இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல!

“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.”

மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!

இதோ அந்தக் கேள்விகள்:-

  1. நடிகர் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கிலும், ஐந்து பேரின்மேல் காரை ஏற்றிக் கொன்ற வழக்கிலும் எப்போது தண்டனை பெறுவார்?
  2. ப.சிதம்பரம் 2009 தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்ற வழக்கில் எப்போது தீர்ப்பு வரும்?
  3. ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?
  4. ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?
  5. காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?
  6. உண்மையில் கென்னடியைக் கொன்றது யார்?

2 Comments


  1. வீரத்தமிழன் பிரபாகரன் சாகவில்லை. ஏசு, நேதாஜி, எல்விஸ் வழியில் இணைந்துவிட்டார். அவர் மீண்டும் உயிர்ந்து வரப்போகிறார். காத்துக்கொண்டே இருப்போம்!!! அதுவரை வைக்கோதான் எங்களுக்கு தலைமை.


  2. ஜயராமன்,
    இதுபோல் நீங்கள் பேசினால் வைக்கோ உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிடுவார், பாவம்!

Leave a Reply

Your email address will not be published.