"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!
வேறென்ன வேண்டும்!
நீங்களும் சிறிது ரசிக்கலாமே!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
சார்ந்த வகை: இசை :: நாள்: நவ 5th, 2007. 5 மறுமொழிகள்.
தமிழ்மணம் நடத்தும் வலைப்பதிவிதழ் பூங்காவை இதுவரை நான் பிரட்டிப் பார்த்ததில்லை. சமீபத்தில் அந்த இதழில் நடந்துவரும் தேசிய எதிர்ப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பற்றி ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியுள்ளதைப் படித்தபின் சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது.
முகப்பிலேயே கண்ணில் பட்டது ஒரு சிறப்புப் பேட்டி மற்றும் சிறப்பு ஒலிப்பேழை (podcasting). முனைவர் திருமுருகன் அவர்களின் இசைத்தமிழ் பற்றிய பேட்டி வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி ஆசிரியர் குழு எழுதியுள்ள அறிமுகத்தில் இவ்வாறு காணப்படுகிறது:
முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார்.
ஒலிப்பேழையை இயக்கினால், திருமுருகன் அவர்கள் தெளிவான, சற்றே ஈழத்தின் சாயல் அடிக்கும் தமிழில் அரிய பல தகவல்களைத் தருகிறார். ஆனால் அவர் முதலில் கூறியுள்ளது என்னவென்றால் சங்க காலத்தில் "நெய்வளம்" என்றழைக்கப்பட்ட பண் தேவார காலத்தில் "நட்டபாடை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது என்பது. அதன் ஸ்வரங்களை பாடிக்காண்பித்து இன்றைக்கு அதே பண்ணை தமிழர்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதன் இப்போதைய பெயர் "கம்பீர நாட்டை". அந்த இராகத்தில் "ஞான விநானயகனே" என்ற பாடலின் பல்லவியையும் பாடிக் காண்பிக்கிறார்; சில திரைப்படப் பாடல்களையும் பாடிக்காண்பிக்கிறார். மேலும் செஞ்சுருட்டி, மத்யமாவதி போன்ற இராகங்கள் சில ஸ்வரங்களை மாற்றி வெவ்வேறு புது இராகங்களாக எவ்வாறு உண்டாகிறது என்பதையும் விளக்குகிறார். தாளங்களின் இப்போதைய பெயர்களையும் அவற்றின் முந்தைய பெயர்களையும் விவரிக்கிறார். ஆனால், எங்கையுமே பூங்கா ஆசிரியர்களின் கூற்றுப்படி "எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டன, அதன் பின்னணி என்ன" என்று விவரிக்கவில்லை. திருமுருகன் அவர்கள் மிகுந்த அறிவாற்றலுடனும் முதிர்ச்சியுடனும் யார்மனதும் நோகாதவண்ணம், எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி நடந்ததை மட்டும் கூறியிருக்கிறார்.
மேலும் "இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?" என்று அவர் விளக்கியுள்ளதுபோல் அறிமுகத்தில் கண்டிருக்கிறது. ஆனால் அதுபோன்று எதனையும் அவர் கூறவில்லை.
அடுத்தபடியாக மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: மா 30th, 2007. 10 மறுமொழிகள்.
தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான "லலிதா ராம்" அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். "நேசமுடன்" வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.
இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:
விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 21st, 2006. 1 மறுமொழி.
எனக்கு மிகவும் "டென்ஷண்" ஏற்றிவிடும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தியாகராஜ ஆராதனையின் முத்தாய்ப்பான "பஞ்சரத்ன கீர்த்தனை" கோஷ்டி கானம்தான். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் ரேடியோ நேரடி ஒலிபரப்பின்போதும் அப்படித்தான். ஒவ்வொரு பாடகரும் நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு, பலவிதமான் சுருதிகளில் ஒரு cacophony-ஐ கிளப்பிக் கொண்டிருப்பார்கள். டி.வி வந்தவுடன் இது இன்னும் மோசமாகிவிட்டது. பக்தியோ, சிரத்தையோ சிறிதுமில்லாமல், டி.வியில் முகம் காண்பிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு, அங்கு அடிக்கப்படும் லூட்டியைக் கண்டால் சாதாரணமானவர்களுக்குக் கூட பிரஷர் ஏறிவிடும்.
இன்று காலை பொதிகையில் பஞ்சரத்ன கீர்த்தனை நேரடி ஒளிபரப்பு. அங்கே வெளிச்சமாகக் காணமுடிந்தது பகட்டும், படாடோபமும் தான். "பஞ்ச"மாக இருந்த ரத்தினங்கள், பக்தியும், ஈடுபாடும், தியாகராஜர்மேல் நன்றியுணர்வும்!
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: ஜன 19th, 2006. 1 மறுமொழி.
என் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சிக்கிறேன்.
இந்த பஜனைப் பாடலில் வாதிராஜஸ்வாமி "பேக பாரோ, பேக பாரோ" (சீக்கிரம் ஓடி வா) என்று கிருஷ்ணனை அழைக்கிறார். மாண்டு ராகம் மற்றும் ஆதி தாளத்தில் அமைந்த இந்தப் பாடலை விறுவிறுப்பாக, ப்ருகாக்களுடன் பாடியவர்கள் பிரபல கர்னாடக இசை இரட்டையர்கள் "மாம்பலம் சகோதரிகள்". கேட்டு மகிழுங்கள்.
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
சார்ந்த வகை: இசை :: நாள்: ஜூலை 2nd, 2005. 4 மறுமொழிகள்.
சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் – முதலில் Texla பிறகு Bush – இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை – அதிலும் செம்மங்குடி போன்ற மூக்கு வித்வான்கள்தான் ”நீ இழு, நான் இழு” என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள், நீர் வற்றிக் கொண்டிருக்கும் குட்டையின் சேற்றில் படுத்து சொர்க்கத்தை அநுபவிக்கும் எருமை மாட்டின் "கொய்ங்" போல! இந்த சங்கீதக் காரர்களுக்கு அநாவசியமாக வாய் வேறு எதற்கு – மூக்கு ஒன்றே போதுமே என்று நான் பல முறை என்ணியிருக்கிறேன்.
என் அம்மாவிடம் "இப்படி இழுத்து இழுத்து பாடுவதுதான் சங்கீதமா? ஏன், இனிமையாகப் பாடக் கூடாது என்று ஏதாவது இலக்கணக் கட்டாயமா?" என்று கேட்கும்போதெல்லாம், "டேய், ஜிஎன்பி, எம். எஸ் – இவங்களைக் கேட்டுப்பார்டா. அது தாண்டா சங்கீதம்" என்று பதில் சொல்லுவார். அப்போதிலிருந்தே அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் போல் நானும் எம்.எஸ் பாடல்களைக் கேட்டு அந்த இசையின்பத்தை அநுபவித்து வருகிறேன்.
சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனைக்குச் சென்றிருந்தேன். வழக்கத்தை விட தாங்க முடியாத கூட்டம். காலையிலிருந்தே கையில் சாப்பாடு, தண்ணீருடன் கொட்டகைக் குள்ளேயே பல பெண்மணிகள் உட்கார்ந்திருந்தனர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிக் கொண்டே வந்தது. ஆம், அன்று ஒரு சிறப்பான நாள். பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் அன்று தான் எம்.எஸ் அவர்கள் ஆராதனையில் பாட இருந்தார்கள்! மேடையை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம். நானும் எனக்குத் தெரிந்த தலைகள் மூலம் கிட்டத்தில் போக முற்பட்டேன். பலிக்கவில்லை. முன்னமையே முயற்சி செய்து அங்குள்ள நிர்வாகிகள் யாரையாவது சிபாரிசு பிடித்திருக்கலாமே என்று
தோன்றியது. சரி. இப்போது என்ன செய்வது? கடைசியில் அமர்ந்து கேட்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது மேடையின் அருகில் அமர்ந்து எம்.எஸ் கச்சேரியை கேட்க வேண்டும் என்கிற வெறி. மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 13th, 2004. 1 மறுமொழி.
சமீபத்திய மறுமொழிகள்