். அவருடைய வேலைக்கு ஒரு கூலி கொடுக்கிறீர்கள். அச்சமையம் நீங்கள் முதலாளி, அவர் தொழிலாளி. அதுவும் நீங்கள் விருப்பப்பட்டு அவரை அழைத்தால்தான். ஏன், ஐயர் இல்லாமல் சடங்குகளை நீங்களே செய்யக்கூடாது? ஏன் தமிழிலேயே ஓதக்கூடாது? தற்போது ஊருக்கு ஊர் சமஸ்கிருத வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. பலதரப்பட்ட மக்களும் பயின்று வருகின்றனர் (முஸ்லிம் பெண்கள் உட்பட). திருச்சியில் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் கூறினார், அவர் இந்த ஆண்டு 65 பேரை தேர்வுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் இரெண்டு பேர்தான் பிராமணர்கள். நீங்களும் படியுங்கள். சடங்கு மந்திரங்களை தமிழாக்கம் செய்து மக்களுக்கு அளியுங்கள். பார்ப்பானைத் திட்டும் வீரத்தை ஆக்க ரீதியில் செயலில் காட்டலாமே! ஏன், தேவார திருவாசகங்களை ஓதி சடங்குகளை நடாத்தலாமே.
முன்பெல்லாம் இதுபோல் பிராமணரல்லாதோர்களின் சடங்குகளை செய்து கொடுப்பவர்களை "பஞ்சாங்கக் காரர்கள்" என்று அழைப்பார்கள். அவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினர். இவர்களில் பெரும் பகுதியினர் தெலுங்கு பேசுபவர்கள். ஆனால் தற்போது எல்லோரும் ஈடுபடுகிறார்கள்- கோயில் அர்ச்சகர்கள் உட்பட.
பிராமணர்களில் பலபேர் இதுபோல் "ஐயரை" (அது ஒரு professional name) கூப்பிடுவதில்லை. (இவர்களை "வாத்தியார்", "வைதீகர்", "புரோகிதர்" என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார்கள்.) என்னைப் போன்ற பலர் மென்தகடு மூலம் வேலையை முடித்துக் கொள்கிறார்கள். மேலும் வேலைக்குப் போகும் பரபரப்பு மிகுவதால், சீக்கிறம் முடிந்தால் போதும் என்கிற எண்ணம்தான் மேலோங்குகிறதே தவிர, சிரத்தை யாருக்கும் இல்லை. அதனால் புரோகிதர்கள் சிலர் எல்லாவற்றையும் "காண்டிராக்ட்" முறையில் செய்துவிடுகிறார்கள். திதி (சிரார்த்தம்) செய்யவேண்டுமா, இவ்வளவு ரூபாய் கொடுங்கள், சமையல், மந்திரம், சாமக்கிரிகள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து உங்களுக்கும் சாப்பாடு போட்டுவிடுகிறேன். இப்படித்தான்.
இதில் சுரண்டல் எங்கிருந்து வந்தது? புரியவில்லை. கடந்தகாலத்தில் சுரண்டினார்கள் என்று நீங்கள் ஆரம்பித்தால், இலங்கை நம் நாட்டின்மீது படையெடுக்கவேண்டியதுதான். ஏன்? பின்ன, ராமர் இலங்கை மீது படையெடுத்தாரே! நாம் என்ன செய்யலாம்? ஆங், இங்கிலாந்து மேல் போர் தொடுக்கலாம்!!
நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நோக்குங்கள். பழங்கதை பேசி வெறுப்புணர்ச்சியை பயிரிட்டு வளர்த்து மக்கள் மனத்தை கெடுக்காதீர்கள். யாரையாவது திட்டவேண்டுமா, உடனே அவரை "பார்ப்பன பன்னாடை" என்று ஆரம்பிக்கிறார்கள். சிந்தி தாகூரான அத்வானியும், மராட்டிய தாகுர் வம்சத்தைச் சேர்ந்த பால் தாக்ரேயும் இவர்கள் கணக்கில் பார்ப்பனர்கள். ஆனால் இராமாயணம் பிரகாரம் பிராமணனான இராவணன் மட்டும் திராவிடன். க்ஷத்தியரான இராமன் பிராமணன். என்ன அறிவுக் கொழுந்துகளய்யா! திட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களுக்கு வகைதொகையே தேவையில்லை.
சரி, இப்போது இரண்டாது குற்றச்சாட்டுக்கு வருவோம்.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: மா 29th, 2007. 9 மறுமொழிகள்.
தமிழ்மணம் நடத்தும் வலைப்பதிவிதழ் பூங்காவை இதுவரை நான் பிரட்டிப் பார்த்ததில்லை. சமீபத்தில் அந்த இதழில் நடந்துவரும் தேசிய எதிர்ப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பற்றி ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியுள்ளதைப் படித்தபின் சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது.
முகப்பிலேயே கண்ணில் பட்டது ஒரு சிறப்புப் பேட்டி மற்றும் சிறப்பு ஒலிப்பேழை (podcasting). முனைவர் திருமுருகன் அவர்களின் இசைத்தமிழ் பற்றிய பேட்டி வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி ஆசிரியர் குழு எழுதியுள்ள அறிமுகத்தில் இவ்வாறு காணப்படுகிறது:
முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார்.
ஒலிப்பேழையை இயக்கினால், திருமுருகன் அவர்கள் தெளிவான, சற்றே ஈழத்தின் சாயல் அடிக்கும் தமிழில் அரிய பல தகவல்களைத் தருகிறார். ஆனால் அவர் முதலில் கூறியுள்ளது என்னவென்றால் சங்க காலத்தில் "நெய்வளம்" என்றழைக்கப்பட்ட பண் தேவார காலத்தில் "நட்டபாடை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது என்பது. அதன் ஸ்வரங்களை பாடிக்காண்பித்து இன்றைக்கு அதே பண்ணை தமிழர்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதன் இப்போதைய பெயர் "கம்பீர நாட்டை". அந்த இராகத்தில் "ஞான விநானயகனே" என்ற பாடலின் பல்லவியையும் பாடிக் காண்பிக்கிறார்; சில திரைப்படப் பாடல்களையும் பாடிக்காண்பிக்கிறார். மேலும் செஞ்சுருட்டி, மத்யமாவதி போன்ற இராகங்கள் சில ஸ்வரங்களை மாற்றி வெவ்வேறு புது இராகங்களாக எவ்வாறு உண்டாகிறது என்பதையும் விளக்குகிறார். தாளங்களின் இப்போதைய பெயர்களையும் அவற்றின் முந்தைய பெயர்களையும் விவரிக்கிறார். ஆனால், எங்கையுமே பூங்கா ஆசிரியர்களின் கூற்றுப்படி "எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டன, அதன் பின்னணி என்ன" என்று விவரிக்கவில்லை. திருமுருகன் அவர்கள் மிகுந்த அறிவாற்றலுடனும் முதிர்ச்சியுடனும் யார்மனதும் நோகாதவண்ணம், எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி நடந்ததை மட்டும் கூறியிருக்கிறார்.
மேலும் "இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?" என்று அவர் விளக்கியுள்ளதுபோல் அறிமுகத்தில் கண்டிருக்கிறது. ஆனால் அதுபோன்று எதனையும் அவர் கூறவில்லை.
அடுத்தபடியாக மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: மா 30th, 2007. 10 மறுமொழிகள்.
நிறைய பேர் நம் கிரிக்கெட் டீமுக்கு வேறுவேறு வேலைகளைக் கொடுத்து கௌரவித்துவிட்டார்கள்.
நாமும் எதாவது புதிதாக படம் காட்டலாமே என்று எண்ணிய வேளையில் கிடைத்தது இது:
அந்தப் படத்தை இப்போது காணோம்!
அதனாலென்ன! கொஞ்சம் பொறுங்கள். வேறு கிரிக்கெட் பற்றி ஜோக் படங்கள் கிட்டாமலா போய்விடும்!
மீண்டும் வருக!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஏப் 5th, 2007. மறுமொழி இடுக.
என் நெஞ்சை நெகிழச்செய்த நிகழ்ச்சியொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ஒருநாள் மாலை என் அண்டைவீட்டார் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு நான் கட்டாயம் வரத்தான் வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அதுவும் உடனே கிளம்பவேண்டுமென்ற கட்டளை வேறு. என் சமீபத்திய உடல்நிலை பின்னடைவுக்குப்பின் நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதையும் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து வருகிறேன். ஆனால் அந்த நண்பர் மிகவும் வற்புறுத்தியதாலும், இன்ன நிகழ்ச்சி என்பதை சஸ்பென்சாகவே வைத்திருந்ததாலும், சென்றுதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். ஒரே பிரச்னை: நிகழ்ச்சி அரங்கில் எனக்கு ஒவ்வாத வகையில் ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால் என்ன செய்வது என்ற விசனம் மட்டும் உறுத்திக் கொண்டிருந்தது.
அங்கு எனக்கு சரியான இருக்கை கிடைத்ததால் யாதொரு பிரச்னையுமின்றி அமர்ந்திருந்தேன். அது ஒரு பள்ளி நடத்திய மாணவர்களின் கலை நிகழ்ச்சி. அந்தப் பள்ளி மனநலம் குன்றிய குழந்தைகளுக்கானது (special children). ஆண்களும் பெண்களுமாக சுமார் 25 குழந்தைகள் பாட்டு, நாடகம், நடனம் என்று பலவித நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தனர். சில மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஒரு பெண் நடனமாடும்போது கூடவே ஒரு ஆசிரியை மிக அருகில் நின்று எந்த நேரமும் அந்தப் பெண்ணை பிடித்துக் கொள்ளத் தயாராக இருந்தார். அதற்குக் காரணம் சென்றமுறை இதுபோல் நடனமாடும்போது அந்தப் பெண் திடீரென்று தன் உடைகளை மேடையிலேயே களைந்துவிட்டு ஓடத் தொடங்கியதாக அறிந்தேன். ஒரு பையன் (ஒரு ஆள் என்றே கூறலாம் – 30-35 வயதிருக்கும்) ஹார்மோனியம் வாசிக்க ஆரம்பித்தான். ஆனால் பாதியிலேயே நிறுத்தி விட்டான். எதிரே என்ன தடை இருக்கிறது என்று கவனியாமல், இடித்துக் கொண்டும் தடுமாறிக்கொண்டும் செல்லத் தொடங்கினான். இப்படி சில நிகழ்வுகள்.
அந்தக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க என் மனம் பாரமாகி, தொண்டையில் ஏதோ அடைக்கிறார்ப்போல் இருந்தது. அந்த பெண் குழைந்தைகள் பெரியவளானபின் எப்படி சமாளிப்பார்கள் என்கிற எண்ணம் என்னை அழுத்தியது. ஏனெனில் அவர்கள் Autism என்னும் disorder-ஆல் பாதிக்கப் பட்டவர்கள். தன் சுற்றுப்புற நிகழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையில்லாமல் இருப்பார்கள். அந்தப் பெண்களின் பிற்காலம் எப்படி இருக்கும், அதுவும் பெற்றோர்கள் காலத்திற்குப் பிறகு? இந்தக் கேள்வி ஆண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்தானே. என்ன செய்வது. ம்ம்.
அந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், டி.ஸி.எஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது மனைவியும் கடைசி வரை நிகழ்ச்சிகளை ரசித்து, முழு involvement-உடன் கையொலி எழுப்பி உற்சாகம் செய்து, பரிசுகள் வழங்கி, பின் மனம் நெகிழப் பேசினார்கள். அந்த மாலைப் பொழுதை இதுபோன்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டது அவர்களுடைய பாக்கியம்தான் எனவும், அந்தக் குழந்தைகளை தெய்வமாகவே பார்க்கவேண்டும் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியபின் ஒரு பெரிய துகையை வெளியே தெரியாமல், அந்த நிறுவனத்துக்குக் கொடுத்தனர்.
அன்றிரவு எனக்கு உணவு, உறக்கம் எதுவுமே பிடிக்கவில்லை. நினைவுகள் அந்தக் குழந்தைகளையே சுற்றி வந்தன. இதுபோல் ஒரு குழந்தை இருந்துவிட்டால் அந்தப் பெற்றோர்களின் வாழ்வு அதற்குப் பிறகு ஒளியிழந்து இருளாகிப் போகாதா, இதென்ன கொடுமை? ஏன் அதுபோன்ற குறைகளை ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்தான், அவன் தான் கருணாமூர்த்தியாயிற்றே. பதில் தெரியவில்லையே.
அப்பாடி இந்த வரையில் நமக்கு அதுபோன்று அமையாமலிருக்கிறதே (knock on wood) என்ற நிறைவுதான் மிஞ்சி நின்றது. அது ஒரு சுயநல சிந்தனைதான் என்றாலும் அதுபோல் நினைக்காமலிருக்க முடியவில்லையே!
கிடைத்த சுக வாழ்வை அனுபவிப்போம். வீணான சச்சரவுகள், மன மாச்சரியங்கள், பிறரைப் பழித்தல், கேடு நினைத்தல், மனம் நோகச் செய்தல் போன்ற தவறான செயல்களையும், எதிர்மறை சிந்தனைகளையும் அறவே நீக்கி மனித நேயம் வளரப் பாடுபடுவோம்.
ஆமென்.
சார்ந்த வகை: பொது :: நாள்: ஏப் 6th, 2007. 7 மறுமொழிகள்.
கூகிள் எர்த் (Google Earth) என்னும் சேவையினுள் சூடானிலுள்ள டார்ஃபர் (Darfur) என்னுமிடத்தில் நடக்கும் கொடுமைகளை படம் பிடித்துக் காண்பிக்கிறார்கள். அங்கு நான் கண்ட படம் ஒன்றை உங்களுடன் பகிர்நதுகொள்கிறேன்.
படத்துக்கு மேலே ஒரு கிளிக்கெட்டி கிளிக் அடிங்க!
சார்ந்த வகை: பொது :: நாள்: ஏப் 15th, 2007. மறுமொழி இடுக.
நான் சிறுவயது முதலே பல முஸ்லிம்களுடன் பழகி வந்துள்ளேன். எங்கள் ஊரில் முஸ்லிம்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கப்பலில் சென்று வாணிகம் செய்யும் மரைக்காயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உருது பேசுவதில்லை. தமிழில் அவர்களுக்கான முறையில் பேசுவார்கள் – வாப்பா, அத்தா, மச்சி – இதுபோன்று. பிராமணர்களுக்கு எவ்வாறு ஒருவித பரிபாஷை இருந்ததோ, அதுபோல்தான் இவர்களுக்கும். அவர்கள் எல்லா வகுப்பினருடனும் நன்கு பழகுவார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல முஸ்லிம்கள் இன்னும் நண்பர்களாக உள்ளனர்.
நான் சிறுவனாக இருந்தபோது எங்களூரில் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதியின் பெயரைச் சொல்லித்தான் அழைத்துக் கொள்வார்கள்.ஆனால் அதில் காழ்ப்புணர்ச்சி இருக்காது. வெறுப்பு இருக்காது. "என்ன ஐயரே", "என்ன பாய்", "பிள்ளைவாள்","முதலியார்வாள்", "நாயுடுகாரு" இதெல்லாம் சர்வசாதாரணம். பரஸ்பரம் அன்புடனும் நேயத்துடனும் பழகுவார்கள். என்தந்தைக்கு நெருங்கிய நண்பர் ஒரு பாய் தான்.தினமும் மாலையில் சிறிது நேரம் அவருடைய ஜவுளிக் கடைக்குச் சென்று பேசிவிட்டுத்தான் வருவார். நான் அவரைப் பார்க்க அங்குசென்றால், அங்கு அமர்ந்திருக்கும் இன்னொரு முஸ்லிம் நண்பர் என் கையைப் பிடித்துக் கொள்வார். அவ்வளவுதான், விரல்களை நசுக்கி எடுத்து விடுவார். "விடுங்க,விடுங்க" என்று துடிப்பேன். ஆனால் அவர் "டேய், உன் அப்பன் பேச்சைக் கேட்டுக்கிட்டு பருப்பு சாம்பாரே சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்னா இப்படிநோஞ்சானா இருக்க வேண்டியதுதான். நாளையிலிருந்து கறி,மீன் சாப்பிட ஆரம்பி, நீயும் சுல்தான் (அவர் மகன்) மாதிரி ஆயிடலாம்" என்பார். என் தந்தை சிரித்துக் கொள்வார். அந்த பாய் பெரிய பணக்காரர். ஆனால் சிம்பிளாக இருப்பார். பூச்சிகடிக்கு மந்திரித்துக் கொடுப்பார். நான் பலமுறை இதற்காக அவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். இப்படி ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்து "மில்ஜுல்கர்" வாழ்ந்து வந்தோம். குடும்ப நண்பர்களாக இருந்தோம்.
பொதுவாகவே முஸ்லிம்களிடமிருந்து ஏனையோர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அவர்கள் சோம்பித் திரியமாட்டார்கள். நல்ல உழைப்பாளிகள். ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்வார்கள். கூட்டம் கூடி நின்று அரட்டை அடித்து தன் பொன்னான நேரத்தை வீணடிப்பதில்லை. இன்றைக்கும் பலவித வணிகங்களில் அவர்கள் ஓங்கியிருக்கிறார்கள். குடந்தையில் விடியற்காலை வெற்றிலை ஏலம் நடக்கும். அதில் முஸ்லிம்கள்தான் பங்கெடுத்துக் கொள்வார்கள். சென்னையில் சைனா பஜாரில் உள்ள இரும்புக் கடைகள் எல்லாமே (அநேகமாக) "தாவூதி போரா" என்னும் முஸ்லிம் வகுப்பினர்கள் கையில் இருக்கிறது.
எனக்கு மதம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் ஈடுபாடு. சாதிப் பாகுபாடு பார்ப்பதேயில்லை. நமக்கு இருக்கும் அனறாடப் பிரச்னைகளே ஆயிரம் இருக்கிறது. இந்த விசாரம் வேறு எதற்கு!
இப்போது சிறிது இடைவெளி!
நான் முதன் முதலில் தமிழில் பதிவு எழுதத் தொடங்கும்போது ரொம்பத் திரிங்க்காக இருந்தாது. அதுவரை ஆங்கிலத்தில்தான் இணையத்தில் பதிய முடியும்; தமிழில் எழுத வேண்டுமானால் அதற்காக Portable Font Format என்று ஒரு மென்பொருள் வாங்கி அதனை வலைப் பக்கத்தில் சேர்க்கவேண்டும் என்கிற நிலை இருந்தது. பிறகு யூனிகோடு முறை பெருமளவில் செயல்படுத்தத் தொடங்கியபின், i18n, l10n போன்றவைகளின் உதவியால் மொத்தமும் தமிழில் பாவிக்க மிக வசதியாகிவிட்டது.
ஏதோ எழுதத் தொடங்கினேன். "தமிழ்மணம்"திரட்டத் தொடங்கியபின் என் பதிவுகளுக்கு நிறைய விருந்தினர் வந்தனர். பல நண்பர்கள் கிடைத்தனர். நிறைய விஷயங்களும் அறிந்துகொள்ள முடிந்தது.
என்னைப் பொறுத்தவரையில் மதம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். அதுவே வாழ்க்கையாகாது. "Epicurianism" பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாது. இந்து மதம் போல அதுவும் இன்னொரு மதம். "அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு, நம் வழி நமக்கு" என்று அதைப் பற்றி எந்தவொரு தீவிர ஆராய்ச்சியிலும் இறங்கியதில்லை. முதன் முதலில் நபிகள் நாயகம் பற்றியும் வஹி முதலியவை பற்றியும் நேசகுமாரின் கட்டுரைகளைப் படித்தபின் தான் ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. முழு விவரம் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் பலர் எழுதுவதைப் படிப்பதோடு சரி. எந்தவித சர்ச்சையிலும் ஈடுபடுவதில்லை. எந்த மதத்தையும் மட்டமாக எழுதுவதில்லை. விமரிசிப்பதில்லை. இப்போதுகூட சில முஸ்லிம்களுக்கு என்மேல் உள்ள ஒரே கோபம், நான் நேசகுமாரின் பேட்டியை என் பதிவில் வெளியிட்டு அவருக்கு என் தார்மீக ஆதரவு கொடுத்தேன் என்பதுதான். இந்த இடத்தில் ஒரு உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க விரும்புகிறேன். நேசகுமார் ஒரு முன்ஜாக்கிரதையான மனிதர். முன்பின் அறியாத என் முன்னால் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. நான் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி அவருடைய பேட்டியை வெளியிடலாம் என்ற அவாவை அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவித்தேன். அவர் நேரில் வரமுடியாது என்றும் என் கேள்விகளை ஈமெயில் மூலமாகவே அனுப்பினால் அவர் பதிலுரைப்பார் என்று சொன்னார். ஆனால் ஒரு "த்ரில்" இருக்கட்டுமே என்று சற்று adventurous-ஆக நேரில் பேட்டி கண்டதுபோல் எழுதியிருந்தேன். ஆனால் உண்மையை இணைய நுணுக்கங்கள் தெரிந்த "ஆப்பு" என்பவர் கண்டுபிடித்து எழுதிவிட்டார். உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை. நேரில் கண்டதாக எழுதியது தவறு. சிறுபிள்ளைத்தனமான செயல்.
இப்போது தமிழ்ப் பதிவுலகத்தில் திட்டலும், கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்களும் பெருகிவிட்டன. என் பதிவுகளுக்கு வரும் சில மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டங்களைப் படித்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றும் ("சாவது தானேடா, நீ இருந்து என்ன பயன், பர்ப்பனப் பன்னாடையே" என்று இதற்கு உடனேயே ஒரு பின்னூட்டத்தை எதிர் நோக்குகிறேன்!!)
இன்றும் எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்கு என் மனப்போக்கு, உள்ளப்பாங்கு, கண்ணோட்டம் எல்லாம் நன்கு தெரியும். அவர்கள் எல்லோரும் என்னைவிட நல்லவர்கள். மனித நேயம் மிக்கவர்கள். ஜிகாதி, வஹாபி அணுகுமுறை இல்லாதாவர்கள். அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகள் கொண்டிருக்கிறேன். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகளிலும் அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.
சரி. தமிழ்மணத் திரட்டியிலிருந்து இந்தப் பதிவுடன் விடை பெறுகிறேன். இனிமேல் சாதிப் பிரிவினை ஒழிய வேண்டும், தலித்துக்கள் வேதம் பயில வெண்டும் என்னும் விஷயங்களைப் பற்றியும், டெக்னிகல் விஷயங்களையும் பற்றி எப்போதாவது எழுதுவேன். ஏனெனில் வேறு பல அலுவல்கள் நிலுவையில் இருக்கின்றன. உடல்நிலையும் அவ்வளவு சரியில்லை. இன்னும் எவ்வளவு நாளோ!!
மற்றபடி இது ஒரு நல்ல அனுபவம்.
நன்றியுடன்,
எஸ்.கே
சார்ந்த வகை: பொது :: நாள்: ஏப் 16th, 2007. 7 மறுமொழிகள்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-
மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான "பாலி"யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:
இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) – ![]()
இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் "குணவான்", "சத்தியவான்" என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் "சுகர்ண புத்திரி"!
இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், "கருடா ஏர்வேஸ்". மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, "நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள், "நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது" என்று பதிலுரைத்தனர்!
சார்ந்த வகை: பொது :: நாள்: மே 11th, 2007. மறுமொழி இடுக.
நல்ல முஸ்லிம் பெருமக்கள் இத்தகைய கொடுமைகளை இழைக்க மாட்டார்கள்.
YouTube - வீடியோவைக் காணுங்கள் Jihadis' atrocities at Coimbatore
சார்ந்த வகை: பொது :: நாள்: மே 16th, 2007. மறுமொழி இடுக.









சமீபத்திய மறுமொழிகள்