செப் 18
முன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு கதையில் எழுதியிருந்தார், "அந்த ஊரில் எல்லோரும் எச்சல் துப்பிக்கொண்டிருந்தார்கள்" என்று. எச்சில் துப்புவது நம் தேசியக்கடமைபோல யாரைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எப்போது துப்புவார்கள் என்று கவலைப் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் – அப்போதுதானே ஸ்பிரே தாக்கும்போது பௌன்ஸரிலிருந்து தப்பிக்க duck செய்வது போல அந்தப் பன்னீரிலிருந்து தப்பிக்கலாம்.
சரி, நீங்கள் பஸ்ஸுக்கு வெளியில் இருந்தால் மட்டும் தப்பிக்க முடியுமா? பஸ்ஸுக்கு அருகில் வந்தால் "பளிச்" சென்று விழும் கொத்திலிருந்து தப்பித்தாலும் வாந்தியிலிருந்து தப்பிக்க முடியாது. "துப்பாய தூவும் மழை"தான்!
துப்புவதிலும் பல முறைகள் உள்ளன. பல்லிடுக்கால் பிரீசசிடல், உதடுகளைக் குவித்து இரு விரல்களுக்கிடையில் பீச்சியடித்தல், காறிக் கரண்டி கன்னபின்னாவென்று துப்புதல் இது தவிர வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவை கலந்த value-added spitting!
இவற்றில் தாங்க முடியாத கொடுமை இந்தக் "காறித்" துப்புதல்தான. ஹோட்டலில் டிபன் சாப்பிடப்போனால் வாஷ் பேஸினுக்கு அருகில் உட்கார்ந்தால் தொலைந்தீர்கள். பலர் வாய்வழியே குடலில் தங்கியுள்ள அனைத்தையும் வெளிக்கொணறும் முயற்சியில் இறங்கி கர்ணகடூரமான ஓசைகளை எழுப்பி நம் குடலைப்பிடுங்கி வெளியே எறியும் உணர்வை உண்டாக்குவார்கள். அடுத்த முறை ஓட்டலுக்குச் செல்லும்போது கைகழுவும் இடத்துக்கு எவ்வளவு எட்டத்தில் உட்கார முடியுமோ அவ்வளவு தொலைவு சென்றால்தான் இந்தக் காறல், கோழை, கொப்பளிப்பு போன்ற அந்தரங்க சுத்திகரிப்பு அசிங்கங்களிலிருந்து தப்பிக்கலாம்.
குறிச்சொற்கள்:
civic sense,
responsibility,
social,
ஒழுக்கம்,
நாகரிகம்,
பழக்கம்
:: (பார்வை 2728 முறை) ::
ஆக 30
இதில் முதல் மரியாதை யாருக்கு என்பதில் அன்றாடம் போட்டி நடந்தவண்ணம் இருக்கிறது. யார் எப்பொது முந்தியிருக்கிறார்கள் என்ற நிலைமை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் கடைசி 10 ஓவர்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும். முன்பெல்லாம் MTC பஸ்களுக்குத்தான் ரோடுகள்மேல் first charge என்கிற நிலைமை வெகுநாட்கள் நீடித்திருந்தது. ஆனால் அந்த preeminent status-ஐ ஆட்டோ ரிக்ஷாக்கள் பிடித்துவிட்டன.
எப்படி என்கிறீர்களா? இது சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெள்ளிதில் தெரிந்த ரகஸியமே – "சூடு" வைக்கும் சூட்சுமம் போல! (அதில் ஒத்தைச் சூடு, ரெண்டுபல் சூடு என்று பலவகை இருக்காமே – ஆட்டோ பற்றிய டெக்கினிகல் விஷயங்களில் மிக்க ஞானஸ்தரான திரு. அபூல் கலாம் ஆசாத் அவர்களிடம் முழுப்பணமாக ஒத்தை ரூபாயை தட்சிணையாகக்கொடுத்துப் பாடம் கேட்க வேண்டும்). "பட்"டென்று உடைத்துச் சொன்னால் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கும் காவலர்களுக்கும் ஒருவிதமான நெருங்கிய உறவு இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இப்போது latest நிலைமை என்ன தெரியுமா? தண்ணீர் லாரிகள் தான் ஒலிம்பிக்கில் "no-holds-barred" event-ல் தங்கப்பதக்கம் வாங்கி "வையகமெல்லம் வாரியிறையடா தமிழா" என்று மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ரோடெல்லாம் கோடு போட்டுக்கொண்டு தாறுமாறாக ஓடி, ஆட்கொல்லி அரக்கனாக உருவெடுத்து ஆட்சி செலுத்தி வருகிறது. கேட்பாருமில்லை மீட்பாருமில்லை, இறைவனே, நீயாவது பார்த்துப் போப்பா!
இப்போதெல்லம் டிரக்குகள் ரோடு தவிர நடைபாதைகளில்கூட ஏறி யமனின் அன்றாட வேலையைச் சுளுவாக்குகின்றன. ஒருவேளை யமதர்மன் தன் வாகனத்தை நவீனப்படுத்தி லாரியாக மற்றிவிட்டானா? ஆமாம், "நடைபாதை என்றால் என்ன" என்று ஒருவர் கேட்கிறார். (காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: யாராவது pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!)
குறிச்சொற்கள்:
chennai,
civic sense,
roads,
ஒழுக்கம்,
நாகரிகம்
:: (பார்வை 1724 முறை) ::
சமீபத்திய மறுமொழிகள்