பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2006

இசையுலக இளவரசர் ஜி.என்.பி

இசை :: மறுமொழி ஒன்று »

கந்தர்வர்Prince charming தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான "லலிதா ராம்" அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். "நேசமுடன்" வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.

இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:
விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 833 முறை) ::

நிமித்தம்

பொது :: 3 மறுமொழிகள் »

ஜோஸ்யம், ஜாதகம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இதைப்பற்றி முன்னமையே ஒரு இடுகை இட்டுள்ளேன். ஆனால் நம்மால் முழுதும் புரிந்துகொள்ள முடியாத சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியவில்லை.

இது பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்ததில் இவை இயற்கை நமக்களித்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே தோன்றுகிறது. பின்னால் நடக்கப் போவதை சூசகமாக நமக்குத் தெரியப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு செயலைத் தொடங்குமுன் தற்செயலாகத் தோன்றும் இடர்கள், தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது தொடர்ந்து கைதவறித் தட்டும் ராங் நம்பர், ஒரு அவையில் நீங்கள் ஏதாவது சொல்ல முயலும்போது எற்படும் தடங்கல்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் நமக்கு அவ்வப்போது உங்கள் முயற்சிகளின் பயனின்மையை தெரியப் படுத்துகின்றன.

வெளிப்படையான இதுபோன்ற நிகழ்ச்சிகள் தவிர, நம் உள்ளுணர்வே பல முறை ஒரு "வருமுன் உரைப்பானா"க செயல்படுகிறது. இதனை hunch என்பார்கள். இத்தகைய எச்சரிக்கைகளுக்கு நாம் கட்டாயம் மதிப்புக் கொடுத்து அதற்குத் தக்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

இயற்கையாக நிகழும் இத்தகைய செயல்பாட்டை "நிமித்தம்" என்று அழைப்பார்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் கிடையாது. கைம்பெண்கள் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும் என்பது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை நான் குறிப்பிடவில்லை.

முன் காலத்தில் அரசவைகளில் "நிமித்திகன்" என்று ஒருவர் இருப்பார். அரசர் முக்கிய செயல்களில் இறங்குமுன் அவர் தனக்குத் தோன்றும் உணர்வுகள் அடிப்படையில் அரசருக்கு ஆலோசனை வழங்குவார்.

இது பற்றி நண்பர்கள் யாருக்கேனும் மேல்விவரம் தெரியுமானால் பகிர்ந்து கொள்ளலாமே!

:: (பார்வை 678 முறை) ::

அவதானம்

பொது :: 6 மறுமொழிகள் »

அது தொலைக் காட்சி இங்கு வராத காலம். வானொலிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சும்மா திருகிக் கொண்டிருந்தபோது, இப்போது "அவதானம்" என்னும் நிகழ்ச்சி கேட்கப் போகிறீர்கள் என்ற அறிவிப்பு வந்தது. அது அஷ்டாவதானமா, தசாவதானமா என்று நினைவில்லை. இராமையா என்பவர் நிகழ்த்தினார். தொடர்ச்சியாக ஒன்றுக்கும் இன்னொனற்றுக்கும் தொடர்பு இல்லாத பல செயல்களில் அவரை ஈடுபடச் செய்கிறார்கள். அவர் அவற்றை கோர்வையாக நினைவில் இருத்தி பதிலளிக்கிறார்.

ஒருவர் அவருடைய முதுகில் ஒரு பூவை ஒத்தி ஒத்தி எடுக்கிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளின் முதலடி கூறிவிட்டு ஈற்றடி என்னவென்று வினவுகிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் கேட்கிறார். இதுபோல் பல செயல்கள். இதெல்லாம் முடிந்த பிறகு அவர் வரிசையாக பதிலளிக்கிறார். அடுத்த முறை அந்த வரிசைக் கிரமத்தை மாற்றுவார்கள்.

இத்தனைக்கும் அவர் கண் பார்வை இல்லாதவர். பிறவியிலிருந்தல்ல - இடையில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தால். அவருடைய மனைவியும் வந்திருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்பார்வை இழப்பதற்கு முன்னால் அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்த்ததை நினைவில் கொண்டு, அந்த முகத்துடனேயே அவரை இன்னமும் காண்கிறேன் என்று இராமையா அவர்கள் கூறியபோது அதனைக் கேட்டவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது.

முன் காலத்தில் அரசர்கள் இந்த அவதானக் கலையைப் போற்றி வளர்த்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

தற்காலத்தில் நினைவாற்றலை அதிகப்படுத்த மாத்திரைகள் வந்துவிட்டன! ஆனால் இதற்கான பிரத்யேக பயிற்சிகளை சிலர் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; விவரம் தெரியாது.

என் பக்கத்து வீட்டுப் பையன் சொல்கிறான், "இதென்னங்க ஜுஜுபி. நாங்கள்தான் ஒரொரு தேர்வுக்கும் உருத்தட்டி ஒப்பிக்கிறோமே" என்கிறான்!

:: (பார்வை 665 முறை) ::

கொஞ்சம் செவிக்குணவு!

இசை :: மறுமொழி ஒன்று »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

பையப் பைய வருகிறேன்!

:: (பார்வை 1053 முறை) ::

எந்த சாமி?

பொது :: 2 மறுமொழிகள் »

Mandap

இது எந்தக் கடவுளின் கோயில்? உடனுறை அம்மனின் பெயர் என்ன? எந்த ஊர்?

சரியான விடையளிப்பவர்களுக்கு கூட்டணியிலிருந்து பிய்த்து 13/4 சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும்!

:: (பார்வை 1053 முறை) ::

உருமாறும் உலாவிகள்!

கணினி :: 3 மறுமொழிகள் »

ஐ-யி டாப்ஐ.யி-யில் மட்டும் ("ஐயோ" இல்லை; "ஆயி" யும் இல்லை, வெறும் 'ஐயி') - நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) - தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி "கீய்ச்சின" மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், சிஃபியின் தமிழ்ப் பக்கங்கள் போன்றவை சில எடுத்துகாட்டுக்கள்.

சரி. நீங்கள் தீநரி பாவிக்கும் ஆசாமி. திடீரென்று திண்ணையில் கட்டுரை ஒன்றைப் படிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. நீங்கள் ஐ.யி-யைத் தேடி "கிளிக்கெட்டி கிளிக்" செய்து சிரமப்பட வேண்டாம். இருக்குமிடத்திலிருந்தே தீநரியை ஐ.யி-யாக உரு மாற்றலாம். இந்த ரசவாத வித்தை புரியும் தீநரியின் நீட்சிக் கோப்பு (Extension) "ஐயி டாப்" (IE Tab) என்று அழைக்கப்படுகிறது. இதனை இந்தத் தளத்திலிருந்து பெறலாம்.

அந்தக் கோப்பை நிறுவியபின் உலாவியின் வலது அடிப்புறத்தில் ஒரு ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்தால் உலாவியின் எஞ்சின் மாறும். இதன் செயலாக்கத்தை உங்கள் வசதிக்கேட்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இனியென்ன, இதுவரையில் தீநரியை பாவிக்காதவர்கள், உஜாலாவுக்கு மாறவேண்டியதுதானே!

:: (பார்வை 923 முறை) ::

எங்கே என் காற்று?

என்ன நடக்குது இங்கே :: 4 மறுமொழிகள் »

நம் கண்ணிலும் கருத்திலும் அடிக்கடி தென்படாத விஷயங்கள் சரியான தருணத்தில் நினைவுக்கு வராமல் போய்விடும். ஆகையால்தான் எல்லோரும் நன்கறிந்த ஹார்லிக்ஸ் முதலானவற்றை மீண்டும் மீண்டும் உரக்க விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுபோல, நம் வாழ்வின் அடிப்படையான பல பொருட்களில்கூட அலட்சியமாக இருக்கிறோம்.

இத்தகைய எண்ணப்போக்குக்கு எடுத்துக்காட்டாக நாம் உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியத் தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்வோம். பல நேரங்களில் இது தேவையென்பதையே பலர் கருத்தில் கொள்வதில்லை. இல்லாவிட்டால் எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிக்கொண்டு புகை பிடிப்பார்களா?

எனக்கு ஒரு மேலதிகாரி இருந்தார். அவருடைய அறையில் இருபிரிவு குளிர்சாதன அமைப்பு பொருத்தப் பட்டிருந்தது. ஆகையால் வெளிக்காற்று உட்புக வாய்ப்பேயில்லை - கதவைத் திறக்கும் நேரம் தவிர. அவர் சிகரெட் கம்பெனிகளை அதிக லாபம் ஈட்ட வைப்பதே தன் வாழ்வின் முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டவர். அவர் விடும் "குப் குப்"கள் அறையைச் சுற்றி சுற்றி வந்து, உடன் அமர்ந்திருப்பவர்களின் மூச்சுக்காற்றில் கலந்து அவர்களை தவிர்க்க இயலாத (துணைவினை) புகையிழுப்பாளர்களாக ஆக்கிவிடும். ஒருமுறை அவருடன் ஒரு உரையாடலுக்காக சென்றிருந்த போது, அவரிடம், புகை பிடிப்பதை நிறுத்தும்வரை அவருடைய அறைக்குள் வர முடியாது என்று தீர்மானமாக சொல்லவேண்டி வந்தது. "நான் உள்ளிழுக்கும் காற்றை மாசுபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை" என்பதை உறுதியாக அவர் மனதிலாழ்த்தியபின் தான் அந்தப் அப்பழக்கத்தை நிறுத்தினார்.

ஒருமுறை மைசூரிலிருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1204 முறை) ::

ஹேக்கிங்?

கணினி :: 2 மறுமொழிகள் »

நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?

newindpress

:: (பார்வை 1114 முறை) ::

உல்டா

கணினி :: 2 மறுமொழிகள் »

ulta-phulta

:: (பார்வை 952 முறை) ::

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

பொது :: 9 மறுமொழிகள் »

காப்பியென்றால் பேயும் கேட்கும் ஒரு கப்!"வைGo" மருவி "வைKo" ஆனதுபோல, காஃபி, "காப்பி"யாகி "சூப்பர்" மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், "சூப்பர்" என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் ("போத்தீஸ்" என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, "மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு 'சூப்பர்' பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்" என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் "ரேடியோ சிலோனி"ல் 'ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்' இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!

காப்பி என்பது "கொட்டை வடிநீர் குளம்பி"யைப் பற்றி மட்டும் குறிப்பிடும் சொல் என்றா நினைத்தீர்கள்? அது பிசகு. தேர்வுகளில் நம் மக்கள் அடிப்பது காப்பி. கையெழுத்து படிய வைக்க கையை ஒடித்ததும் காப்பி (நோட்டு)தான். விளம்பரங்களில் வரும் "நறுக்"கென்ற வாசகங்களை எழுதுபவர்களுக்குப் பெயர் "காபி ரைட்டர்கள்". ஹிந்தியில் எல்லா நோட்டுப் புத்தகங்களையுமே "காபி" என்றுதான் அழைக்கிறார்கள். அடடா, மறந்துவிட்டேனே, கர்நாடக சங்கீதத்தில் "காப்பி" ராகம் மிகப் பிரபலமானது. "ஜகத்தோத்தாரணா" என்று கணீரென ஒலிக்கும் புரந்தரதாஸர் சாகித்யம் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இதே காப்பி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை மறைந்த இசைமேதை ஜி.என்.பி அவர்களின் குரலில் கேட்போமா!

ஆனால் நாம் குடிக்கும் காப்பியைப் பற்றியல்லவா பேசுகிறோம்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1558 முறை) ::

 

3-ல் இது-1123»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in