பள்ளிகளில் உடனடியாக “துப்புவது எப்படி” என்று வகுப்பு நடக்கவேண்டும் என்பது என் கருத்து. ஆனால் வகுப்பு எடுக்கும்போதே ஆசிரியர் எச்சில் துப்பிக்கொண்டேயிருக்காமல் இருந்தால் நலம்!
இன்னொருவரின் அருகாமையில் இருக்கும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது படித்த மற்றும் வயதானவர்களுக்குமே தெரிவதில்லை.
பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது :
- இருமல் வந்தால் கைக்குட்டையால் மறைக்காமலிருத்தல்,
- கோழை வந்தால் ஒடிப்போய் துப்பிவிட்டு வராமல் அதோடேயே இருத்தல்,
- நகத்தைக் கடித்து அதை அப்படியே துப்புதல்,
- மூக்கு, காது முதலியவற்றை சுரண்டுதல்,
- வேண்டாத முடிகளைக் களையெடுத்தல்,
- அந்தரங்க பாகங்களில் “வரட் வரட்” என்று சொறிதல் (மைக்கேல் மதன காமராஜனில் “கஷ்கத்தை” சொரிந்து கொண்டு ஒருவர் நிற்பாரே, அதுபோல்),
- பலவித சப்த ஜாலங்களை எழுப்புதல்,
- நாசூக்கில்லாமல் சத்தம் போட்டு சிரித்தல்
- பிறர் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எங்கேயோ பார்த்துக்கொண்டு (முக்கியமாக டி.வி-யை) மனதை அலைபாய விடுதல்
- நன்றி, மன்னிக்க வேண்டும் போன்ற சொற்களை பயன்படுத்தாமலிருத்தல்
இதையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்பதை சட்டம் போட்டா பழக்க முடியும்?
மற்றவர்களைப் பற்றிய சிந்தனையுடன் செயல்படுவதுதானே நாகரிகம்?
இதை வளர்ப்பதில் பெற்றோர், பெரியோர், ஆசிரியர் போன்ற அனைவருக்கும் கடமை இருக்கிறது.
Interpersonal Relationship, table manners போன்றவற்றைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்!
Permalink
அருமையாக பதிவு எஸ்.கே. பல நேரங்களில் பேருந்திலும் உணவகங்களிலும் அனுபவிக்கும் துன்பம் இது. சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு சில விஷயங்களை பழக்கப்படுத்த வேண்டும்.
நான் கொஞ்சம் அதிகமாக பழகிவிட்டேன் போல, என் காலை யாராவது மிதித்தால் கூட நான் “ஸாரி” சொல்கிறேன்.
Permalink
பாவம் கிச்சு. ரொம்பதான் கஷ்டப் பட்டு இருக்கிறீர்கள்! நானும் உணவகங்களுக்குச் சென்றால் கைகழுவுமிடம் அருகே இனி அமரமாட்டேன். நான் அதிர நடந்தால் பூமிக்கு வலிக்குமோ என நினைப்பவன். எனவே நான் துப்பலில் இறங்கமாட்டேன். தைரியமாக நீங்கள் அருகே வரலாம்!
Permalink
துப்பறதுல இத்தனை விதம் இருக்குன்னு எனக்கு இப்பதான் தெரியும். னல்லா எழுதரீங்க. ஆனா இந்த வடமொழி தாக்கத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே. அதிகமா இருக்கோன்னு தோணுது.