எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். "ஆத்தாடி மாரியம்மா!" என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!
பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, "இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!"
பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!
பின்னல் போய் வந்தது "போனி டெயில்". பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!
உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!
படிய வாரிய தலை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய வளையல்
கட்டிக் கொள்ள சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகம் இல்லா விரல்கள்
கவலை இல்லா சிரிப்பு
நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!
ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.
அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.
மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?
டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் "பண்டிட்" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.
இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் "ஆதிக்க சாதியினர்" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?
உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.
தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.
ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து "பஞ்சமர்" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.
ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?
தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் "இந்தியும். நந்திகளும்" என்னும் தலைப்பிட்ட "திண்ணை"க் கட்டுரையும் வாசியுங்கள்.
"திராவிட" என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். "மதராசியா, அவன் ஒரு 'அகடம் பகடம்' ஆளய்யா" என்பார்கள்!
இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.
இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் செல்வம் – அது இந்தியில்தான் பேசுகிறது!!
நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?
"வைGo" மருவி "வைKo" ஆனதுபோல, காஃபி, "காப்பி"யாகி "சூப்பர்" மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், "சூப்பர்" என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் ("போத்தீஸ்" என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, "மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு 'சூப்பர்' பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்" என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் "ரேடியோ சிலோனி"ல் 'ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்' இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!
காப்பி என்பது "கொட்டை வடிநீர் குளம்பி"யைப் பற்றி மட்டும் குறிப்பிடும் சொல் என்றா நினைத்தீர்கள்? அது பிசகு. தேர்வுகளில் நம் மக்கள் அடிப்பது காப்பி. கையெழுத்து படிய வைக்க கையை ஒடித்ததும் காப்பி (நோட்டு)தான். விளம்பரங்களில் வரும் "நறுக்"கென்ற வாசகங்களை எழுதுபவர்களுக்குப் பெயர் "காபி ரைட்டர்கள்". ஹிந்தியில் எல்லா நோட்டுப் புத்தகங்களையுமே "காபி" என்றுதான் அழைக்கிறார்கள். அடடா, மறந்துவிட்டேனே, கர்நாடக சங்கீதத்தில் "காப்பி" ராகம் மிகப் பிரபலமானது. "ஜகத்தோத்தாரணா" என்று கணீரென ஒலிக்கும் புரந்தரதாஸர் சாகித்யம் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இதே காப்பி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை மறைந்த இசைமேதை ஜி.என்.பி அவர்களின் குரலில் கேட்போமா!
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
சமீபத்திய மறுமொழிகள்