ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

விழுவது தாழ்வல்ல
விழுந்து கிடப்பதே தாழ்வு
— எஸ்.கே

இயற்கை

1

புச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.

சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

Tsetse Fly
5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):

ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.

Killer bee 4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):

ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.

Death stalker3. கொலைகாரத் தேள் (DeathStalker):

இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!

Black widow 2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)

பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!

Anopheles 1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):

இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

செய்தி உதவி: ஃபுல்கர்.

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . 1 மறுமொழி#

1

ஸ்பெயின் நாட்டின் "எல் சோர்ரா" என்னும் மலைச்சுனை சுழ்ந்த மலைத் தொடரில், எல் மகினோட்ரோமோ என்னுமிடத்தை நோக்கி வளந்து வளைந்து செல்லும் இந்த லங்கடா ஒற்றையடி மலைப் பாதை (இதன் பெயர் "El Caminito del Rey") 1901-ல் அமைக்கப்பட்டதாம். இதன் விவரம் இந்த விக்கிபீடியா பக்கத்தில்.

மிகுந்த இடிபாடுகளுடன் கூடிய இப்பாதையில் செல்கையில் கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் இரு கைகளும் ஒரு கண்ணும் வீடியோ எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆள் எப்படி பேலன்ஸ் பண்ணுகிறார்!


பயங்கரம் மிகுந்த இதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ (யூடியூபிலிருந்து)


YouTube - வீடியோவைக் காணுங்கள் El Camino Del rey

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . 1 மறுமொழி#

2

ஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக!

நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் மாற்றுக்கு என்ன அவசியம்? காரணங்களை ஆய்வோம்:-

  1. இன்றைய எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, "சரக்கு தீர்ந்தது அடுத்த கிணற்றைப் பார்" என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஆம் இந்த எரிபொருட்கள் வரண்டு போகக் கூடிய நிலை சீக்கிறமே ஏற்படும் அபாயம் உள்ளது
  2. இந்த எண்ணை உலகில் சில நாடுகளில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் எரிபொருள் பற்றாக்குறையுள்ள இந்தியா போன்ற பல நாடுகள் தங்கள் வருமானத்தில் பெருமளவை பெட்ரோல் இறக்குமதியிலேயே செலவிட வேண்டியுள்ளது.
  3. இதுபோல் எண்ணைவளம் மிக்க உள்ள நாடுகள் அரசியல் மற்றும் மத உணர்வு தொடர்பான காரணங்களூக்காக திடீரென்று ஏற்றுமதியை குறைக்கலாம், அல்லது நிறுத்தியும் விடலாம். அப்போது இவர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி என்ன!
  4. இந்த நாடுகளும், எண்ணை சுத்திகரிப்பு முதலான தொழிற்களில் பெருமளவு ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்திற்கு விலையை ஏற்றிவிடலாம். அப்போது ஏழை நாடுகள் திவாலாக வேண்டிய நிலை ஏற்படும்.
  5. மேலும் எண்ணையை பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைக் கோரலாம். அல்லது நம் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நீட்டலாம்.
  6. முக்கியமாக, இந்த எண்ணை டாலர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பய்னபடுவதை இப்போதெல்லாம் கண்கூடாகப் பாற்கிறோம்!

மேற்கூறிய காரணங்களால் இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் சேமிப்பு மற்றும் மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
மேலும் நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

நாம் இம்முயற்சியில் இதுவரை கடந்து வந்துள்ள பாதை இது:- மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . 2 மறுமொழிகள்#

0

வண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள்!

உதிர்வதற்குமுன் உதிர நிறம் ஏன்! மறையும்முன் ஏனிந்த மாற்றம்!

மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண முடிகிறது! ஏன் இந்த இலைகள் இலையுதிர் காலத்திற்குமுன் தங்கள் இயல்பான பச்சை நிறத்திலிருந்து பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறத்திற்கு மாறுகின்றன? இனி வரப்போகும் குளிர்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது என்பதால், பச்சையத்தால் பயனில்லை என்று அதனை மறைத்து வித்தை காட்டுகிறதா இயற்கை?

விடைகளை இங்கே, இங்கே காணலாம். இதனைப் பற்றிய கவிதை ஒன்றை இந்தப் பதிவில் வாசியுங்களேன்!

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . மறுமொழி இடுக#

13

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

Village vista
9 photos
 


2

சென்ற திங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றேன். வழியிலும், அவ்வூரிலும் நான் கண்ட காட்சிகள் சில.
சுட்டி விட்டால் விரியும் சமர்த்துப் படங்களவை!

Thiruvarur
8 photos