ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!

என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”

ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் ‘கிரீச் கிரீச்’ என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!

Priyankaஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!

அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?

இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.

என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:

http://www.youtube.com/watch?v=PnOhxF_oQHw

அந்த செல்லக் குயில் பிரியங்கா பாடிய மற்ற பாடல்கள் இவை:

httpvp://www.youtube.com/view_play_list?p=0297200EF75762E9

பிரியங்கா பாடும் நேர்த்தியைப் போல் அவருடைய அமைதியான தோற்றம், கள்ளம் கபடில்லாத சிரிப்பு, அவருடைய உடை, முடி அலங்காரம் எல்லாமே அழகு!

அந்தப் பெண்ணின் குரல் அநாயாசமாக மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்கிறது. சிறிதளவுகூட பிசிறில்லாமல் பலவித ஜாலங்களைப் புரிகிறது. ஆனால் அவருடைய தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது; ஒரே “அமரிக்கையான” சிரிப்புதான் அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும்! இத்தனை குழைவும், பிருகாக்களும், மேல் “நோட்ஸ்” பாடும்போடு ஒலிக்கும் அலைக்கற்றைகளும் பல பாடகர்களை பொறாமை கொள்ளச் செய்யும் என்ப்து நிச்சயம். நாமும் பார்க்கிறோமே, கர்நாடக இசை மேடைகளில், என்னென்னமோ கைகால்களை ஆட்டி, முகத்தைச் சுளித்து பலவித அங்க சேஷ்டைகளைச் செய்தவண்ணம் இருக்கிறார்கள்; ஆனால் பாவம், குரல்தான் பேச மறுக்கிறது!

பிரியங்காவின் பெற்றோர்கள் உணமையிலேயே பெரும் பாக்கியசாலிகள்!

10 Comments


  1. There is a problem with such reality shows involving children.

    The judges are opinionated. It has a traumatic effect on the children. They tend to rate the performance of the children as they would do with adults. They do not give due weightage to the age and idiosyncrasies. Moreover they tend to compare between children on heir face. Most of theses so called “judges” do not posses the mental capacity to orient their thought process to the paradigm of dealing with child-psyche.

    I am not sure if participating such highly competitive reality shows in front of TV camera will be beneficial for the children for their overall growth, or, will it be detrimental to them since we expect them to behave like adults, robbing them the pleasures of innocent childhood in the process!

    S.K


  2. Brilliant voice for Priyanka.

    I liked your comment as well.

    I was pointed to your blog by your son-in-law (Suresh Kuppusamy) here in the US yesterday.

    Will try and visit as time permits.

    – GSR


  3. இந்தக் குழந்தை பிரியங்காவின் குரலில்தான் எத்தனை இனிமை?கடவுள் கொடுத்த வரம் அது.ஆனால் எனக்கு வருத்தம் என்னவென்றால் ஏதாவது குறை கூறி குழந்தைகளின் மனதை நோகடிப்பதுதான்.

    திரு.எஸ்.கே சொல்வதை நான் ஏற்கிறேன்.

    ஒரு கேள்வி எனது மனதில் எழுந்தது.”தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்” என்று கூறுகிறார்கள்.ஆனால் தேடல் கேரளம் வரை சென்றது ஏனோ?

    பிரியங்கா,சஹானா போன்ற அருமையான குழந்தைகள் எவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்கள்.ஆனால் பட்டத்தை தட்டிச் செல்லப்போவது கேரளத்தின் செல்லக்குரல்.

    நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.பிரியங்கா,சஹானா,நித்யஸ்ரீ போன்றோர் என்னதான் நன்றாகப் பாடினாலும் ஏதாவது குறை சொல்லாமல் விடுவதில்லை.

    யாருக்கு சூப்பர் சிங்கர் பட்டம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ எனத் தோன்றுகிறது.


  4. Thanks, Sai Gopalan, for your visit and kind words.

    And my thanks to Raajalingam also. I think you reflected the views of majority of people watching the programme.

    You may please ring up the producer of the program on Vijay TV and express your views strongly.

    You may also like to voice your views in this forum run by Star TV.

    http://forum.indya.com/showthread.php?t=175617&page=3

    S.K


  5. Dear Mr.S.K,

    Thank you very much for the link.

    இன்று (17-02- 2010, புதன்) குழந்தை பிரியங்கா பாடியதைக் கேட்டீர்களா?

    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல என்ற பாடலை அருமையாகப் பாடினார் பிரியங்கா.

    நடுவரில் ஒருவரான பிண்ணனிப் பாடகி திருமதி.சித்ரா வரிசையாக குறைகளை அடுக்கினார்.

    பாடகர் மனோ கூறியதை கவனித்தீர்களா?


  6. நானும் பிரியங்காவின் ரசிகன். மிகவும் திறமையான பாடகி.


  7. I misses Priyanka very much…But Mano and Chitra already decided to give this title to Alka….So we cant do anything…Lots and lots of people against for that…But no one can change this… Definitely Mano and Chitra will give this to Alka….

    Vijay Tv please stop this semifinal and final and announce Alka is winner..


  8. priyanga is very ,verygood singer .my vote for her


  9. தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு மோசமான ஊழல் செயல்பாடு, இதில் பங்கேற்கவே அல்காவிற்கு தகுதி கிடையாது. அவள் தமிழகத்தில் வசிப்பவள் இல்லை, மலையாள சித்ராவின் ஊழல், ஆரம்பத்திலிருந்தே அவளையும் ரோஷனையும் தூக்கி வைத்தே நடத்தினர். காரணம் இருவரும் மலையாளிகள். தமிழகத்தின் செல்ல குரலுக்கு மலையாள பெண் எதற்கு? சினிமா இசை துறை முழுவதும் மலையாள பேய்கள் ஆட்சி செய்கின்றன. மிக அருமையாக பாடிய பிரியங்காவை அவள் அல்காவிற்கு பெரிய போட்டி என்பது தெரிந்து சாமர்த்தியமாக விலக்கி விட்டு பின் பிச்சை போடுவதுபோல ஒரு லட்சத்தை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் காமெடி பீஸ் ஸ்ரீகாந்தை தேவையில்லாமல் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தனர். நாட்டிய நங்கை நித்யஸ்ரியையும் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தது சரியில்லை. ஒரு மலையாள பாடகி ஒரு தெலுங்கு பாடகன் இவர்கள் தமிழகத்தின் செல்ல குரலை தேடினால் இப்படிதான் செய்வார்கள். அதிலும் மலையாளிகள் மிக மிக கேவலமான நன்றி கெட்டவர்கள். ஒரு தமிழ் பெண் கேரளா சென்று எவ்வளவு திறமை இருந்தாலும் பரிசு வாங்க முடியுமா நினைத்து பாருங்கள். எங்கேயோ கிடந்த சித்ரா, ஸ்வர்ணலதா, மஹதி இவர்களுக்கு விலாசம் கொடுத்தது தமிழ்நாடு ஆனால் இவர்களோ இதற்கு ஒரு போதும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண் தடித்த எருமை என்று ஏளனம் செய்வார்கள். இவர்கள் நாட்டு பெண்கள் கொழுத்த வெள்ளை பன்றிகளை போலவும் இவர்கள் நாட்டு ஆண்கள் வெள்ளை எருமைகள் போலவும் உலவுவதை உணராமல் பேசும் முட்டாள்கள். மலையாளிகள் எப்படி பட்டவர்கள் என்பதை இந்திய சீனா யுத்தம் வந்தபோதே கிருஷ்ணமேனன் செய்த தேச துரோகம் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். கேவலமான இந்த மலையாளிகளை துரத்தினால் தான் தமிழகம் உருப்படும்.

Leave a Reply

Your email address will not be published.