2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் "விஜில்" அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம்.
அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். ஆங்கேயிருந்தோரிடமிருந்து அறிந்து கொண்ட செய்தி, கடைசி நிமிஷத்தில் சுவாமியும், இரதாகிருஷ்ணனும் வரமறுத்துவிட்டார்களென்பதுதான். பாவம், அரசியல்வாதிகளுக்கு பலவித சோலிகள் இருக்கும். நம்மூரில் அரசியல் என்பது நேர்க்கோட்டு சிந்தனை வயப்பட்டதன்று. இணைவு, பிரிவு, பின் பிணைவு இப்படி பன்னோக்குப் பார்வையில் போய்க் கொண்டிருக்கும். சிறுவர்கள் கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் "கலைடாஸ்கோப்"பில் எப்படி விதவிதமாக வண்ணக் கோலங்கள் மாறிவருகிறதோ அதுபோல்தான் அரசியல் வியூகங்களும்!
முக்கிய பேச்சாளர்கள் வரவில்லையே, என்ன செய்யலம் என்று அமைப்பாளர்கள் யோசித்திருக்கும் வேளையில் வந்திருந்தோர் அனைவரும் அந்த அரசியல்வாதிகள் இருவரும் இல்லாமலேயே கூட்டத்தை நடத்துங்கள் என்று ஒருமித்துக் கேட்டுக் கொண்டதால் கூட்டம் தொடங்கியது.
திருமதி ராதா ராஜன் லலித் கலா அகாடமியில் அவுரங்கஜீப் பற்றிய படக் கண்காட்சியில் நிகழ்ந்த அராஜகங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் கூறியவற்றில் என் நினைவிலிருப்பவை:-
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: தேசீயம் :: நாள்: மா 14th, 2008. 2 மறுமொழிகள்.
ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!
இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!
- "பெரியார் ஒரு தமிழ் இன விரோதி" என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், "குருவிகள்" என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் "தேடற்சரம்" வலைப் பதிவின் மூலம்.
- "தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய "ஆப்பு" ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!
- "சந்திப்பு என்னும் வலைப் பதிவர்" இத்தகைய "தீரா-விட" சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-
பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!", என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் – இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?
அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?
- திராவிட மாயை என்பது ஒரு "விஷச் செடி" என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.
- "திண்ணை" இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
- ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய "ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை "திண்ணை" வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், "விஸ்வாமித்ரா" அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.
- ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் "காலச்சுவடு" கட்டுரையில்.
தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.
வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!
சார்ந்த வகை: தேசீயம் :: நாள்: அக் 11th, 2007. 3 மறுமொழிகள்.
தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் "இந்தியும். நந்திகளும்" என்னும் தலைப்பிட்ட "திண்ணை"க் கட்டுரையும் வாசியுங்கள்.
"திராவிட" என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். "மதராசியா, அவன் ஒரு 'அகடம் பகடம்' ஆளய்யா" என்பார்கள்!
இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.
இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் செல்வம் – அது இந்தியில்தான் பேசுகிறது!!
நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?
சிந்தித்துப் பாருங்கள்.
சார்ந்த வகை: தேசீயம் :: நாள்: செப் 28th, 2007. மறுமொழி இடுக.
பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ் ஜாதி முறையில் நம் சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய வாதத்தின் சாரம்:
ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது.
அடுத்த தலைமுறையையாவது இதுபோன்ற ஜாதிப் பாகுபாடின்றி ஒற்றுமையாய் இருக்க விடுவார்களா?
சார்ந்த வகை: தேசீயம் :: நாள்: ஆக 25th, 2007. 3 மறுமொழிகள்.
இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் 130-வது பிறந்த நாள். ஒரு தலை சிறந்த நிர்வாகி, நாட்டுப்பற்றே மூச்சாக வாழ்ந்த விவசாயி – அவருடைய தொண்டினை இன்று நினைவு கூர்வோம். நம் பாரத நாட்டின் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் பேணிக் காக்கவும் உறுதி பூணுவோம்.
படேல் அவர்களைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவை அணுகுங்கள். (ஆங்கிலத்தில்)
மேலும் அவர் ஏன் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகமுடியவில்லை, அதில் காந்தியின் பங்கு என்ன போன்ற விவரமறிய இங்கே சொடுக்குங்கள். (இதுவும் ஆங்கிலத்தில்)

படேல் 1947-01-27 தேதியிட்ட Time பத்திரிக்கையின் முகப்பை அலங்கரித்திரிக்கிறார். அவரைப் பற்றி "The Boss" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
சார்ந்த வகை: தேசீயம் :: நாள்: அக் 31st, 2005. 3 மறுமொழிகள்.

சமீபத்திய மறுமொழிகள்