ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

தராசை முதலில் எடைபோடு.

இயற்கை

0

குழந்தை கடத்தல்

child-lifter.jpgசென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று விட்டாள். இது குறித்து போலீசில் அவர்கள் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை தூக்கிச் சென்ற அந்த மர்ம பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அந்தப் பெண்தான் குழந்தையை திருடியவள் என்று அடையாளம் காட்டப்பட்டாள்.

குழந்தை மீட்பு

இதற்கிடையே ஆவடியில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயிலில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை பார்த்து விட்டு அது தங்களுடைய குழந்தை தான் என பெற்றோர் உறுதி செய்தனர்.

இந்நிலையில் குழந்தையை திருடிய பெண்ணிட்ம் ஒரு திடீர் குழந்தையைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கொடுக்க, அவளும் பிடிபட்டாள்; வீடியோ அடையாளம் உறுதி செய்யப்பட்டு அவளிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டது.

மரபணு சோதனை

dfcf67b6-2b2f-428a-817c-81604ef50411_S_secvpf.gif.jpgஇப்போது கைவசமிருக்கும் இரண்டு குழந்தைகளிடையே எந்தக் குழந்தை அவர்களுடையது என்பதை கண்டு பிடிக்க மரபணு சோதனை (DNA genetic fingerprinting) நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான அனுமதி வேணடி நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர்.

யாருடைய சாயல்?

சாதரணமாக பிறந்த குழந்தையை பார்க்க வரும் பெரிசுகள் தவறாமல் உதிர்க்கும் கருத்துக்கள் அக்குழந்தை யாரை "உரித்து" வைத்திருக்கிறது என்பது பற்றித்தான். "அப்படியே அம்மா மூஞ்சியையே உரிச்சு வெச்சிருக்கு பாரு" என்று தாய் வழி உறவுகளும், "நம்ப ராஜு மாதிரியே பெரிய கண்ணு பாரு இந்த நொங்குக்கு" என்று தந்தையின் வீட்டு பெரிசுகளும் ("ம்க்கும், அந்த மேட்டு நெத்தியை கொள்ளாமல் இருந்தால் சரிதான்" – இது கிராஸ் டாக்!), மற்றும் அத்தை, மாமாக்களின் அங்க அடையாளங்களை அந்த பிஞ்சுக் குழந்தையின் மேல் ஏற்றி, குழந்தையை தங்கள் குடும்பத்துடன் இணைத்து ஏற்றுக்கொண்டு விடுவது தான் நம் மரபு.

சில நாட்கள் சென்ற பின் அக்கம் பக்கத்தார் குழந்தை வந்து பார்த்து விட்டு "பையன் அப்பன் மாதிரியே ஜொள்ளு விடரான் பாரு" என்று அந்த மூத்த ஜொள்ளனை ஓரக் கண்ணால் பார்த்தபடி கிசுகிசு கமெண்டுகளும் அரங்கேறும்!

மேலை நாடுகளில் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு Smart Tag மூலம் மாறி விடாதபடி இணைப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். கண்காணிப்பும் பலமாக இருக்கும். அது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்குள்ள மருத்துவ மனைகளிலும் அமையப்போவது எப்போது!

யாருக்கு அப்பன் யாரோ!

DNA double helixஇன்னொருவர் மூலம் தனக்குப் பிறந்த குழந்தையை அது தன் கணவன் மூலம்தான் உண்டானது என்று நம்ப வைத்து வளர்ப்பதை "Paternity Fraud" என்று அழைக்கிறார்கள். “Maternity is always certain, paternity is a matter of inference” என்ற legal maxim அடிப்படையில் தாலி கட்டிய கணவன் தந்தை எனும் பட்டம் பெறுகிறான், அதற்கு அவன் chromosome தானம் செய்யாமல் இருந்தால் கூட! இது கொடுமைதான், என்ன செய்வது! இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க மரபணு சோதனைதான் சரியான வழி என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால் பல நீதிபதிகள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. இதன் விளைவு – தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்" கதைதான்!

ஆனால் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக எண்ணிக் கொண்டு ஒரு தாய் அதனை பால் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? சிறிது வளர்ந்த பிறகுதான் வண்டவாளம் பல்லை இளிக்கும். அதுவரை குயில் குஞ்சுகளை தனதாக வளர்க்கும் காக்கையின் நிலைதான் அந்த தாய்க்கு!

அப்பா டக்கர் குயிலார்!

மேலும் வாசிக்க…

0

இது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம்! (சரி, மனிதனாக இருந்திருந்தால்…!)

Model Orit Fox and snakeஇஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார்.

அப்போது திடீரென அந்த பாம்பு அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் பயந்த அவர் அதன் கழுத்தில் இருந்து பிடியை விட்டார். உடனே அந்த பாம்பு அவர் இடது புறத்தில் பொருத்தியிருந்த சிலிகான் மார்பகத்தில் கடித்தது.

http://www.youtube.com/watch?v=jhdE1DqUv1M

சிறிது நேரத்தில் சிலிகான் விஷம் ஏறி அந்த பாம்பு செத்து விழுந்தது.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாடல் அழகி ஒரிட் பாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மேலும் வாசிக்க…

1

இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:-

சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் "கான்வாய்' 9.30 மணிக்கு கோட்டைக்கு வந்தது. நுழைவாயிலுக்குள் நுழையும் போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்து முதியவர் ஒருவர் ஓடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரிப்பதற்குள், "தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள், முதல்வரிடம் புகார் கொடுத்தும் லஞ்சம் கேட்கிறார்கள்' என்று கத்தியபடியே கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, முதல்வரின் கார் மீது வீசினார். காற்றில் பறந்த வேட்டி, பாதுகாப்பு காரின் மீது விழுந்தது.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை பிடித்து, துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.கே., நகரில் வசிப்பவர். பெயர் நாராயணன்(64); விவசாயி. இவருக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்திற்கு பட்டா கேட்டு, இருபது வருடங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா தருவோம் என்று அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இவரது மகள் வாங்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்துகிறார். முதல்வரிடம் புகார் கொடுத்தும், பட்டா கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இப்படி செய்து விட்டேன்' என்று தெரிவித்தார். ண்எனினும், கோட்டை பாதுகாப்பில் "குறட்டை' விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார் யார், என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதை வாசிக்கும்போது தெரியவரும் ஒரு விசனத்துக்குறிய உணமையைப் பார்த்தீர்களா:
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . 1 மறுமொழி#

2

ஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக!

நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் மாற்றுக்கு என்ன அவசியம்? காரணங்களை ஆய்வோம்:-

  1. இன்றைய எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு எல்லாம் தோண்டத்தோண்ட சுரக்கும் கேணிபோன்ற நிலை கடந்து, "சரக்கு தீர்ந்தது அடுத்த கிணற்றைப் பார்" என்ற நிலைக்கு ஆளாகிக்கொண்டுள்ளன. ஆம் இந்த எரிபொருட்கள் வரண்டு போகக் கூடிய நிலை சீக்கிறமே ஏற்படும் அபாயம் உள்ளது
  2. இந்த எண்ணை உலகில் சில நாடுகளில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கிறது. ஆகையால் எரிபொருள் பற்றாக்குறையுள்ள இந்தியா போன்ற பல நாடுகள் தங்கள் வருமானத்தில் பெருமளவை பெட்ரோல் இறக்குமதியிலேயே செலவிட வேண்டியுள்ளது.
  3. இதுபோல் எண்ணைவளம் மிக்க உள்ள நாடுகள் அரசியல் மற்றும் மத உணர்வு தொடர்பான காரணங்களூக்காக திடீரென்று ஏற்றுமதியை குறைக்கலாம், அல்லது நிறுத்தியும் விடலாம். அப்போது இவர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் கதி என்ன!
  4. இந்த நாடுகளும், எண்ணை சுத்திகரிப்பு முதலான தொழிற்களில் பெருமளவு ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்திற்கு விலையை ஏற்றிவிடலாம். அப்போது ஏழை நாடுகள் திவாலாக வேண்டிய நிலை ஏற்படும்.
  5. மேலும் எண்ணையை பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைக் கோரலாம். அல்லது நம் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நீட்டலாம்.
  6. முக்கியமாக, இந்த எண்ணை டாலர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பய்னபடுவதை இப்போதெல்லாம் கண்கூடாகப் பாற்கிறோம்!

மேற்கூறிய காரணங்களால் இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் சேமிப்பு மற்றும் மாற்று எரிபொருள் என்ற திசையில் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதோடு, அவற்றில் பயன்பாட்டையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
மேலும் நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

நாம் இம்முயற்சியில் இதுவரை கடந்து வந்துள்ள பாதை இது:- மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . 2 மறுமொழிகள்#

0

வண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள்!

உதிர்வதற்குமுன் உதிர நிறம் ஏன்! மறையும்முன் ஏனிந்த மாற்றம்!

மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண முடிகிறது! ஏன் இந்த இலைகள் இலையுதிர் காலத்திற்குமுன் தங்கள் இயல்பான பச்சை நிறத்திலிருந்து பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறத்திற்கு மாறுகின்றன? இனி வரப்போகும் குளிர்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது என்பதால், பச்சையத்தால் பயனில்லை என்று அதனை மறைத்து வித்தை காட்டுகிறதா இயற்கை?

விடைகளை இங்கே, இங்கே காணலாம். இதனைப் பற்றிய கவிதை ஒன்றை இந்தப் பதிவில் வாசியுங்களேன்!

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . மறுமொழி இடுக#

13

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

Village vista
9 photos
 


0

அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.

"ட்சூனாமீ" என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!

ட்சூனாமீஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.

இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. "ட்சூ" (துறைமுகம்), "னாமீ" (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.

ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித "தப்புப் பாளங்கள்" (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் "ட்சூனாமீ" என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?

அதுதானே இங்கு நிகழ்ந்தது!

சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?