விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
உங்கள் வரவு நல்வரவாகுக!
தமிழில் வலைவீசுகிறேன் பேர்வழி என்று என்னென்னவொ ஜித்து வேலையெல்லாம் செய்துதான் பார்க்கிறேன். முதல்ல "ந்யூக்கிளியஸ்"-ல போட்டேன். ஆனா, அதில என்னமோ RSS ஓடை திறக்கல்ல. காசி அவர்கள் கூட மடல் அனுப்பியிருந்தார்.
இதுக்கு இடையில தவறுதலா blog-ன் database-ஐ "தொப்பு"னு "drop" பண்ணிட்டேன். அதனால முன்னாடி எழுதினது, மறுமொழிகள் எல்லாம் போயே போச்!!
சரி, இது ஒரு சவால். பார்த்தூடலாம் ஒரு கை அப்படீன்னு, லேட்டஸ்ட் BLOG:CMS try பண்ணினேன்.
ம்ஹூங்! அதைத் தமிழாக்கணும்னா ஒரு கிலோ பீம புஷ்டி அல்வா, ஒரு லிட்டர் A 1 ஜிகிர்தண்டா இதெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும் போல இருந்தது. அதனால இதெல்லாம் நமக்கு சரிப்படாதுன்னு, இப்போ b2எவல்யூஷன் – ல எம்பிக் குதிச்சிருக்கேன். "gettext", ".po", ".mo" – இதுமாதிரி டெக்கினிகல் மேட்டரிலெல்லாம் இறங்கி (கினா. சங்கர் கூட இதைப்பத்தி பேசினார்.) , தமிழ்ல மொழிபெயர்க்க ஆரம்பிச்சு முழங்கை வரையில கிரீஸை பூசிக்கிட்டேன்!
சீக்கிரம் மீண்டு வந்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு!
அடிக்கடி வாங்க, என்ன!
(Update: தற்போது குடி புகுந்துள்ளது “வோர்ட்பிரஸ்” மென்பொருளில்!)
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஆக 27th, 2004. மறுமொழி இடுக.
இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.
எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – "சூடு" வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). "பட்"டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் "no-holds-barred" event-ல் தங்கப்பதக்கம் வாங்கி "வையகமெல்லம் வாரியிறையடா தமிழா" என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது. கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!
இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன. ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், "நடைபாதை என்றால் என்ன" என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)
சார்ந்த வகை: சிங்காரச் சென்னை :: நாள்: ஆக 30th, 2004. 9 மறுமொழிகள்.
"விண்டோஸ்" இயங்குதளத்தை உருவாக்கும் "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனம் இப்போது ஒரு புதிய குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறது.
இதைப்பற்றி இங்கே பேசியாக வேண்டிய கட்டாயம்? ஏனென்றால் நீங்கள் எல்லொரும் கணினி வழியாகத்தானே இதை வாசிக்கிறீர்கள்!
மைக்ரோஸாஃப்ட் கம்பேனியின் நடைமுறைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்களோ என்ற பயம் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் இதோ ஒரு புதிய கொடூரம்!
ஜன்னல் இயங்கு தளத்துடன் கைகோத்தபடி உங்கள் கணினியுள் குடியேரும் "இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர்" என்ற உலாவி (browser) ஒரு குறைப்பிரசவம்! அதில் உள்ள சல்லடைக்கண் போன்ற ஓட்டைகளை எண்ண உங்கள் வாழ்நாள் போதாது. வழியில் போகிற வருகிற விஷக் கோப்புக்களையெல்லாம் உங்கள் கணினியுள் அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரை தொங்கலில் விட்டுவிடும். ஆனால் வலை மேய்வோரில் 95 சதம் பேர் அந்த உலாவியில் சவாரி செய்வதால் மென் பொருள் பாதுகாப்புத் துறையில் வணிகம் செய்யும் பலர் கணிசமான லாபம் ஈட்ட இது ஒரு காரணமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் நானும் சமர்த்து என்று காண்பிக்க "சேவைப் பொதி", "பாதுகாப்பு அறண்" என்று கொடுத்துக் கொண்டு வருகிறது.
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 24th, 2004. 1 மறுமொழி.
இன்று இந்தியாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கணினி மென்பொருள்தான். "எல்லா மார்க்கங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன, எல்லா நதிகளும் ஒரே கடலில் கலப்பது போல" என்கிற cliché (இந்தக் கூற்றை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை – நீ வேண்டுமானால் என்னுடன் சேர்; அப்போதுதான் நாம் இருவர் வணங்கும் கடவுளும் ஒருவரே எனக்கொள்ளலாம் – என்பது சிலர் வாதம்!) போல எந்தப் படிப்பு படித்தாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ அல்லது மென்பொருளைக் கையாண்டு வேறுபல சேவைகள் செய்யும் நிறுவனத்திலோ வேலைக்கு சேருவதுதான் எல்லோருடைய குறிக்கோளும். அப்பத்தான் நாலு காசு பார்க்க முடியும், திருமண மார்க்கெட்டிலும் மதிப்பிருக்கும். இதுதான் இன்றைய நிலை. பெரிய நிறுவனங்கள், ஒருசில பெயர் பெற்ற கல்லூரிகளுக்கே சென்று மெகானிகலோ, எலெக்ட்ரிகலோ, பாறாங்கல்லோ (அல்லது டி.வியில் வரும் "இந்த நிகய்ச்சியை அலிப்பவர்கல்"லோ!) யாராயிருந்தாலும் வலைபோட்டு வாரி எடுத்து (troll) சேர்த்துக்கொள்கிறார்கள்.
இந்தத்துறையில் பெருமளவில் வேலை பார்ப்பவர்கள் (மருத்துவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் போல இவர்களுக்கு அடையாள அட்டைகள் – இரண்டுமே கழுத்தில்தான் தொங்கும்!) கூட்டம் நிறைந்திருப்பது பெங்களூரில்தான். அமெரிக்காவிலிருந்து outsourcing செய்யவேண்டும் என்று நினைத்தவுடன் அவர்கள் மனதில் முதலில் தோன்றும் இலக்கு பெங்களூரே. இந்தியாவின் பல மானிலங்களிலிருந்தும் இங்கு வந்து e-குப்பை கொட்டுகிறார்கள்! மேலும் அமேரிக்காவில் நித்திய கண்டமாக எப்போது pink slip கொடுப்பார்கள் என்ற பயத்தில் தூக்கத்தை இழப்பதைவிட அங்கிருந்து ஓடும் வேலைகளை இங்கு வந்து பிடித்துவிடலாம் என்று நாடு திரும்பும் techies கள் வீடு தேடுவதும் பெங்களூரில்தான்! இதனால் ஏற்பட்ட விளைவுகள் சில:- மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 27th, 2004. 7 மறுமொழிகள்.
இப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது!
அமெரிக்காவோ இன்றைக்கு "U.S of A, Made in China" என்று மாறிவிட்டது. Macy's, Wal-Mart, B.J's, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் சீனாவில் செய்தவைதான். கூடிய சீக்கிரத்தில் முழு உலகத்துக்கும் உற்பத்தி மையமாக சீனா ஆகக்கூடிய நிலை உருவாகலாம். இதற்குக் காரணம் இன்றைய சீனா கம்யூனிஸத்தையும் முதலாளித்துவத்தையும் கலந்து ஒரு cocktail செய்து, மக்களை அடக்கி ஒரு கட்டுக்குள் வைக்க கம்யூனிஸத்தையும், பன்னாட்டு முதலீடுகளை வரவேற்க கேபிடலிஸத்தையும் உபயோகித்து, இருமுகம் கொண்ட அமைப்பாக விளங்குவதுதான். இன்னும் சிலர் ஒரு cynical view-வைக் கொண்டிருக்கிறார்கள் – சீனாவில் பொருள் உற்பத்தியெல்லாம் பெரும்பாலும் சிறைகளில் செய்யப்படுவதால் உழைப்பூதியச் சிலவுகள் almost a zilch என்று! இந்தியாவிலும் சிறுகச்சிறுக சீனாவின் தயாரிப்புக்கள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. Thomson (டின்-டின் ரசிகர்களுக்கு: இது Thomson without "P"!) TV நிறுவனத்தை ஒரு சீனக் கம்பெனி வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்திய மென்பொருள் நிறுவனங்களும் சீனாவில் போய் தங்கள் மையங்களைத் துவங்க போட்டி போட்டுக்கொண்டு செல்கிறார்கள். மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 30th, 2004. 4 மறுமொழிகள்.
நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது! இவர்களின் கியாதியைப் பற்றி டிவியில் தினந்தோரும் அவர்களின் பக்த கோடிகள் புராணங்களை அடுக்குகிறார்கள். கையை ஆட்டினால் விபூதி, கக்கினால் கிடைப்பது மோதிரம், லிங்கம் முதலிய வஸ்துக்கள். எல்லாம் "ஜாதுகர்" பார்ட்டிகள்! ரிமோட்டிலேயே ஆபரேஷனெல்லாம் கூட செய்து விடுகிறார்கள் இந்த confidence tricksters!
இவர்களெல்லாம் காலத்துக்கேற்றபடி மாறவேண்டும். எவ்வளவு நாட்கள்தான் கக்கிக் கொண்டிருப்பார்கள்! இந்த ஸைபர் யுகத்தில் தோன்றியுள்ள புதுவகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?
நார்ட்டன், அவன் முப்பாட்டன் எல்லோருக்கும் பெப்பே என்று நம் கம்ப்யூட்டர்களுக்குத் தண்ணி காட்டும் வைரஸ் மற்றும் அவைகளின் ஒன்று விட்ட சகோதரி(!)களான trojan, worm, spyware, macros போன்ற ஸைபர் கிருமிகளை அழிக்க இந்த "மன்மத ராசா" சாமியார்கள் தங்கள் ஆன்மீக வலிமையைத் திருப்பி விட்டால் ஐ.டி உலகமே செவ்வாடை, பச்சை ஆடை, மஞ்சள் ஆடை பூண்டு (அல்லது ஆடையில்லாமல்) இவர்களுக்கு காவடி எடுக்கத் தயாராயிருப்பார்களே!
இந்த கம்பூட்டர் பாபாக்கள் "பூ.." என்று ஊதியோ, டான்ஸ் ஆடியோ, கொஞ்ச வயசுப் பாப்பாக்களுடன் வந்து கும்மி அடித்தோ, நான்தான் அம்மா, நான்தான் அம்மா பகவான் என்று டிவியில் போஸ் கொடுத்தோ அல்லது எதோனும் ஒரு வகையில் பஜனை(!) செய்தோ இந்த வைரஸ் அழிப்பு யாகம் தொடங்கலாம். வைரஸ்களுடன் சேர்த்து லைனக்ஸ் உட்பட்ட எல்லா திறந்த நிரல் மென்பொருட்களையும் அழிப்பதாக இருந்தால் இந்த வேள்வி அட்டகாசங்களின் முழுச் சிலவையும் தான் ஸ்பான்ஸோர் செய்வதாக "ரோக்கா கதவு"க்கார பெருங்கிழார் முன்வர வாய்ப்புள்ளது!
அனைத்து சாமியார்களுக்கும் இது ஒரு சவால்!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: அக் 13th, 2004. 2 மறுமொழிகள்.
எஸ்.வி.வி-யின் "உல்லாஸ வேளை"யில் "சங்கீதப் புளுகு" பற்றி எழுதி யிருப்பார்.
கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட "ஸ்டிரைட் ட்ரைவ்", "கவர் ட்ரைவ்" என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, "தப்புத்"தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல பீலா விடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தெரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) "இது என்ன" ராகம்" என்று கேட்டால் ”ஏதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று நினைத்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடப்படும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் சுத்த "ஞான சூனியம்" என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும் அபயம் இருக்கிறது!
இதைத் தவிர்க்க என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். திடீரென்று, "இது பேகடாவா, தர்பாரா" என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர் தலையில் அடித்துக் கொண்டு, "ரெண்டுமில்லை, கீரவாணி" என்றால், "ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்" என்பார். இதனால் அவர் ”இது ஒரும் வெத்து "ஃபிலிம்" கம்பெனி. சும்மா பந்தா காட்டுது” என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ”ஆஹா, இவ்வளவு ராகத்தின் பெயரெல்லாம் இவர் தெரிந்து வைத்திருக்கிறாரரே" என்று நினைக்கலாமல்லவா. அதற்குத்தான் இந்த டுபாக்கூர் வேலை.
இப்படியும் சிலபேர்!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: அக் 15th, 2004.
தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது "கட்டுக்கட" மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.
புரிந்தவர் சென்றனர், வென்றனர்! 
சார்ந்த வகை: கணினி :: நாள்: அக் 17th, 2004. 1 மறுமொழி.
ஐயகோ, இதென்ன அநியாயம்!
வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டார்களாமே! அதுவும் முன்னாள் பிரதமரை! நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதா? "கியூ" முறையெல்லாம் ஓட்டுப்போட மட்டும் உரிமையுள்ள பொது ஜனத்துக்கு மட்டும்தானே. மாஜி பிரதமர் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு ஏது வரிசை? பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைத்து அனைத்துச் சட்டங்களையும் ஒதுக்கி அவர்களுக்கு வேண்டுவன செய்வதுதானே அலுவலர்கள் கடமை?
வாகா எல்லையில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களை சுங்க இலாக்கா அதிகாரிகள் வரிசையில் வரும்படி கூறிவிட்டார்களாம். என்ன அவமானம்!
அதுமட்டுமா, 25 நிமிடங்கள் கழித்து அவருடைய இருக்கைக்கு வந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று எப்படி சொல்லப்போச்சு. அடடா, பெருத்த அவமானம்!!
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அலுவல் பார்க்கும் அதிகாரிகள் எவ்விதமான சூழ்நிலையில் வேலை பார்க்கிறார்கள், அவர்களுடைய pressure situation என்ன, சிறிதுகூட தவறு நேராமல் "கம்பிமேல் நடப்பது" போன்று (cliché be excused!) பணியாற்றவேண்டிய நிலை. இவ்வளவுதூரம் கடைமையுணர்ச்சியுடன் இருக்கின்றார்களே என்று பாராட்ட வேண்டியவர், "அவமானம், அவமானம்" என்று குதிக்கிறாரே, இது என்ன demo-crazy!
ஆமாம், இவர் பிரதமராக இருக்கும்போதுதானே பிரதமரின் கார் வரக்கூடிய வழியில் "வாக்கிங்" போனார் என்று ஒரு அப்பாவி மனிதனை செக்யூரிட்டி ஆட்கள் பிரட்டி, பிரட்டி அடித்தார்கள்?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: அக் 18th, 2004. 1 மறுமொழி.
சமீபத்திய மறுமொழிகள்