சென்னை ரோடுகள் யாருக்குச் சொந்தம்?

இதற்கு அடுத்து வருவது அனைத்து அரசுத்துறைகளைச்சார்ந்த (மைய, மாநில) வண்டிகள். இவைகளைக் கண்டால் தூரவிலகிவிடுவது உத்தமம். எண்பலகையிலேயே “அ” (அம்பேல்), “G” (Get lost) என்று ஸ்டிக்கர் ஒட்டி அனைத்து விதிகளுக்கும் விலக்காகி “பீம் பீம்” என்று வீம்புடன் செல்வார்கள்.

மற்ற பெரு நகரங்களிலெல்லாம் பெரிய 10 டன் போன்ற லாரிகள் செல்லத் தடையிருக்கிறது. ஆனால் சென்னையிலோ எங்கு பார்த்தாலும் அசுரவேகத்தில் லாரிகள் பறப்பதைப் பார்க்கலாம். அவைகளைப் பிடிக்கவே முடியாது. ஒரே கிரீஸாக இருப்பதால் கைவழுக்கிவிடும்!

சென்னை ரோடுகளின் hierarchical pecking order (படிநிலை அமைப்பு) பற்றிப் பார்த்தோம். இப்போது காவலர்கள் நோக்கில் picking order என்ன என்பதைப் பார்ப்போம்.

முன்னே கூறிய ஐந்துவகை ஊர்திகளையும் (அவைகளின் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உட்பட) அவர்கள் ஒன்றும் கண்டுக்கவே மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் சாலைகள்மேல் சொத்துவகை பாத்தியம் உள்ளவர்கள். அவர்களை யாரும் எதுவும் கேட்கமுடியாது. அவர்களே சட்டம், அவர்கள் நடத்தையே ஒழுங்கு, மற்றெல்லோரும் ஒதுங்கு!

காரில் வருபவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினர், பிரபலங்கள், அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள். எந்தப் புத்தில் எந்தப் பின்னாள் அமைச்சர் இருப்பாரோ! எதுக்கு வம்பு, போடு ஒரு சலாம்; இதோ நாங்கள் குலாம்!

இனி கீழ்மட்டத்திலிருந்து வந்தால், jay walking specialist – களான நடராஜப் பெருமக்கள் மற்றும் சைக்கிளில் இப்படி ஒடித்து, அப்படி வெட்டி, “அட்டாக்” வித்தைகாட்டும் இன்னாட்டு மன்னர்கள். இவர்கள்தான் ஜனநாயகத்தின் காவலர்கள். கியூவில் நின்று வாக்களிப்பவர்கள். இவர்களை நோக்கித்தான் நம் நேதாக்களின் கைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன! இவர்கள் எங்கு, எப்படி வேண்டுமானாலும் சாலைகளைக் கடக்கலாம்.

முதலில் வலப்புறம் சலையில் நுழைந்தவுடன் எதிர்ப்படும் oncming traffic – ஐப்பார்த்து, பிறகு இடது பக்கம் நோக்கி, போக்குவரத்து குறைந்தபின் கடக்க முற்படவேண்டும். இதை பள்ளிகளில் சொல்லிக்கொடுப்பதாகத் தெரியவில்லை. பஸ் நிறுத்தத்திற்கு எதிரேயிருந்து, தான் ஏறவேண்டிய பஸ் வந்தால் போதும், சடாரென்று சாலையை இரண்டாகப் பிளந்து ஓடுவார்கள். ஊர்தி ஓட்டுனர்கள்தான் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.

Pages: 1 2 3

9 Comments


  1. … pavement என்று சொல்லப்படும் நடைபாதைகள் பற்றித் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். நாலு லாரிகளை அதன்மேல் ஏற்றச்சொல்லலாம்!

    ஆரம்பமே அசத்தல். 🙂

    அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

    தொடர்ந்து எழுதுங்கள்.


  2. அருமையா எழுதியிருக்கீங்க.
    ஆனால் இப்படி சிங்காரச் சென்னை பற்றி விளக்கி, ஊருக்குத்திரும்பி வரும் என்னோட கனவை சோதிக்கிறீங்களேண்ணே…


  3. “அப்புறம் நடு ரோட்டில் வீலிங்க் விடுறவங்களை பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.”

    நன்றி, நவன் பகவதி!
    “வீலிங்க்”, துப்பிங்க்” இந்தமாதிரி நாகரிகங்களைப் பத்தி தனியா எழுதிடுவோம்!!
    ———–
    “அன்பு” அவர்களுக்கும் வணக்கம்!
    கனவு கலையாம பாத்துக்குங்க!

    அன்புடன்,


  4. என்னங்க ஆட்டோகாரங்க என்ன பாவம் பண்ணினாங்க?.
    சென்னைல மட்டும் லட்ச கணக்கல் ஆட்டோக்கள் ஓடும். பொது மக்களுக்கு ஆட்டோக்களின் தேவை அதிகம்ங்கறத இந்த நம்பர் சொல்லலையா?.
    இந்த ந்டுத்தர மக்களுக்கு ஆட்டோதாங்க பல வசதிகள தருது.
    குறிப்பா வெளியூர்காரங்களுக்கு. ஆட்டோவ நீக்கணும்னு சொல்றது சரியில்லீங்க.


  5. கிச்சு(க்கிச்சு) பெட்டிக்கடை
    பெட்டிக்கடை ‘கிச்சு’ இன்று கடை விரித்திருக்கிறார்! சென்னை ரோடுகள் யாருக்கு சொந்தம்? என்ற கேள்


  6. நல்லா எழுதியிருந்தீங்க கிச்சு. தண்ணி லாரி நம்ம ரோட்ல கொட்டிக்கிட்டே போகறதைப்பார்க்கும்போது வர்ற எரிச்சல் இருக்கே!! அந்த காலத்தை எல்லாம் கடந்து இங்க US வந்ததும் 24 மணிநேரமும் தண்ணி வந்தப்போ, ஆத்திரம்தீர மணிக்கணக்கா குளிச்சத நினைச்சா சிரிப்பு வருது.


  7. சோக்கா சொல்லியிருக்கே வாத்தியாரே!
    இந்த ஆட்டோக்காரனுங்க படா பேஜாரு பண்றானுங்க. உள்ள உக்காந்தா வெளியில வந்த உடனே கக்கூஸ்தான் போக வேணும். நடந்து போற பசங்க பண்ணுற ரவுஸு கீதே, அப்பப்பா, வண்டி வருதா போவுதான்னு பாத்துகிட்டு க்ராஸ் பண்ணுறது கிடயாது. க்ராஸ் பண்ணிகிட்டெ எவனாவது இடிக்கப்போறானான்னு திரும்பிப் பாக்குதுங்க. உஷர்ரா இரு வாத்யாரே. எங்கனாச்சும் வண்டிய னிறுத்தி டுர்ன் பண்ணலாம்னு பாத்துகிட்டு இருக்கும்போது No Parking-னு சொல்லி கறந்துடப் போறானுங்க. ஆக்காங். வர்ட்டா.


  8. இப்பம் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்ல பிரச்சனை இல்லாம தெரியுது. மாற்றங்கள் செய்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.