சென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்?

ஆச்சு. மிச்சமிருப்பது யார்? பிள்ளையார் கோவில் ஆண்டிதான்! (பிள்ளையார் கோவில் வாசலில்தான் சதிர்க்காயாவது கிடைக்குமே, பின்னர் ஏன் அவர்களை “ஊருக்கிழைத்தவர்களாக”ச் சித்தரிக்கிறார்களென்று தெரியவில்லை!) ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஒருவகையிலும் சேர்த்தியில்லாத நடுத்தர வர்க்கம் பெரும்பாலும் ஒட்டும் “டூ-வீலர்” எனப்படும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஒட்டுனர்கள்தான் கேஸ்களுக்கு தீனிபோட வேண்டும். வழிநெடுகிலும் பார்க்கலாம் அவர்களைப் பிடித்து செக் பண்ணி கேஸ் மாக்கு மாக்கு-ன்னு எழுதுவதை. அவர்களில் நீக்கு-போக்கு தெரிந்த சிலர் கெண்டை மீனாக நழுவிவிடுவார்கள். ஆனால், “நான் என்ன தப்பு செய்தேன்” என்று அடிப்படை கேள்விகள் கேட்டுக்கொண்டு, ஜனநாயகத்தின் மையக்கருத்து அறியாத பைத்தியங்கள் சில பரிதாபமாக மாட்டிக்கொண்டு நிற்கும்!

நேற்று என் நண்பர் சந்திரசூடன் சிகப்பு சிக்னலில் பிரேக் போட்டு நின்றார். இது என்ன முட்டாள்தனம் – சிவப்பு சிக்னல் தெரிந்தவுடனே வண்டியை விரட்டுவதுதானே சென்னை சாலைகளின் தர்மம்! சரி இவர் நின்றார். இவருக்குப் பின்னால் வந்த கார்? அதை ஓட்டியவருக்கு எல்லாம் பச்சையே! இடித்தார் ஒரு இடி பின்னாலிருந்து. பறந்தார் அவர். அங்கே சித்திரகுப்தர் அவசரமாக டேட்டாபேஸை செக் பன்ணி இந்த நபர் இன்னும் அனுபவிக்கவேண்டியது நிறைய பாக்கியிருக்கிறது என்று தெளிந்து பிழைக்க வைத்துவிட்டார். ஆனால் எல்லோரும் இந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

ஒற்றை வீடுகள் அடுக்குமாடிகளாகி, எல்லோரும் டஜன்கணக்கில் வண்டிகளை சாலைகளில் இறக்குகிறார்கள். ஆனால் சாலைகளோ புடவைக்கடை மாடல்களின் இடுப்பு போல் குறுகிக்கொண்டே வருகிறது. ஆக்கிரமிப்பு வளர்ந்துகொண்டே வருகிறது. என்ன செய்யப்போகிறோம்? “ஹிந்து” பத்திரிக்கை இன்று இதைப்பற்றி இந்தக் கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முறையான திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்துவதற்கு முன்னால் ஒரு ஆரம்பமாக, “தெருவடைச்சான் சப்பரம்” போன்ற அகலமான பாடிகள் கொண்ட பஸ்கள், லாரிகள் முதலியன பெருநகருக்குள் தடைசெய்யப்பட வேண்டும். மினிலாரி, மினிபஸ்கள் தான் ஓடவேண்டும். பிறகு இந்த ஆட்டோ ரிக்ஷா என்கிற முக்கோண வஸ்து முழுவதும் அகற்றப்படவேண்டும். மூக்கு நுழைந்தால் போதும், பிருஷ்ட பாகம் தானாக வந்துவிடும் என்கிற அலக்ஷியப் போக்குடன் புற்றீசல் போல் அங்கும் இங்கும் ஓடி பல சட்ட விரோதிகளின் get-away வாகனமாக இருக்கும் இந்த அசுரனை அகற்றவேண்டியது மிக்க அவசியம்!

இதெல்லாம் பார்க்கும்போது ஏதாவது காடு, மலை என்று கிளம்பி, இயற்கைச் சூழ்நிலையில் ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டு நிம்மதியாக ஓரிரண்டு சிஷ்யை(!)களுடன் வாசம் செய்யலாம் போலிருக்கிறது!

Pages: 1 2 3

9 Comments


  1. … pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!

    ஆரம்பமே அசத்தல். 🙂

    அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

    தொடர்ந்து எழுதுங்கள்.


  2. அருமையா எழுதியிருக்கீங்க.
    ஆனால் இப்படி சிங்காரச் சென்னை பற்றி விளக்கி, ஊருக்குத்திரும்பி வரும் என்னோட கனவை சோதிக்கிறீங்களேண்ணே…


  3. “அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.”

    நன்றி, நவன் பகவதி!
    “வீலிங்க்”, துப்பிங்க்” இந்தமாதிரி நாகரிகங்களைப் பத்தி தனியா எழுதிடுவோம்!!
    ———–
    “அன்பு” அவர்களுக்கும் வணக்கம்!
    கனவு கலையாம பாத்துக்குங்க!

    அன்புடன்,


  4. என்னங்க ஆட்டோகாரங்க என்ன பாவம் பண்ணினாங்க?.
    சென்னைல மட்டும் லட்ச கணக்கல் ஆட்டோக்கள் ஓடும். பொது மக்களுக்கு ஆட்டோக்களின் தேவை அதிகம்ங்கறத இந்த நம்பர் சொல்லலையா?.
    இந்த ந்டுத்தர மக்களுக்கு ஆட்டோதாங்க பல வசதிகள தருது.
    குறிப்பா வெளியூர்காரங்களுக்கு. ஆட்டோவ நீக்கணும்னு சொல்றது சரியில்லீங்க.


  5. கிச்சு(க்கிச்சு) பெட்டிக்கடை
    பெட்டிக்கடை ‘கிச்சு’ இன்று கடை விரித்திருக்கிறார்! சென்னை ரோடுகள் யாருக்கு சொந்தம்? என்ற கேள்


  6. நல்லா எழுதியிருந்தீங்க கிச்சு. தண்ணி லாரி நம்ம ரோட்ல கொட்டிக்கிட்டே போகறதைப்பார்க்கும்போது வர்ற எரிச்சல் இருக்கே!! அந்த காலத்தை எல்லாம் கடந்து இங்க US வந்ததும் 24 மணிநேரமும் தண்ணி வந்தப்போ, ஆத்திரம்தீர மணிக்கணக்கா குளிச்சத நினைச்சா சிரிப்பு வருது.


  7. சோக்கா சொல்லியிருக்கே வாத்தியாரே!
    இந்த ஆட்டோக்காரனுங்க படா பேஜாரு பண்றானுங்க. உள்ள உக்காந்தா வெளியில வந்த உடனே கக்கூஸ்தான் போக வேணும். நடந்து போற பசங்க பண்ணுற ரவுஸு கீதே, அப்பப்பா, வண்டி வருதா போவுதான்னு பாத்துகிட்டு க்ராஸ் பண்ணுறது கிடயாது. க்ராஸ் பண்ணிகிட்டெ எவனாவது இடிக்கப்போறானான்னு திரும்பிப் பாக்குதுங்க. உஷர்ரா இரு வாத்யாரே. எங்கனாச்சும் வண்டிய னிறுத்தி டுர்ன் பண்ணலாம்னு பாத்துகிட்டு இருக்கும்போது No Parking-னு சொல்லி கறந்துடப் போறானுங்க. ஆக்காங். வர்ட்டா.


  8. இப்பம் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்ல பிரச்சனை இல்லாம தெரியுது. மாற்றங்கள் செய்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.