society
குறிச்சொற்கள்: auto, differently abled, effort, handicap, society, உள்ளம், ஊக்கம், ஊனம், மனத்திண்மை, மனம், மனித இயல்பு, மாற்றுத் திறனாளி, முயற்சி.
சார்ந்த வகை: நல்வாழ்வு :: எஸ்.கே நாள்: மே 19th, 2011. 3 மறுமொழிகள்.
இது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம்! (சரி, மனிதனாக இருந்திருந்தால்…!)
இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார்.
அப்போது திடீரென அந்த பாம்பு அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் பயந்த அவர் அதன் கழுத்தில் இருந்து பிடியை விட்டார். உடனே அந்த பாம்பு அவர் இடது புறத்தில் பொருத்தியிருந்த சிலிகான் மார்பகத்தில் கடித்தது.
சிறிது நேரத்தில் சிலிகான் விஷம் ஏறி அந்த பாம்பு செத்து விழுந்தது.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாடல் அழகி ஒரிட் பாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மேலும் வாசிக்க…
- Share this:
- StumbleUpon
குறிச்சொற்கள்: beauty, boob, breast enhancement, culture, fake boob, flase breast, Israeli model, Orit Fox, silicone, snake, society, Tel Aviv, அழகு, இயற்கை, ஒழுக்கம், சமூகம், பெண்கள், மனித இயல்பு.
சார்ந்த வகை: இது எப்படி இருக்கு :: எஸ்.கே நாள்: மா 16th, 2011. மறுமொழி இடுக.
மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் – பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் – இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!
தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக – இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக தற்போது நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும், சட்டப் புத்தகங்களும் பெருத்துவிட்டன. ஆனால் அந்த இடங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் கற்கால மனிதனின் போக்கில்தான் நிகழ்கின்றன.
இங்கு நீங்கள் காணும் நீதிமன்ற வளாகத்தில் நிழல் தந்துகொண்டிருக்கும் மரங்கள் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கும்! எத்தனை அழுகைகள், ஆத்திரங்கள், மன மாச்சரியங்கள், சவால்கள், பொய்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வாதங்கள், பழிவாங்கல், சீரழிவுகளின் சின்னங்கள்…
அந்த மரங்களுக்குமட்டும் எழுதும் திறமை இருந்தால் எத்துணை சுவாரசியமான படைப்புகள் நமக்குக் கிட்டியிருக்கும்!
- Share this:
- StumbleUpon
சார்ந்த வகை: மனித மனம் :: எஸ்.கே நாள்: ஜூன் 1st, 2009. 1 மறுமொழி.
ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்!
விஷயம் இதுதான் – சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting சேவைகளை செவ்வனே செய்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தையை சிறிது கடிந்து பேசிவிட்டாள் அந்த அம்மாள் என்பதற்காக அவர்களுடைய மருமகள் கோபப் பட்டிருக்கிறாள். அவர்களுடைய மகனும் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.
இதுதான் அந்த அம்மாளுடைய மனத்தாங்கலுக்குக் காரணம். "அவர்களுக்குச் செய்வதற்குத்தான் நானா? கண்டிப்பதற்கு உரிமை இல்லையா" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், அந்த அம்மையார். அவருடைய புருஷன் சமாதானம் செய்து கொண்டிருந்தார், "இதைப்பார், பிறருடைய குழந்தைகளைக் கொஞ்சி சீராட்டி வளர்க்கலாம். அவர்களுடன் விளையாடலாம். ஆனால் கடிந்துபேச நமக்கு உரிமை இல்லை. அது அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு மட்டும்தான் உரிமையான விஷயம். அதுதான் சரியான அணுகுமுறை. இது நம் பேரக் குழந்தைகளுக்கும் பொருந்தும்" என்றார் அவர்.
கூர்மையாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூற்று சரியானதுதான் என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்ற பேச்சே இல்லாத இக்காலத்தில் சில நாட்கள் குழந்தைகளோடு இருக்கும் போது இனிமையாக பொழுதைக் கழிக்காமல் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் தலையிட்டு, குழந்தைகளின் தற்கால எண்ணப் பாங்கினையும் அவர்கள் வளரும் சூழலின் தன்மையையும் அறியாமல் அவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றால் பிணக்குதான் மிஞ்சும்.
- Share this:
- StumbleUpon
சார்ந்த வகை: மனித மனம் :: எஸ்.கே நாள்: நவ 27th, 2008. மறுமொழி இடுக.
சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:
- இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் – அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
- ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
- ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
- ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.
இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.
அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் – ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.
கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.
- Share this:
- StumbleUpon
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: எஸ்.கே நாள்: ஜூன் 15th, 2008. 3 மறுமொழிகள்.
உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:-
- டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
- புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
- காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் "பண்டிட்" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
- ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
- தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
- ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.
- பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
- தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.
இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் "ஆதிக்க சாதியினர்" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?
உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?
- பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?
- "இரெட்டைக் குவளை" முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?
- தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?
- தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?
இவர்களெல்லாம் யார் தெரியுமா?
பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் "ஆதிக்க சாதியினர்"தான்!
இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!
ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!
உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.
தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.
ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து "பஞ்சமர்" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.
ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?
இது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல!
யார் அவர்கள்?
இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!
- Share this:
- StumbleUpon
சார்ந்த வகை: தேசீயம் :: எஸ்.கே நாள்: அக் 6th, 2007. 2 மறுமொழிகள்.
"வைGo" மருவி "வைKo" ஆனதுபோல, காஃபி, "காப்பி"யாகி "சூப்பர்" மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், "சூப்பர்" என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் ("போத்தீஸ்" என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, "மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு 'சூப்பர்' பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்" என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் "ரேடியோ சிலோனி"ல் 'ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்' இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!
காப்பி என்பது "கொட்டை வடிநீர் குளம்பி"யைப் பற்றி மட்டும் குறிப்பிடும் சொல் என்றா நினைத்தீர்கள்? அது பிசகு. தேர்வுகளில் நம் மக்கள் அடிப்பது காப்பி. கையெழுத்து படிய வைக்க கையை ஒடித்ததும் காப்பி (நோட்டு)தான். விளம்பரங்களில் வரும் "நறுக்"கென்ற வாசகங்களை எழுதுபவர்களுக்குப் பெயர் "காபி ரைட்டர்கள்". ஹிந்தியில் எல்லா நோட்டுப் புத்தகங்களையுமே "காபி" என்றுதான் அழைக்கிறார்கள். அடடா, மறந்துவிட்டேனே, கர்நாடக சங்கீதத்தில் "காப்பி" ராகம் மிகப் பிரபலமானது. "ஜகத்தோத்தாரணா" என்று கணீரென ஒலிக்கும் புரந்தரதாஸர் சாகித்யம் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இதே காப்பி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை மறைந்த இசைமேதை ஜி.என்.பி அவர்களின் குரலில் கேட்போமா!
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
ஆனால் நாம் குடிக்கும் காப்பியைப் பற்றியல்லவா பேசுகிறோம்!
மேலும் வாசிக்க…
- Share this:
- StumbleUpon
குறிச்சொற்கள்: brahmin, coffee, decoction, filter coffee, society, இசை, இந்தியா, காபி ராகம், காப்பி, சமூகம், டிகிரி காப்பி, தமிழ்நாடு, நாகரிகம், மனித இயல்பு.
சார்ந்த வகை: நல்வாழ்வு :: எஸ்.கே நாள்: பிப் 13th, 2006. 9 மறுமொழிகள்.
வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.
- Share this:
- StumbleUpon
குறிச்சொற்கள்: society, terrorism, அரசியல், மனித இயல்பு.
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: எஸ்.கே நாள்: அக் 29th, 2005. 3 மறுமொழிகள்.
அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.
"ட்சூனாமீ" என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!
ஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.
இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. "ட்சூ" (துறைமுகம்), "னாமீ" (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.
இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.
ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித "தப்புப் பாளங்கள்" (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் "ட்சூனாமீ" என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.
கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?
அதுதானே இங்கு நிகழ்ந்தது!
சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?
- Share this:
- StumbleUpon
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: எஸ்.கே நாள்: டிச 27th, 2004. மறுமொழி இடுக.
சமீபத்திய மறுமொழிகள்