சாட்சியாய் நிற்கும் மரங்கள்

மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் – பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் – இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!

தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக – இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக தற்போது நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும், சட்டப் புத்தகங்களும் பெருத்துவிட்டன. ஆனால் அந்த இடங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் கற்கால மனிதனின் போக்கில்தான் நிகழ்கின்றன.

courtஇங்கு நீங்கள் காணும் நீதிமன்ற வளாகத்தில் நிழல் தந்துகொண்டிருக்கும் மரங்கள் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கும்! எத்தனை அழுகைகள், ஆத்திரங்கள், மன மாச்சரியங்கள், சவால்கள், பொய்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வாதங்கள், பழிவாங்கல், சீரழிவுகளின் சின்னங்கள்…

அந்த மரங்களுக்குமட்டும் எழுதும் திறமை இருந்தால் எத்துணை சுவாரசியமான படைப்புகள் நமக்குக் கிட்டியிருக்கும்!

4 Comments


  1. Cool! That’s a clever way of lokiong at it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *