என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”
ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!
ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!
அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?
இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.
என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ: மிகுதியையும் வாசிக்க »
எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். "ஆத்தாடி மாரியம்மா!" என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!
பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, "இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!"
பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!
பின்னல் போய் வந்தது "போனி டெயில்". பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!
உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!
படிய வாரிய தலை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய வளையல்
கட்டிக் கொள்ள சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகம் இல்லா விரல்கள்
கவலை இல்லா சிரிப்பு
நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!
ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…
இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் – அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.
இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.
அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் – ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.
அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.
மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?
ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. "Last laugh" குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் கையில்தான். இந்த உண்மை சரித்திர நிகழ்வுகள் முதல் அன்றாட நடப்புகள் வரை மீண்டும் மீண்டும் பலவிதங்களீல் நிருபிக்கப்படுன்றது.
சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் திருமணத்தன்று ஓடிப்போய் தன் பழைய காதலனைக் கைப்பிடித்திருக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் இவளுக்காக பட்டுப் புடவை, தாலி, மோதிரம் போன்றவற்றிற்கு ஏராளமாக செலவழித்து விட்டு, தாலியும் கையுமாக பேஸ்தடித்துக்கொண்டு நிற்கிறான் மணமகன்!
கடைசியில் அவன் காவல்துறையில் புகார் கொடுத்தபிறகு பெண்வீட்டார் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய இன்றைய தினமலர் செய்தி இதோ:-
அரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ.
இதோ அறிவித்துவிட்டேன் – நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை!
ஆமாம், யார் உண்மையை அறிவிப்பார்கள்? ஒருவேளை மனசாட்சி குடையட்டுமே என்று எண்ணினார்கள் போலிருக்கிறது!
சௌதியில் பெண்கள் நிறைய வரதட்சிணை வாங்குவதாக சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு திசைகள் இதழில் படித்த ஞாபகம். அந்த நாட்டில் இதுபோன்ற சட்டம் பெண்களுக்கு மட்டும் என்று இயற்றுவார்கள் போல!
சமீபத்திய மறுமொழிகள்