பெண்கள் ஜாக்கிரதை

சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:

  1. இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் – அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
  2. ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
  3. ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
  4. ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.

இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.

அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் – ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.

கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.

3 Comments


  1. //ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.//

    சரியாக சொன்னீர்கள்…!!!

Leave a Reply

Your email address will not be published.