சென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்?

இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.

எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – “சூடு” வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). “பட்”டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் “no-holds-barred” event-ல் தங்கப்பதக்கம் வாங்கி “வையகமெல்லம் வாரியிறையடா தமிழா” என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது. கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!

இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன. ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், “நடைபாதை என்றால் என்ன” என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)

Pages: 1 2 3

9 Comments


 1. … pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!

  ஆரம்பமே அசத்தல். 🙂

  அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

  தொடர்ந்து எழுதுங்கள்.


 2. அருமையா எழுதியிருக்கீங்க.
  ஆனால் இப்படி சிங்காரச் சென்னை பற்றி விளக்கி, ஊருக்குத்திரும்பி வரும் என்னோட கனவை சோதிக்கிறீங்களேண்ணே…


 3. “அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.”

  நன்றி, நவன் பகவதி!
  “வீலிங்க்”, துப்பிங்க்” இந்தமாதிரி நாகரிகங்களைப் பத்தி தனியா எழுதிடுவோம்!!
  ———–
  “அன்பு” அவர்களுக்கும் வணக்கம்!
  கனவு கலையாம பாத்துக்குங்க!

  அன்புடன்,


 4. என்னங்க ஆட்டோகாரங்க என்ன பாவம் பண்ணினாங்க?.
  சென்னைல மட்டும் லட்ச கணக்கல் ஆட்டோக்கள் ஓடும். பொது மக்களுக்கு ஆட்டோக்களின் தேவை அதிகம்ங்கறத இந்த நம்பர் சொல்லலையா?.
  இந்த ந்டுத்தர மக்களுக்கு ஆட்டோதாங்க பல வசதிகள தருது.
  குறிப்பா வெளியூர்காரங்களுக்கு. ஆட்டோவ நீக்கணும்னு சொல்றது சரியில்லீங்க.


 5. கிச்சு(க்கிச்சு) பெட்டிக்கடை
  பெட்டிக்கடை ‘கிச்சு’ இன்று கடை விரித்திருக்கிறார்! சென்னை ரோடுகள் யாருக்கு சொந்தம்? என்ற கேள்


 6. நல்லா எழுதியிருந்தீங்க கிச்சு. தண்ணி லாரி நம்ம ரோட்ல கொட்டிக்கிட்டே போகறதைப்பார்க்கும்போது வர்ற எரிச்சல் இருக்கே!! அந்த காலத்தை எல்லாம் கடந்து இங்க US வந்ததும் 24 மணிநேரமும் தண்ணி வந்தப்போ, ஆத்திரம்தீர மணிக்கணக்கா குளிச்சத நினைச்சா சிரிப்பு வருது.


 7. சோக்கா சொல்லியிருக்கே வாத்தியாரே!
  இந்த ஆட்டோக்காரனுங்க படா பேஜாரு பண்றானுங்க. உள்ள உக்காந்தா வெளியில வந்த உடனே கக்கூஸ்தான் போக வேணும். நடந்து போற பசங்க பண்ணுற ரவுஸு கீதே, அப்பப்பா, வண்டி வருதா போவுதான்னு பாத்துகிட்டு க்ராஸ் பண்ணுறது கிடயாது. க்ராஸ் பண்ணிகிட்டெ எவனாவது இடிக்கப்போறானான்னு திரும்பிப் பாக்குதுங்க. உஷர்ரா இரு வாத்யாரே. எங்கனாச்சும் வண்டிய னிறுத்தி டுர்ன் பண்ணலாம்னு பாத்துகிட்டு இருக்கும்போது No Parking-னு சொல்லி கறந்துடப் போறானுங்க. ஆக்காங். வர்ட்டா.


 8. இப்பம் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்ல பிரச்சனை இல்லாம தெரியுது. மாற்றங்கள் செய்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.