என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”
ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!
ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!
அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?
இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.
என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 28th, 2009. 10 மறுமொழிகள்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-
மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான "பாலி"யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:
இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) – ![]()
இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் "குணவான்", "சத்தியவான்" என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் "சுகர்ண புத்திரி"!
இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், "கருடா ஏர்வேஸ்". மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, "நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள், "நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது" என்று பதிலுரைத்தனர்!
சார்ந்த வகை: பொது :: நாள்: மே 11th, 2007. மறுமொழி இடுக.
இன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இணையம் :: நாள்: ஜூன் 9th, 2005. 2 மறுமொழிகள்.








சமீபத்திய மறுமொழிகள்