ஐ.யி-யில் மட்டும் (“ஐயோ” இல்லை; “ஆயி” யும் இல்லை, வெறும் ‘ஐயி’) – நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) – தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி “கீய்ச்சின” மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், சிஃபியின் தமிழ்ப் பக்கங்கள் போன்றவை சில எடுத்துகாட்டுக்கள்.
சரி. நீங்கள் தீநரி பாவிக்கும் ஆசாமி. திடீரென்று திண்ணையில் கட்டுரை ஒன்றைப் படிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. நீங்கள் ஐ.யி-யைத் தேடி “கிளிக்கெட்டி கிளிக்” செய்து சிரமப்பட வேண்டாம். இருக்குமிடத்திலிருந்தே தீநரியை ஐ.யி-யாக உரு மாற்றலாம். இந்த ரசவாத வித்தை புரியும் தீநரியின் நீட்சிக் கோப்பு (Extension) “ஐயி டாப்” (IE Tab) என்று அழைக்கப்படுகிறது. இதனை இந்தத் தளத்திலிருந்து பெறலாம்.
அந்தக் கோப்பை நிறுவியபின் உலாவியின் வலது அடிப்புறத்தில் ஒரு ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்தால் உலாவியின் எஞ்சின் மாறும். இதன் செயலாக்கத்தை உங்கள் வசதிக்கேட்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
இனியென்ன, இதுவரையில் தீநரியை பாவிக்காதவர்கள், உஜாலாவுக்கு மாறவேண்டியதுதானே!
Permalink
இந்நீட்சியைப் பற்றி இருவேறு கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன. Firefoxஸில் வலுவான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையினால்தான் பலர் IEயிலிருந்து Firefoxஸுக்கு மாறுகின்றனர். மறுபடி இந்நீட்சியின் வாயிலாக IEக்கு கதவைத் திறந்து விட்டு, அதன் பாதுகாப்பு சமரசங்களையெல்லாம் திரும்பவும் அனுபவிக்க வேண்டுமா என்று கேட்கப்படுகிறது. இதற்கு பதிலாக, Firefox இல் திண்ணை போன்ற தளங்களைப் பார்வயிட ‘பத்மா’ என்ற Firefox நீட்சியை நிறுவி உபயோகிக்கலாம் என்று தெரிய வருகிறது.
Permalink
நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மையான செய்தி. கட்டுக்காவல் ஏதுமில்லாத அய்யிக்கு கதவைத் திறந்துவிடல் கூடாதுதான். அதுவும் ActiveX போன்றவை மிகுந்த அச்சம் தருகின்றன. ஆனாலும் இன்னும் பலர் Frontpage போன்ற அரைகுறை செயலிகளைப் பாவித்து அயியில் மட்டுமே தலைகாட்டும் வலைப் பக்கங்களைப் படைக்கிறார்களே!
சற்றுமுன் “பத்மா”வை அவர்தம் பத்மபாதங்கள் நோகாவண்ணம் பையப் பைய அழைத்துவந்துள்ளேன். ஆனால் இன்னும் திண்ணையில் தமிழ் உரையாடல் தொடங்கவில்லை. Options போய் தளத்தின் பெயரை உட்செலுத்தி வந்தபின் கேள்விக்குறிகள் ரஷ்ய மொழியாக மாறியுள்ளன. சீக்கிறமே தாய்மொழிக்கு உருமாற்றம் பெறுமென நம்புகிறேன்.வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
தங்களுடைய சீட்டு ஒட்டும் (Tags) நீட்சி மிக்க உபயோகமான ஒன்று.
நன்றி.
எஸ்.கே
Permalink
பத்மாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு யக்ஞாவை அணுகவும். 🙂 அவர்தான் என் பதிவில் வந்து அதை மார்க்கெட்டிங் செய்தார், அதுவும் வேறெதோ மேட்டர் பற்றிய விவாதத்திற்கு நடுவே புகுந்து 🙂 அவருடைய கூற்றுப்படி, இது ஒரு சர்வ ரோக நிவாரணியாகும் (அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்). திண்ணையை ருஷ்ய மொழித்தளமாக மாற்றி விட்டதா? 🙂
‘சீட்டு ஒட்டும்’ நீட்சியில் சில மேம்பாடுகள் செய்யப் படவிருக்கின்றன, WordPressஇன் categories வசதியைக் கணக்கில் கொண்டு. அதன் பிறகு உங்களைப் போன்ற WordPress பயனர்களுக்கு வசதியுள்ளதாக அமையலாம்.