தேள்கடி மருந்து!

தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனை செய்த ஒருவர் தேள்களை தன் உடலில் கொட்ட விட்டதால் விழுப்புரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட் டது.

சாதாரணமாக தேள் கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி நீடிக்கும். கொடிய விஷம் உடைய நட்டுவாக்கலி கடித்தால் சில மணி நேரத்தில் விஷம் தலைக்கு ஏறி உயிருக்கே ஆபத்து ஏற்படும்.இந்த தேள் கடிக்கு கிராமப்புறங்களில் பல்வேறு விதமான விஷ முறிவு மருந்துகள் செய்யப்படுவது உண்டு. தேள் கடித்த இடத்தில் கல் ஒன்றை வைத்து கட்டி விஷத்தை எடுத்தவுடன் பாலில் அந்த கல்லை பாதுகாப்பாக வைப்பார்கள்.இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் தேள் கடிக்கு இன்னும் முறையான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேள் கடி, பூரான் கடிக்கு மருந்து கொடுப்பதாக நகர்ப்புறங்களில் பலரும் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதே போல விழுப்புரம் பகுதியில் நேற்று திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தேள் கடிக்கு மருந்து விற்பனை செய்தார்.

தனது மருந்து சக்தியை நிரூபிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட தேள்களை பிடித்து தனது கைகளில் கொட்டுமாறு செய்து பிறகு அந்த விஷத்தை (பாதரசத்தால் தயாரித்ததாக கூறப்படும்) தனது கண்டுபிடிப்பு மருந்தை தேள் கொட்டிய இடத்தில் தடவி விஷம் முறிந்ததாக கூறுகிறார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகள் தொடர்பாக மனு கொடுப்பதற்காக ஏராள மான பொதுமக்கள் வந்திருந்த னர். இந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளையும் மறந்துவிட்டு இந்த தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இந்த மருந்தை அனைவரும் வாங்கிச் சென்றனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே தேளை தனது உடலில் கடிக்க விட்டு விஷ முறிவு மருந்தை விற்பனை செய்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published.