நான் யார்?

எஸ்.கே

(இதில் குழப்பமேயில்லை!)

  1. என் வலைப்பதிவுகள்:

யார்பா நீ?

எஸ்.கேநான் நேர்மையாக சிந்திப்பவன். கூடவே ஓரளவு பொறியியலும் அறிந்தவன்.

சொந்த ஊர்?

திருவாரூருக்கும் நாகைப்பட்டிணத்துக்கும் இடையேயுள்ள கீவளூர் (கீழ்வேளூர்).
ஆனால் அங்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள எவரும் இல்லை. எனக்குச் சொந்தமானது என்றழைக்க அங்கு எதுவும் மீதமில்லை. ஆனால் ஆண்டுக்கொருமுறை அட்சயலிங்க தரிசனம் (“கேடிலியை நாடுமவர் கேடிலாரே” – அப்பர்), மற்றும் அங்குள்ள அனந்தீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகர் மூலம் திங்கள்தோரும் வழிபாடு. ஊர் பெயரைக் கேட்டவுடன் எழும் உள்ளக் கிளர்ச்சி. இவைதான் எங்களை இணைக்கும் தொப்புள் கொடி!

வேலை “பார்ப்பது” :

இரெயில்வே துறையில். இயந்திரப் பொறியாளன், ஆனால் கணினித் துறையில் ஒதுங்கியுள்ளேன் – Management Information System. இதனை MISmanagement என்றும் சிலர் அழைக்கிறார்கள். மேலாண்மை தவிர நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், ஊரூராகச் சென்று செமினார்கள் நடத்துதல், பாக்கி நேரம் வெள்ளைத்தாள்களில் மை சிந்துதல். கோப்புகளை நகர்த்துதல். மீதமிருக்கும் நேரத்தில் அலுவலக அரசியல் இருக்கவே இருக்கிறது! ஆங்.. மறந்துட்டேனே, கம்ப்யூட்டர், ஆப்டிகல் ஃபைபர் மூலமாக ப்ராட்பேண்ட் இதெல்லாம் கிடைக்கும்போது சும்மா இருக்க முடியுமா? 😉

கனவுகள் :

என் கண்ணெதிரே எண்ணைக்கும் தண்ணீருக்கும் மாற்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். என் வாழ்நாளை பின்னோக்கிச் செலுத்தி (rewind my life), என் குழந்தைகளுக்கு நான் கொடுக்க மறுத்தவைகளையும், மறந்தவைகளையும் கைநிறைய அளித்து அவர்கள் மகிழ்வதைக் கண்நிறையக் காணவேண்டும்.

பிடித்தவை :

அழகு, நேர்த்தி, நேர்மை, செஞ்சீர்மை, சுத்தம், சிரிப்பு, நட்பு, கர்னாடக இசை (ஜி.என்.பி-யின் பக்தன் நான்), ஏ.எம். ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் முஹம்மது ரஃபியின் தேன்மதுரக் குரல் (“திவானா ஹுவா பாதல்” – கேட்கிறதா?), குட்டிக் குழந்தைகளின் கன்னத்தில் குழிவிழும் கள்ளமற்ற சிரிப்பு, “தம்மக்களின்” மழலை, நல்ல ஆங்கிலம், பி.ஜி.வுட்ஹௌஸ், பார்கின்ஸன், ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ், டக்ளஸ் ஆடம்ஸ், ஸ்காட் ஆடம்ஸ், கல்கி, தேவன், சாவி, சுஜாதா – தவிர, இணைய நுட்பங்கள்.

வெறுப்பது:

நம் வாழ்வின் மீது கடிகாரம் கொண்டுள்ள ஆதிக்கம்! (வக்த் கீ கைத் மேன் ஜின்தகீ ஹை)

பழைய நினைவுகள்:

“கரப்பு நக்கிய புருவம், கடைசி நேரத்தில் கீறிவிட்டு அனுப்பிய கண்கள், மைதானமான நெற்றி, ஏடாகூடமான ஷேப்பில் “வாணக்குழாய்” போன்ற மூக்கு, அசட்டுச் சிரிப்பு, “ஏமாந்த சோணகிரி” போன்ற தோற்றம் (“ஆ பைல் முஜே மார்”) – இத்தனையும் தாண்டி என்னை ஒரு பெண் காதலித்தாள் ஒரு காலத்தில். ம்ம்ம்ம். அது ஒரு இனிப்பான, உவர்ப்பான, துவர்ப்பான, பின் கசப்பான அனுபவம். அதையெல்லாம் ஏன் ஐயா கிளருகிறீர்கள்?

இலக்குகள் :

நாம் கடவுளாக வழிபடும் அனைவரும் வேற்றுலக வாசிகள் என்னும் எரிக் ஃபான் டேனிகன் (Erich von Däniken, author of “Chariots of the Gods?”) கூற்றுடன் முழுமையாக உடன்படுபவன் நான். அந்தக் கருத்தை நிரூபிக்க மேலும் சான்றுகள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதன் கிளையாகத் தோன்றிய பற்பல கோட்பாடுகளைப் பற்றிய சிந்தனை. சிவலிங்க உருவைப்பற்றிய சரியான விளக்கம், Vedic embryology – இப்படிப் போகின்றன என் இலக்குகள்.

மேன்மேலும் புத்தகங்கள் வாங்கிச் சேர்க்காமல் அந்துருண்டைகள் துணையோடு பரணை அலங்கரிப்பவைகளை எப்படியாவது வாசித்து முடிக்க வேண்டும். தேடித்தேடிச் சேர்த்த ஆடியோ கேஸட்டுகளின் நாடாவில் ஒட்டியிருக்கும் இரும்புத்துருவின் முதுகின்மேல் காந்தக் கோடுகளாகப் பின்னிப் பதிந்திருக்கும் பழைய இசைப் பதிவுகள் டிஜிடல் முறைக்கு உருமாற்றம் செய்யவோணும் (மற்றும் ஸிடி, டிவிடிக்களையும்). என்றாவது ஒரு நாள் external hard disk–களில் பதுங்கிக் கிடப்பவைகளை ஒருமுறையாவது எட்டிப் பார்க்க வேண்டும்!

அப்பாடி, கொள்ளை சோலி கெடக்கு டோய்!

33 Comments


  1. I was very happy to see that one more person took eric von danikken so seriously and do research on him.. I do have a lot of thoughts about the gods based on his theory..

    nice to know you

    regards

    vishy


  2. Dear SK

    I have been reading your messages (articles) in RKK, Tamiloviam, Blog. All your writings are exceptionally good. I like the way you introduce yourself. Please write more.

    Anbudan
    Sekar


  3. Why are you not writing in tamiloviam.com, is the article finished?

    Really wonderful articles you have presented and great thinking too…..

    Mohan


  4. Thanks a bundle, Mr. Mohan for your encomiums.

    Yes, I am continuing my articles on Tamiloviam from Next week. Your encouraging words have given me more enthu!

    Regards
    S.k


  5. Dear S.K Sir,

    Your articles are really wonderful.That too your articles regarding managing people is really awesome. Nowadays its very hard to see true people(கலிகாலம்..). Most of the times we have to pretend to take advantage of some people. Sometimes it makes me feel bad and depressed to flatter someone to get things done.

    Learnt a lot from your articles and trying to practice in real life.

    Thanks & Regards,
    Mohan


  6. நண்பர்களே,

    “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்…..” தொடரில் என் அடுத்த பகுதி இந்த வார தமிழோவியம் இணைய இதழில் இங்கே வாசிக்கலாம்.

    தங்கள் கருத்துக்களை தவறாமல் பதிக்க வேண்டுகிறேன்.


  7. sir, I could not read your blog since my computer does not support tamil font. how do i read your blog.

    how do i write blog in tamil using wordpress. Could you help me my email id is johnpeter @ gmail.com

    advance thanks


  8. உங்கள் பதிவை இன்று தான் பார்க்கிறேன். மகிழ்ச்சி. என் பதிவுக்கு வந்து உதவுவதாக சொன்னதற்கு நன்றி. உங்கள் பல பக்கங்களில் மறுமொழிப் பெட்டிகள் மூடி இருப்பதால் இங்கு மறுமொழி இடுகிறேன். பொருத்தமற்று இருந்தால் பதிப்பிக்க வேண்டாம். கீழே உள்ளது போல் preview பார்க்கும் வசதி, ஒவ்வொரு இடுகையும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் வசதி ஆகியவற்றை wordpressல் எப்படி செய்வது? நன்றி.


  9. ரவிசங்கர்,

    உங்கள் கேள்விகளுக்கு பதில்களை ஒரு தனி இடுகையாக பதிவு செய்கிறேன். ஓரிரு நாட்கள் பொறுத்திருக்க வேண்டுகிறேன்.

    வருகைக்கு நன்றி.

    எஸ்.கே


  10. wow, really amazing intro about you, simple and nice…


  11. I am touched by your collection of stories pictures/videos on the Indian Malaysian rebellion on 25/11/07. Yengo oru thamizhan yengalaiyum ninaithu parkiran yendra mana niraivu kidaikirathu. Thaveri ungal valaiyil vilundhen adhil puthayalai kanden. Mika Nandri. Valzhthukal


  12. hi..

    உங்க போஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.
    நீங்க சென்னையிலேயே இருக்கீங்க ?


  13. உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.

    நான் சென்னையில்தான் இருக்கேன்.

    எஸ்.கே


  14. HAI DEAR FRIEND I REALY LIKE YOUR WAY OF WRITING AND PRESENTATION
    WELLDONE KEEP UP THE GOOD WORK. I WISH U THE BEST


  15. thanks sir , old is gold ,happy to enjoy your thunpam neerkaiyil yarl edduthu . My moms favourite song . she passed away in 1990 my dearest mom. I am from Srilanka . living in Canada .sweet songs makes me feel good,calm ,and happy. Once again thanks a lot.bye , nilaa


  16. நிலாமதி,

    ஐயத்திற்கு இடமின்றி இருமுறை நிலாவை தன் பெயரில் கொண்டுள்ள நிலாமதிக்கு என் நன்றிகள்!

    எஸ்.கே


  17. it is said better late than never – Exactly how I felt after browsing through your blog sir. I am a firm believer of Eric Von’s theory and am happy to note there is somebody who is sharing my view, in a much stronger way. Please let me know the details of the book you had mentioned. Am interested.
    thanks and with regards
    mythili


  18. தாங்கள் எழுதுந்ந ரீதி அஸ்ஸல் ஆயிட்டுண்டு… கொள்ளாம். மாத்ரமல்ல, தாங்கள் அப்லோட் செய்திட்டுள்ள கட்டுரைகள் ஒக்கெ வளரெ நந்நாயிட்டுண்டு.. இன்பொர்மேட்டீவ்… நாராயண.. நாராயண!


  19. உங்கள் வலை மிக்க நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.


  20. அன்புள்ள சிம்பான்ஸி

    வணக்கம்.

    உங்கள் வலை வீழ்ந்த மீனாய் நான் மிதந்தது சில மணித்துளிகள். மீண்டும் மீண்டும் வலை சிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. உங்களை பற்றிய விவரங்களைச் சொல்லியிருக்கும் முறை தான் என்னை உங்கள் வலை பதிவில் சில வரிகள் எழுதத் தூண்டியது. மீண்டும் அவகாசம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளை வாசித்து விட்டு எழுதுகிறேன். உங்கள் பழைய நினைவுகளில் கரப்பு நக்கிய புருவம் பற்றிய கோடிடலும், கண்ணைக் கீறி அனுப்பிய பார்வையும், நமை துரத்தும் கடிகார வெறுப்பும் செய்ய விரும்பியும் செய்ய இயலாத ஆதங்கமும் கலந்த இலக்கும் கவர்ந்தது உண்மை.

    தொடர்பில் இருங்கள்

    அன்புடன்
    தாரா கணேசன்


  21. தங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் தங்கள் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி, திருமதி தாரா கணேசன்.

    தொடர்பில் தொடர விழைகிறேன்.

    வணக்கத்துடன்,

    எஸ்.கே


  22. introduction evlow venuma?


  23. Ok.

    I’ll trim it a wee bit (only a bit, since I am a firm believer in verbosity and hyperbole!)

    Thanks for your visit, Shanti.

    S.K


  24. sir seriously your website is superb sir , you are genious , its a glad to spend three years as your student sir


  25. sir unga life history and bio data ippa than padichen.. ivalo irruka :p sollave illaye sir neenga :p


  26. Hello sir, I read post on making ildis titled ‘Sirundiyin sigaram’ and deeply impressed about the way its written. I’m very thankful for the elaborate narration and so many tips and care for making idlis. My mother and mother in law makes very good idlis. Even after making so many inquiries with them I coulndn’t succeed in making spongy idlis. Here are few of the mistakes in the idlis I make:

    1. I live in a hot place, yet my idli maavu doesn’t have air bubbles like the ones you mentioned. The maav is fermented well and it raised up well, yet its not fluffy like how you mentioned.

    2. The idlis I make are soft on the corners but they extremely hard in the middle.

    What could be the mistake I’m making. I grind flour with so much of care, still couldn’t succeed in making softer idlis. I use the same ratio of rice and urad dhal as you had mentioned and they are of good quality too.

    Please ask your wife to guide me.

    Hoping to make softer idlis for my kids.

    Thanks,
    Sudha


  27. ஆ அ அ!!


  28. I like that intro sir!!

    Nice sir!!

    Seetharaman 🙂

Leave a Reply

Your email address will not be published.