விநோதமான தமிழாக்கம்!

LTTE Norway delegationநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.

Pawns of peace

அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்”? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது “Pawns of Peace” என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!

“Pawn” என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:

  1. அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது
  2. செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர்
  3. பிறரால் “பகடைக்காயாக” பயன்படுத்தப்படுதல்

மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் “pawn” என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.

“They were used as mere pawn” என்னும் சொல்லாட்சி சாதாரணமாக நீங்கள் காணக்கூடியது. The term “pawn” gets the meaning of “a person, group, etc., manipulated by another” in such a context.

இணயத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு வலைத்தளைத்திலோ வலைப்பதிவிலோ ஒரு தவறான ஆக்கம் பதிப்பிக்கப்பட்டால் அது பலரால் எடுத்துக் கையாளப்பட்டு ஈசல் போல் பரவிவிடும். இதோ பாருங்கள் இநத “அடமானங்கள்” பல்கிப் பெருகிக் கிடப்பதை!

அமைதிக்கான அடமானங்கள்

நார்வே நாட்டின் இலங்கை அமைதி முயற்சிகள் பற்றிய அந்த ஆய்வறிக்கையில் அடிநாதமாக அமைந்திருக்கும் வாதம் நார்வே நாடு இந்தப் பிரச்னை தொடர்பான நாடுகள் மற்றும் இயக்கங்களால் பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான். அவ்வறிக்கையில் காணும் கீழ்க்கண்ட பகுதிகளை வாசியுங்கள்:

The Norwegian team were aware of these limitations and feared becoming a ‘pawn
in domestic politics’.

While there was awareness amongst the Norwegians of
the growing risks of Norway becoming a pawn in Sri Lanka’s domestic politics, Nor-way should have been more alert to its possible consequences.

ஆனால் இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது ஈழத் தமிழர்கள்தான் பகடைக்காய்களாக ஆனார்கள் என்பது பலரது வாதம். இதோ பாருங்கள்:

பகடைக்காய்

இதுபோன்ற பல “குண்டக்க முண்டக்க” வகை தமிழாக்கங்களை அன்றாடம் காணமுடிகிறது. நினைவு வரும்போது அவற்றை உங்கள்முன் வைக்கிறேன்!

அது கிடக்கட்டும், நார்வே நாட்டின் அந்த ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்? என் பார்வையை அடுத்த பதிவில் பகிர முயற்சிக்கிறேன்!

1 Comment


  1. Hello,

    I happened to go through your blog a couple of days back and was impressed. Let me get straight to the point. We have a forum at http://www.chennaichatter.com exclusively for Chennai-ites where we discuss various issues pertaining to Chennai and the nation. I think it would be great if you join us and take part in the debates. It would add a whole new class to the discussions.

    Have a great day!
    Thomson.

Leave a Reply

Your email address will not be published.