நிமித்தம்

ஜோஸ்யம், ஜாதகம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இதைப்பற்றி முன்னமையே ஒரு இடுகை இட்டுள்ளேன். ஆனால் நம்மால் முழுதும் புரிந்துகொள்ள முடியாத சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியவில்லை.

இது பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்ததில் இவை இயற்கை நமக்களித்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே தோன்றுகிறது. பின்னால் நடக்கப் போவதை சூசகமாக நமக்குத் தெரியப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு செயலைத் தொடங்குமுன் தற்செயலாகத் தோன்றும் இடர்கள், தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது தொடர்ந்து கைதவறித் தட்டும் ராங் நம்பர், ஒரு அவையில் நீங்கள் ஏதாவது சொல்ல முயலும்போது எற்படும் தடங்கல்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் நமக்கு அவ்வப்போது உங்கள் முயற்சிகளின் பயனின்மையை தெரியப் படுத்துகின்றன.

வெளிப்படையான இதுபோன்ற நிகழ்ச்சிகள் தவிர, நம் உள்ளுணர்வே பல முறை ஒரு “வருமுன் உரைப்பானா”க செயல்படுகிறது. இதனை hunch என்பார்கள். இத்தகைய எச்சரிக்கைகளுக்கு நாம் கட்டாயம் மதிப்புக் கொடுத்து அதற்குத் தக்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

இயற்கையாக நிகழும் இத்தகைய செயல்பாட்டை “நிமித்தம்” என்று அழைப்பார்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் கிடையாது. கைம்பெண்கள் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும் என்பது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை நான் குறிப்பிடவில்லை.

முன் காலத்தில் அரசவைகளில் “நிமித்திகன்” என்று ஒருவர் இருப்பார். அரசர் முக்கிய செயல்களில் இறங்குமுன் அவர் தனக்குத் தோன்றும் உணர்வுகள் அடிப்படையில் அரசருக்கு ஆலோசனை வழங்குவார்.

இது பற்றி நண்பர்கள் யாருக்கேனும் மேல்விவரம் தெரியுமானால் பகிர்ந்து கொள்ளலாமே!

3 Comments


  1. நன்றி, மயிலாடுதுறை-த்தான்!!

    ஆமாம், மீண்டுதான் வந்துள்ளேன்.

    எஸ்.கே


  2. இன்று இது குறித்து ஒரு பதிவு செய்ய யோசித்தேன் (ஆங்கிலத்தில் இதன் முன் வடிவம் வந்துவிட்டது) உங்கள் பதிவைக் கண்டது நல்ல நிமித்தம் போலுள்ளது 😉

Comments are closed.