மென்பொருள் உலகம் – 2

இப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது!
அமெரிக்காவோ இன்றைக்கு “U.S of A, Made in China” என்று மாறிவிட்டது. Macy’s, Wal-Mart, B.J’s, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் சீனாவில் செய்தவைதான். கூடிய சீக்கிரத்தில் முழு உலகத்துக்கும் உற்பத்தி மையமாக சீனா ஆகக்கூடிய நிலை உருவாகலாம். இதற்குக் காரணம் இன்றைய சீனா கம்யூனிஸத்தையும் முதலாளித்துவத்தையும் கலந்து ஒரு cocktail செய்து, மக்களை அடக்கி ஒரு கட்டுக்குள் வைக்க கம்யூனிஸத்தையும், பன்னாட்டு முதலீடுகளை வரவேற்க கேபிடலிஸத்தையும் உபயோகித்து, இருமுகம் கொண்ட அமைப்பாக விளங்குவதுதான். இன்னும் சிலர் ஒரு cynical view-வைக் கொண்டிருக்கிறார்கள் – சீனாவில் பொருள் உற்பத்தியெல்லாம் பெரும்பாலும் சிறைகளில் செய்யப்படுவதால் உழைப்பூதியச் சிலவுகள் almost a zilch என்று! இந்தியாவிலும் சிறுகச்சிறுக சீனாவின் தயாரிப்புக்கள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. Thomson (டின்-டின் ரசிகர்களுக்கு: இது Thomson without “P”!) TV நிறுவனத்தை ஒரு சீனக் கம்பெனி வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்திய மென்பொருள் நிறுவனங்களும் சீனாவில் போய் தங்கள் மையங்களைத் துவங்க போட்டி போட்டுக்கொண்டு செல்கிறார்கள். விப்ரோ ஒன்றுதான் கொஞ்சம் தயங்குகிறது. இப்போது Cognizant Technology Solutions-ம் சீனாவுக்குள் நுழைந்திருக்கிறது. சமீபத்தில் மங்கோலியாவில் போய் வேலைசெய்ய இங்கு சென்னையில் ஆள் எடுத்தார்கள்.

இப்படி சீனா பக்கம் காற்றடிப்பதில் ஒரு அபாயம் இருக்கிறது :-

இங்கிருந்து சென்று சீனர்களைத் தயார் செய்துவிட்டோமானால், அவர்கள் சீக்கிரமே நம்மை முந்திவிட்டு, இப்போது இந்தியா முன்னிலையில் விளங்கும் “outsourcing (BPO), offshoring – இவைகளின் முதன்மையான இலக்கு” என்ற நிலை மாறி, பொருள் உற்பத்தி சென்ற திசையில் மென்பொருள் சேவையும் சீனாநோக்கிச் சென்றுவிடுமோ என்ற பயம் இருக்கிறது. சீனாக்காரர்களிடம் “எந்த மொழி செத்த மொழி, எது செம்மொழி, எது ஊதா மொழி” என்பது போன்ற (உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டு அதில் குளிர்காயும்) அணுகுமுறை இல்லாததால், அவர்கள் வாயில் கூழாங்கல்லை அடக்கிக்கொண்டு, காலைமுதல் இரவு வரை கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு சரியான phonetics – உடன் ஆங்கிலம் பேச (மற்றும் எழுத) ஆரம்பித்துவிட்டால் நம் மென்பொறியாளர்கள் எலிப்பொறி செய்ய வேண்டியதுதான்!

இதற்கிடையே பிலிப்பைன்ஸ், லிதுவேனியா, லாட்வியா போன்ற நாடுகள் நாங்களும் மென்பொருள் படைப்போம், குறைந்த கூலியில் – என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன!

ஆகையினால் தோழர்களே, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள். அதற்காக யாரைத் “தூற்றலாம்” என்று ஆரம்பிக்காதீர்கள்! இந்தக் குமிழ் தெறித்து சிதறுவதற்கு முன்னால், பல ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களை “பளபள”வென்று நம்மை நம்பித்தானே ஏற்படுத்தியிருக்கிறார்கள், அவர்களைப் பணக்காரர்களாக்குவது நம் கடமையல்லவா என்பதுபோன்ற altruistic எண்னங்களைக் கைவிட்டு, கொஞ்சம் சேமிப்பில் கவனம் செலுத்தி, ஏதாவது புத்திசாலித்தனமாக முதலீடுகள் செய்து, ஆபிரஹாம் மாஸ்லோவின் பிரமிடில் கீழ்மட்ட அடுக்குகளான அடிப்படைத்தேவைகளுக்கு வஞ்சனையில்லாமல் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள்!

இன்னும் ஓரிரு நாட்களில் இதன் அடுத்த பகுதியை எழுதுகிறேன்!

4 Comments


  1. ஆனந்த்,

    “வருக வருகை
    வருகா வருகை”

    மாற்றிவிட்டேன்!

    சுட்டியும் விட்டேன்!

    நன்றி!

    எஸ்.கே


  2. அருமையான, தேவையான கட்டுரை. நம்மூரில் உள்ள நிறுவனங்கள் அங்கே போவது அங்குள்ள வேலைக்ளை ஈர்ப்பதற்காகத்தான், அங்கு வேலைகளை எடுத்துச்செல்வதில்லை என்றவரையில் – பிரச்சினையில்லை. மற்றப்படி மென்பொருளைப்பொருத்தவரை தொழில்நுட்பத்திலும், மூளையிலும் நல்லாவே செய்கிறார்கள். ஆனால் ஆங்கிலம்தான் ரொம்ப உதைக்கிறது. எங்களது டெவெலப்மெண்ட் மையம் ஒன்று Suzhouல் இருக்கிறது. எங்களால் இங்குள்ள சீனர்கள் இல்லாமல் அவர்களிடம் ஒன்றும் புரியவைக்க முடியவில்லை. அதை மெயிலில் எழுதிவிட்டால், மிகவிரைவில் முடித்துவிடுவார்கள். OS-ல் இருந்து எல்லாம் சீனத்தில். நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலமும் தெரிந்துவிட்டால் ஆபத்துதான்.


  3. பல நாடுகளிலும் சீனாவின் பொருட்கள் விற்பனையில் சாதனை படைப்பது உண்மை. பொதுவாக மற்ற நாடுகளில் விற்கப் படும் அதே பொருளின் விலையை சீனா பன்மடங்கு விலை குறைத்துத் தருகிறது. இதுவே அதன் வெற்றிக்குக் காரணம் எனலாம். பார்க்க பழபழப்பாக இருந்தால் போதும் நம் மக்களுக்கு. கூடவே தரம் என்று பார்த்தால்கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். வன்பொருள் உலகைல் புரட்சியை சீனா ஏற்படுத்தியது என்றால் அது பொய்யல்ல!

Leave a Reply

Your email address will not be published.