‘gnb’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

ஜிஎன்பி நூற்றாண்டு விழா

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

GNB practicing at homeஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.

மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.

இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.

இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,
:: (பார்வை 397 முறை) ::

இப்படியும் சில வித்துவான்கள்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

எம்.எஸ்.சௌந்தரம்எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 766 முறை) ::

ஜிஎன்பியின் காம்போதி விருத்தம்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

மறைந்த கர்நாடக இசை மாமேதை ஜிஎன்பி அவர்கள் சகுந்தலை திரைப்படத்தில் பாடியுள்ள நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த காம்போதி ராக விருத்தத்தைக் கேட்டு மகிழுங்கள்!

இந்தத் திரைப்படத்தில் ஜிஎன்பி அவர்களுடைய குரல் வளம் முழுதும் வெளிப்படாமல் தடுக்க நிகழ்ந்த பல சதிகளைக் கடந்து, இந்த ஒரு பாடலிலேயே அவர் தன் இசையின் வீச்சை வெளிக்கொணர்ந்திருப்பதைக் காணலாம்.


YouTube - வீடியோவைக் காணுங்கள் GNB

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1035 முறை) ::

கர்நாடக இசையும் தமிழிசையும்!

இசை :: 4 மறுமொழிகள் »

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 982 முறை) ::

இசையுலக இளவரசர் ஜி.என்.பி

இசை :: மறுமொழி ஒன்று »

கந்தர்வர்Prince charming தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான "லலிதா ராம்" அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். "நேசமுடன்" வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.

இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:
விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1325 முறை) ::

 

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 107 access attempts in the last 7 days.