இந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.
சார்ந்த வகை: சிங்காரச் சென்னை :: நாள்: ஜன 9th, 2009. மறுமொழி இடுக.
இப்படிச் சொல்பவர் யார்?
“உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு மூல காரணம். பெண்ணின் உடலமைப்பின் மர்மம், அவள் ‘தேவதையோ’ என்று கற்பனை செய்யவைத்து ஆண்களை ஈர்க்கிறது.
மூடி மறைத்தால்தான் எதன்மீதும் ஆர்வம் பெருகும். திறந்து வைத்துவிட்டால் ஆர்வம் ஆவியாகிவிடும்”
இந்தக் கருத்தைச் சொல்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்.
அத்தகைய ஆர்வம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தன் இப்போதெல்லாம் பெண்கள் திறந்து போட்டுக்கொண்டு வருகிறார்களோ!
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: ஜன 12th, 2009. 1 மறுமொழி.
இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம்.
அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி டைப்பில் கூட!
ஓலைச்சுவடி என்றும் ஒரு புத்தகம் நிறைய விற்றுக் கொண்டிருந்தது – ”தளியோலா” என்னும் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம்.
சே கவேராவும் நிறைய கண்ணில் பட்டார். அவரைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட அந்த மீமில் ஆட்பட்டிருந்தனர்!
நான் நேரம் (சில இடங்களில் பணமும்) செலவிட்ட ஸ்டால்கள்:
ரிசர்வ் வங்கி
பி.எஸ்.என்.எல்
கீதா பிரஸ்
தினமணி
சென்னை பல்கலைக் கழகம்
விஜயபாரதம்
நிவேதிதா பதிப்பகம்
Asian Educational Services (அபிதான சிந்தாமணி)
இன்னும் சில…
பளிரென்று கண்ணைப் பறிக்கும் விதமாக நூல்களை வடிவமைத்து அளிப்பவர்கள் (நான் பார்த்தவரை):
கிழக்கு (வரம்…etc)
ஆனந்த விகடன்
உயிர்மை
இராமகிருஷ்ண மடம்
மற்றபடி ஒரே மாதிரி ஸ்டால்கள். ஒரே மாதிரி புத்தகங்கள்.
மூன்று மணி நேரத்திற்குமேல் சுற்றிவிட்டு ஒன் பாத்ரூம் போகலாமென்றால் கண்காட்சிக்கு வெளியே வந்து காடு மலை வனாந்திரமெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நல்ல வேளை அப்போது மழை பெய்யவில்லை.
நான் சென்றது திங்கட்கிழமையாதலால் ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் கேண்டீனில் நல்ல கூட்டம் (குட்டி இட்லி, பானி பூரி, ஃப்ரெஞ்ச் ஃபிரை, தோசை, போளி, ஃபிரைடு ரைஸ்…). கால் அசந்து உட்காரலாமென்றால் நாற்காலி ஏதும் காலி இல்லை. ஆள் இல்லாத இருக்கைகளில் கூட பைகளைப் போட்டு இடம் பிடித்துவிட்டு டோக்கன் வாங்கச் சென்றிருந்தனர் ஆண்கள்; பெண்கள் அனைவரும் இருக்கை நிறைந்து அமர்ந்திருந்தனர்!
புதிய தமிழ் ஒன்றை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அறிஞர் ஒருவர் அளிக்கும் சொற்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். அவைகளின் பொருள் புரிந்து எனக்குச் சொன்னால் உங்களுக்கென்று மலிவு விலையில் 5 ரூபாய்க்கு புத்தகக் கண்காட்சி நுழைவுச் சீட்டு ஒன்று கிடைக்கும்.
பொத்தக வியந்தை
தளி
படி
வாழ்வரை
இப்போது காட்சிகள் இரண்டு:
சந்தை பற்றிய விவரங்களும் சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது)
சார்ந்த வகை: புத்தகப் பரண் :: நாள்: ஜன 13th, 2009. 3 மறுமொழிகள்.
மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:-

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
சார்ந்த வகை: பொது :: நாள்: பிப் 15th, 2009. மறுமொழி இடுக.
என் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் கோர்வைகளும் இணைந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இசை வெள்ளம் இது!
அந்தப் படத்தைக் காணும் வரையில் இது ஒரு நாட்டியப் பாடல் என்றே எண்ணியிருந்தேன். படம்: மணமகள். நடிப்பு: ”நாட்டியப் பேரொளி” பத்மினி மற்றும் அவருடைய சகோதரி லலிதா. இவர்களோடு இன்னொரு சகோதரியான ராகினியும் இணைத்து அக்காலத்தில் “திருவிதாங்கூர் சகோதரிகள்” என்று பிரபலமானவர்கள்.
நடுவில் பாட்டு வாத்தியாராக அமர்ந்திருப்பவர் பிரபல குணசித்திர நடிகர் டி.எஸ். பாலையா. இந்தப் படத்தில் அவர் வில்லனாக வருகிறார்.
இந்தப் பாடலின் ராகம்: சிம்மேந்திர மத்தியமம்.
இந்தப் பாடல் வரும் காட்சியை டிவியிலிருந்து பதிவு செய்து யாரோ ஒரு புண்ணிவான் Youtube-ல் வலையேற்றியிருந்தார். அதை இதன்கீழ் இணைத்திருந்தேன். ஆனால் அந்தப் பதிவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டனர் – ஒரு மகாபாவி எதிர்ப்பு தெரிவித்ததால்! Spoilsports!
ஆனால், இன்னொருவர் அதை நிச்சயம் வலையேற்றுவார். அதுவரை பொறுத்திருப்போம்.
கிடைத்துவிட்டது! (நன்றி, ஆர்.வி.ராஜு.)
YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam
அந்தப் பாடலின் ஒலி வடிவை இங்கே கேட்கலாம்:
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
இதே பாடலை திருமதி நித்யாஸ்ரீயும் இன்னொரு பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பதின் ஒளிப்பதிவை இதன்கீழ் காணலாம்.
ஆனல் எம்.எல்.வியின் கம்பீரமும், சிம்மேந்திர மத்தியம ராகத்திற்கு வேண்டிய காத்திரமும் நித்யாஸ்ரீயின் குரலில் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்!
(உழைத்துப் பாடியிருக்கிறார்கள். ஆனால் குழைவு மிஸ்ஸிங்!)
YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam - by NityaSri
சார்ந்த வகை: இசை :: நாள்: மா 11th, 2009. 3 மறுமொழிகள்.
செய்தி: தினமல்ர் 2009-04-04
செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். பின் சீட்டில் அமர்ந்திருந்த முகையூரைச் சேர்ந்த வக்கீல் அன்பழகன் அவரை உரசியதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அவர் அன்பழகனை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டருக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அன்பழகன் மானபங்கப்படுத்தியதாக வனிதாகுமாரியும், சில்லரை கேட்டதால் கண்டக்டர் தாக்கியதாக அன்பழகனும், அன்பழகன் தாக்கியதாக தங்கவேலும் தனித்தனியே சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா தன்னை தாக்கியதாக வக்கீல் அன்பழகன் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிப்பதற்கான மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஏப் 4th, 2009. மறுமொழி இடுக.
பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல.
ஆனால் நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் அமைக்கப்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையைக் காணுங்களேன்!
சார்ந்த வகை: ஹிந்து மதம் :: நாள்: மே 10th, 2009. மறுமொழி இடுக.





சமீபத்திய மறுமொழிகள்