துளித்துளி

விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!

என்ன நடக்குது இங்கே

என்னைச் சுற்றி நடப்பவை.

2

நிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்!

Sacred heart on a full stomach

2

"பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்."

மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!

இதோ அந்தக் கேள்விகள்:-

  1. போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?
  2. பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?
  3. மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?
  4. ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?
  5. ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?
  6. காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?
  7. கென்னடியைக் கொன்றது யார்?
1

உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!

  1. "ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்" என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
  2. இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
  3. கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?
  4. நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!
  5. கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் – சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?
  6. பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?
0

செய்தி: தினமல்ர் 2009-04-04

செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். பின் சீட்டில் அமர்ந்திருந்த முகையூரைச் சேர்ந்த வக்கீல் அன்பழகன் அவரை உரசியதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அவர் அன்பழகனை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டருக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அன்பழகன் மானபங்கப்படுத்தியதாக வனிதாகுமாரியும், சில்லரை கேட்டதால் கண்டக்டர் தாக்கியதாக அன்பழகனும், அன்பழகன் தாக்கியதாக தங்கவேலும் தனித்தனியே சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா தன்னை தாக்கியதாக வக்கீல் அன்பழகன் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிப்பதற்கான மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

0

தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனை செய்த ஒருவர் தேள்களை தன் உடலில் கொட்ட விட்டதால் விழுப்புரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட் டது.

சாதாரணமாக தேள் கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி நீடிக்கும். கொடிய விஷம் உடைய நட்டுவாக்கலி கடித்தால் சில மணி நேரத்தில் விஷம் தலைக்கு ஏறி உயிருக்கே ஆபத்து ஏற்படும்.இந்த தேள் கடிக்கு கிராமப்புறங்களில் பல்வேறு விதமான விஷ முறிவு மருந்துகள் செய்யப்படுவது உண்டு. தேள் கடித்த இடத்தில் கல் ஒன்றை வைத்து கட்டி விஷத்தை எடுத்தவுடன் பாலில் அந்த கல்லை பாதுகாப்பாக வைப்பார்கள்.இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் தேள் கடிக்கு இன்னும் முறையான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேள் கடி, பூரான் கடிக்கு மருந்து கொடுப்பதாக நகர்ப்புறங்களில் பலரும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதே போல விழுப்புரம் பகுதியில் நேற்று திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தேள் கடிக்கு மருந்து விற்பனை செய்தார்.

தனது மருந்து சக்தியை நிரூபிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட தேள்களை பிடித்து தனது கைகளில் கொட்டுமாறு செய்து பிறகு அந்த விஷத்தை (பாதரசத்தால் தயாரித்ததாக கூறப்படும்) தனது கண்டுபிடிப்பு மருந்தை தேள் கொட்டிய இடத்தில் தடவி விஷம் முறிந்ததாக கூறுகிறார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகள் தொடர்பாக மனு கொடுப்பதற்காக ஏராள மான பொதுமக்கள் வந்திருந்த னர். இந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளையும் மறந்துவிட்டு இந்த தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இந்த மருந்தை அனைவரும் வாங்கிச் சென்றனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே தேளை தனது உடலில் கடிக்க விட்டு விஷ முறிவு மருந்தை விற்பனை செய்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி

1

சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

அடுத்து நிகழப்போவது என்ன?

செயல் வீரரான கலைஞர், இந்தச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதில் தானே முன்னோடியாகத் திகழ, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொந்தமான "கலைஞர் டிவி" மற்றும் இப்போது சண்டை சச்சரவெல்லம் ஒரு வழியாக ("ரவுண்டாக") முடிந்து ராசியாகி விட்ட "சன் டிவி" நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல் படுத்திவிட்டதாக ஒரு அறிவிப்பு வரப்போகுது பாருங்கள்!

வாழ்க சமூக சிர்திருத்தம். வளர்க இட ஒதுக்கீட்டு அரசியல்!!

3

சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:

  1. இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் – அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
  2. ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
  3. ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
  4. ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.

இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.

அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் – ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.

கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.

0

அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). :razz:

  1. இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
  2. டான்ஸ் மாஸ்டர்!
  3. பறக்கும் பெங்குவின்கள்!
  4. உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
  5. கை விரலே கைப் பேசியானால்!

என்ன, ஜாலியா பொழுது போச்சா!

3

என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!

"ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே "பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்" என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, "பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்" என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:

" இதுங்க சும்மா 'மிஸ்ஸீடு கால்' தான சார் கொடுக்குதுங்க" என்றார்!

அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, "கெக்கே கெக்கே" என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி – என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். "இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க" என்றாள்!

எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். "நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" – இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.

ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!

உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!! :roll:

5-ல் இது-112345