பூங்காவில் எட்டிப் பார்த்தேன்

தமிழ்மணம் நடத்தும் வலைப்பதிவிதழ் பூங்காவை இதுவரை நான் பிரட்டிப் பார்த்ததில்லை. சமீபத்தில் அந்த இதழில் நடந்துவரும் தேசிய எதிர்ப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பற்றி ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியுள்ளதைப் படித்தபின் சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது.

முகப்பிலேயே கண்ணில் பட்டது ஒரு சிறப்புப் பேட்டி மற்றும் சிறப்பு ஒலிப்பேழை (podcasting). முனைவர் திருமுருகன் அவர்களின் இசைத்தமிழ் பற்றிய பேட்டி வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி ஆசிரியர் குழு எழுதியுள்ள அறிமுகத்தில் இவ்வாறு காணப்படுகிறது:

முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார்.

ஒலிப்பேழையை இயக்கினால், திருமுருகன் அவர்கள் தெளிவான, சற்றே ஈழத்தின் சாயல் அடிக்கும் தமிழில் அரிய பல தகவல்களைத் தருகிறார். ஆனால் அவர் முதலில் கூறியுள்ளது என்னவென்றால் சங்க காலத்தில் “நெய்வளம்” என்றழைக்கப்பட்ட பண் தேவார காலத்தில் “நட்டபாடை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது என்பது. அதன் ஸ்வரங்களை பாடிக்காண்பித்து இன்றைக்கு அதே பண்ணை தமிழர்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதன் இப்போதைய பெயர் “கம்பீர நாட்டை”. அந்த இராகத்தில் “ஞான விநானயகனே” என்ற பாடலின் பல்லவியையும் பாடிக் காண்பிக்கிறார்; சில திரைப்படப் பாடல்களையும் பாடிக்காண்பிக்கிறார். மேலும் செஞ்சுருட்டி, மத்யமாவதி போன்ற இராகங்கள் சில ஸ்வரங்களை மாற்றி வெவ்வேறு புது இராகங்களாக எவ்வாறு உண்டாகிறது என்பதையும் விளக்குகிறார். தாளங்களின் இப்போதைய பெயர்களையும் அவற்றின் முந்தைய பெயர்களையும் விவரிக்கிறார். ஆனால், எங்கையுமே பூங்கா ஆசிரியர்களின் கூற்றுப்படி “எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டன, அதன் பின்னணி என்ன” என்று விவரிக்கவில்லை. திருமுருகன் அவர்கள் மிகுந்த அறிவாற்றலுடனும் முதிர்ச்சியுடனும் யார்மனதும் நோகாதவண்ணம், எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி நடந்ததை மட்டும் கூறியிருக்கிறார்.

மேலும் “இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?” என்று அவர் விளக்கியுள்ளதுபோல் அறிமுகத்தில் கண்டிருக்கிறது. ஆனால் அதுபோன்று எதனையும் அவர் கூறவில்லை.

அடுத்தபடியாக “தியாகராஜரை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் போலியாக உரிமை கொண்டாட முடிகிறது.” என்று அவர் பேசியுள்ளதாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் “போலியாக” என்ற சொல்லை அவர் பயன்படுத்தவேயில்லை. மேலும் தியாகராஜரை தனிமைப்படுத்தி அவர் பேசவேயில்லை. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து வந்த அதே இசையை ஏதோ இந்த மும்மூர்த்திகள் தோற்றுவித்தார்கள் என்று தோற்றம் தரும்படியாக சிலர் ஏற்படுத்திவிட்டனர் அன்று அங்கலாய்க்கிறார். ஆனால் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படுபவர்கள் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமையே வாழ்ந்த காரைக்காலம்மையார், நாயன்மார்கள், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாசலக் கவிராயர் போன்றோர்தான் இந்த இசைக்கு முன்னோடிகள் என்கிறார். இது முற்றிலும் உண்மை. ஆனால் மும்மூர்த்திகள் இந்த இசையை வகைப்படுத்தி நிறைய பாடல்களை நல்ல மெட்டுக்களிலில் அமைத்து பிரபலப்படுத்தினார்கள் என்ற வகையில் கவுரப்படுத்தப்படுகிறார்களேயன்றி இவர்கள்தான் கருநாடக இசையை தொடங்கியவர்கள் என்று யாரும் சொல்லவில்லை. அதுவும் தியாகராஜரின் பாடல்கள் பாடப்படும் அளவுக்கு மற்ற இருவர்களின் பாடல்கள் கையாளப்படுவதில்லை. ஏனென்றால் தியாகராஜ கிருதிகள் பாடுவது மிக எளிது, மற்றும் ஜனரஞ்சகமான மெட்டுக்களில் அமைந்திருப்பதினால்.

தமிழ் ஒரு நீச பாஷை என்று கூறியதை அவர் கண்டித்திருக்கிறார். அது நியாயமானதே. யார் அவ்வாறு சொன்னார்கள் என்று எனக்கு தீர்மானமாக தெரியாது. ஆனால் யார் சொல்லியிருந்தாலும் அது மிகத்தவறேயாகும். மேலும் கருநாடக இசை ஒரு இனத்தாருக்கே சொந்தம் என்று சிலர் கொண்டாடி வந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அதில் ஓரளவு உண்மை நிச்சயம் உள்ளது. இந்தப் பாவிகள் நாகஸ்வர வித்வான்களை படுத்தியபாடு மிக அதிகம்.

தவிர, நாற்பதுகளில் தோன்றிய தமிழிசை இயக்கத்தைப் பற்றியும் அதனை முன்னின்று நடத்திய செட்டி நாட்டரசர், ராஜாஜி, கல்கி போன்ற நல்ல தமிழர்களையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஆனால் தியாகராஜருக்கு சம காலத்தவரான கோபாலகிருஷ்ண பாரதி, மற்றும் சுப்பிரமணிய பாரதியார், பாபநாசம் சிவன் ஆகியோருடைய (தமிழிசை வளர்ப்பின்பால்) பங்களிப்பை அவர் எடுத்துக் கூறவில்லை. ஒருவேளை எதிர்வரும் பகுதிகளில் விவரிக்க இருக்கலாம்.

மேலும் சில முக்கிய செய்திகளை திருமுருகன் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

1. இந்த இசை தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஏதோ அது நமக்கு சம்பந்தமில்லாதது, வேறு யாருக்கோ சொந்தமானது என்று நினைத்து தம் சந்ததியாருக்கும் கற்றுக் கொடுக்காமல் பிறருக்கு தாரை வார்த்துவிடார்கள்.

2. இந்த இசை தமிழ்நாட்டில் வளராமல் போனதிற்கு பகுத்தறிவுவாதிகளை முக்கியமாக குற்றம் சாட்டுகிறார். அது பக்தியைப் பரப்புகின்ற செய்திகளை தன்னிடத்தே கொண்டது. அதனால் நமக்கு அது வேண்டாம் என்று சொல்லி கற்கவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஆனால் மேற்கூறிய இரண்டு முக்கிய செய்திகளை அறிமுகத்தில் ஆசிரியர்குழு குறிப்பிடவேயில்லை. ஏனென்று தெரியவில்லை.

மொத்தத்தில் பூங்கா நடுநிலையில் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.

10 Comments


  1. //இந்தப் பாவிகள் நாகஸ்வர வித்வான்களை படுத்தியபாடு மிக அதிகம்//

    இதென்ன கதை .. முடிந்தால் விளக்கமாக பதிவிடவும்.


  2. முனைவர் திருமுகன் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் தமிழில் ஈழச்சாயல் அடிப்பதாக எழுதுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.


  3. தீவு அவர்களே,

    இது சாதி சார்ந்தது அல்ல. இது ஒரு கூட்டத்தின் செயல்பாடுகள். கர்நாடக இசை அரங்கை ஆக்கிரமித்துக்கொண்டு ஏனையோரை விரட்டி அடித்த ஒரு சிறிய ஆனால் சக்தி வாய்ந்த கெட்ட மதியினரின் கூடாரம். இவர்கள் தன் சாதியினரையும் விட்டு வைப்பதில்லை. மறைந்த இசை மேதை ஜி.என்.பி அவர்களை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள்! அவர் உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்களின் இசையைக் கேட்டு அதன் சிறப்பியல்புகளில் மயங்கி அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார் என்பதற்காக அவரை என்னவெல்லாம் இழிவு படுத்தினார்கள்! அதே கூட்டம்தான் நாதஸ்வர வித்வான்களுக்கு மேடை போடக்கூடாது என்று அழும்பு செய்தது. ஆனால் திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த அடக்குமுறையெல்லாம் மீறி “நாதஸ்வர சக்கிரவர்த்தி”யாகத் திகழ்ந்தார். அவருடை காலத்திற்குப் பிறகுதான் கர்நாடக இசை மேடைகளில் நாதஸ்வரம் புகழ் பெறத் தொடங்கியது. திருவீழிமிழலை சகோதரர்கள், காருகுறிச்சி அருணாசலம் போன்ற பல வித்வான்கள் பெருமை பெற்றார்கள்.

    நன்றி

    எஸ்.கே


  4. பாலா,

    முனைவர் திருமுருகன் புதுச்சேரியைச் சார்ந்தவர் என்றூ ஒலிப்பேழையிலேயே கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் பேச்சில் நிச்சயம் ஈழத்தவர்களின் ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்றன. ஏனென்று நான் அறியேன். சிறுவயது முதல் இலங்கை வானொலியே கதி என்றிருந்தவன் மற்றும் ஈழத்தமிழர்களின் பேச்சை அடிக்கடி கேட்பவன் என்ற வகையில் எனக்கு அந்த சாயல் கட்டாயம் தெரிகிறது.

    நன்றி

    எஸ்.கே


  5. வடுவூர் குமார் என்ற பார்ப்பனப் பதிவர் அவருக்கு விழுந்த ஆபாசத் திட்டுகளுக்கும் என் பதிவுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல தனது பதிவில் எழுதி இருந்தார். அவருக்கு அங்கே நான் காட்டமாகக் கொடுத்த பின்னூட்டம் இங்கே:-

    //வாங்க அரவிந்தன்
    நமது சக பதிவாளர்,சொம்புநக்கி(பெயரை எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கு)தயவுசெய்து என்று கேட்டும்..
    //

    குமார்,

    என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகுவதற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பார்ப்பனர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பூங்காவைத் திட்டித் தீர்த்தீர்கள். நான் அதனை என் பதிவில் எழுதினேன். உங்கள் பதிவில் கமெண்டு வந்ததற்கும் என் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? காலையிலேயே சோமபானம் அடிச்சீங்களா?

    திராவிடர் பற்றி பார்ப்பனர் எழுதலாம். ஆனால் பார்ப்பனர் பற்றி திராவிடர் எழுதக் கூடாது என்றும் பார்ப்பனர் பற்றி பூங்கா ஒன்றுமே சொல்லக்கூடாது என்றும் பார்ப்பனர்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது.

    அரவிந்தன், எழில், ஜடாயு போன்றவர்கள் முஸ்லிம்களை மணிக்கு ஒரு தரம் திட்டிக்கொண்டு இருக்கிறார்களே? அதனை என்ன ஏது என்று கேட்பாரா இந்த வடுவூர் குமார் என்ற பார்ப்பனர்?

    எஸ்கே, என் பதிவில் இன்னும் விளக்கமமக எழுதி இருக்கிறேன். வந்து படித்துச் செல்லுங்கள். சாகப்போகும்போது கூட ஜாதி என்னும் அருணாக்குடியை படித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். முதலில் மனிதனா மாறுங்க சார். பிறகு ஜாதி பத்தி யோசிக்கலாம்.


  6. ஐயா சொம்பு நக்கி அவர்களே,

    இந்த இடுகையில் நான் எங்கே ஜாதி பற்றி எழுதியிருக்கிறேன்? பூங்காவைப் பற்றி யாரும் விமரிசிக்கக் கூடாதா? தமிழ்மணத்தைப் பற்றியே கடுமையாக விமரிசித்துக் கொண்டு இன்னமும் அதால் திரட்டப்படும் பதிவுகள் ஏராளமாக இருக்கின்றனவே. பின்னூட்டங்களுக்கு எல்லை வகுத்துள்ளதை எவ்வளவுபேர் இன்னமும் சாடிக்கொண்டிருக்கிறார்கள் – ஜனநாயக முறைப்படி செய்யவில்லை என்றெல்லாம்? அவர்களெல்லாம் தமிழ்மண விசைப் பலகையை நீக்கிவிட்டார்களா என்ன?

    நான் பூங்காவில் கண்ட குறையைத் துல்லியமாகக் குறிப்பிட்டு ஆதாரத்துடன் விளக்கியுள்ளேன். அந்த இதழ் “ஒருபால் கோடாமை”யுடன் செயல்பட வேண்டும் என்கிற என் அவாவை வெளிப்படுத்தியுள்ளேன். முடிந்தால் நான் குறிப்பிட்டுள்ள குறைக்கு விளக்கமளியுங்கள். அதை விடுத்து வெறுப்பெனும் காளானை ஏன் உரமிட்டு வளர்க்கிறீர்கள்? தனிப்பட்ட முறையில் என் மீது ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? நான் சாவதால் உங்களுக்கு என்ன நன்மை? ஏன், நீங்கள் மட்டும் சாகாவரம் பெற்று வந்திருக்கிறீர்களா?
    “நெருநல் உளநொருவன் இன்றில்லை” என்னும் பெருமை படைத்தல்லவா இவ்வுலகு! எதற்கெடுத்தாலும் “பார்ப்பான், பார்ப்பான்” என்று ஏன் தன்னையே ஒரு கயிற்றால் இறுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்கு இந்த பார்ப்பனோஃபோபியா?

    இதுபோன்ற எதிர்மறை எண்ணப்பாங்கு உங்கள் மனநிலையையே பாதிக்குமல்லவா. நிகழ்காலத்தை சிந்தியுங்கள். என்றோ நிகழ்ந்ததற்காக இன்றைக்கு உலக்கையால் இடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதில் என்ன லாபம்?

    நான் மனிதனாகத்தான் இருக்கிறேன். மனித நேயம் வளரவேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். என்னை அறிந்த நல்ல உள்ளங்களுக்கு அது அங்கை நெல்லியெனத் தெளிவாகத் தெரியும்.

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக!

    நன்றி.

    எஸ்.கே


  7. that sombu nakki is moorthi s another avatar.


  8. மனிதன்,

    நீங்கள் சொன்னது ரொம்ப சரி. அவரும் சற்றுமுன் அசிங்கமாக ஒரு பின்னூட்டமிட்டு அதனை மெய்ப்பித்துவிட்டார். எத்தனை அவதாரம்தான் எடுப்பார் அவர்? இப்போது ஆதிசேஷனாக மாறி ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. என்ன காரணமோ தெரியவில்லை.

    என் முந்தைய பின்னூட்டத்தை நடுநிலையாளர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்!


  9. அன்புள்ள எஸ்.கே.

    தற்செயலாக உங்கள் ப்ளாகைப் பார்க்கலாமே என்று ஒரு க்யூரியாசிடி. பார்த்தேன் வருத்தமாக இருந்தது. உங்கள் பொன்னான நேரத்தை இவர்களுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டு வீணாக்கலாமா?

    இசையில் பெயர் மாற்றத்தினால், ஒன்று ஆரியர்களின் கர்நாடக இசையாகவும் அதே இசை தமிழில் பெயரிட்டால் தமிழ் இசையாகவும் ஆகிவிடுமா? நாராயணசாமி நெடுஞ்செழியனானால், ஒரு ஆரிய அடிவருடி திராவிட வீரனாகிவிட்டானா?.

    பின்னூட்டம் என்றால் என்ன?


  10. தங்கள் தடம் பதித்தமைக்கு நன்றி, வே.சா. அவர்க்களே!

    நீங்கள் கூறுவது மிகச் சரியே. இத்தகைய எண்ணப் பாங்கு கொண்டோருக்கு விளக்கம் கொடுத்து மாளாது. என்ன செய்வது!

    ஆமாம், தெலுங்கும் “திராவிட” மொழிதானே? மற்றும் பல தெலுங்கு மற்றும் பிற தென்னிந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பல பாடகர்கள் அந்த மாநிலங்களிலேயே தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்களே? இசைக்கு மொழியேது? இந்த “திராவிட”ர்களின் வீடுகளில் ஏவ்வளவு பேர் இந்தி சினிமாப் பாடல்களை முணுமுணுக்கிறார்களோ!!

    ஆகா, என்ன பரந்த நோக்கு, இந்த குறுமதியோருக்கு!!

    பின்னூட்டம் என்னும் சொல் மறுமொழியைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாமென்பதால் (மூக்கைப் பொத்திக் கொள்ளுங்கள்!), இப்போதெல்லாம் அச்சொல்லைத் தவிர்த்து விடுகிறேன்!!

    அன்புடன்,

    எஸ்கே

Leave a Reply

Your email address will not be published.