என்று ஒழியும் இந்த ஜாதி வெறி!

பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ் ஜாதி முறையில் நம் சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய வாதத்தின் சாரம்:

ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது.

அடுத்த தலைமுறையையாவது இதுபோன்ற ஜாதிப் பாகுபாடின்றி ஒற்றுமையாய் இருக்க விடுவார்களா?

3 Comments

  1. பாரதியின் வார்த்தைகள் என் நினைவில்:

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி, அதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

    நீதியே ஜாதி வெறியை சாடிய பொழுது கொஞ்சம் மனத்துக்கு ஆறுதல்!

    பாரதி இராமச்சந்திரன்.

  2. பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ் ஜாதி முறையில் நம் சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய வாதத்தின் சாரம்:

    ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது.

  3. பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ் ஜாதி முறையில் நம் சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய வாதத்தின் சாரம்:

    ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது.

    பாரதியின் வார்த்தைகள் என் நினைவில்:

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி, அதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

    நீதியே ஜாதி வெறியை சாடிய பொழுது கொஞ்சம் மனத்துக்கு ஆறுதல்!

    பாரதி இராமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published.