பழக்க ஒழுக்கம்

இதாவது பரவாயில்லை. சிலர் சாப்பிடும் இடத்திலேயே காற ஆரம்பித்து விடுவார்கள். எதிரில் அமர்ந்து சாப்பிடும் நபருக்கு என்னமாதிரி இருக்கும் என்கிற உணர்வு கிஞ்சித்துமின்றி பாத்ரூமில் செய்யவேண்டிய தூர்வாரல்களை டைனிங் டேபிளில் செய்ய முற்படுவோர்களை அந்தக்காலம் போல் கழுவில்தான் ஏற்றவேண்டும்.

இன்னொரு கெட்ட பழக்கம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது வாயில் வேண்டாத வஸ்து ஏதேனும் தென்பட்டால் அதை ஓசையில்லாமல் நாசூக்காக எடுத்து கன்ணில் படாமல் மறைக்க வேண்டும் அல்லது கிடுகிடுவென்று வாஷ்பேஸின் பக்கம் போகவேண்டும். ஆனால் இவர்கள் அப்படியே துப்புவார்கள்! என்ன நாகரிகமய்யா இது – கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திய நாகரிகம்!

“பேஏஏவ்” என்று எட்டு கட்டையில் ஏப்பம் விடுவது, நாசித்துவாரத்திலிருந்து தங்கம் தோண்டுவது, வாத, பித்த ஸ்லேஷ்மங்களை மூக்கிலிருந்து சிந்தி வெளிக்கொணர்வது, பல்லிடுக்கில் ஊத்தையினூடே சிக்கியிருக்கும் கசண்டுகளை குத்தியெடுத்து டேபிளிலேயே துப்புவது, வாயை மறைத்துக்கொள்ளாமல் இருமல், தும்மல் போன்றவைகளை அடுக்கு அடுக்காகப் போட்டு நம் பாக்டீரியாக்களை வையகமெங்கும் விநியோகம் செய்வது – இவ்வளவும் பொது இடங்களில், எல்லோரும் உணவருந்துமிடத்தில், எதிரில் அமர்ந்து சாப்பிடும் நபரைப் பற்றிய சிந்தை சிறிதுமின்றி அவர்கள் வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு கொடுமை புரியும் மாக்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இங்கேயாவது பரவாயில்லை. கர்னாடகா, ஆந்திரா பக்கம் போனால் தட்டிலேயே கைகழுவுவார்கள். கொடுமைதான்! ஆனால் கேரளாக்காரர்கள் தேவலாம். எல்லோரும் வாஷ்பேஸின் சென்று கை, வாயெல்லாம் நன்கு சுத்தம் செய்வார்கள்.

சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பலர் வலது பக்கம் எச்சில் துப்புகிறார்கள். ஏன் இடது பக்கம் ஒதுங்கி சாலை ஓரமாகத் துப்பினால்தான் என்ன?

Pages: 1 2 3

3 Comments


  1. அருமையாக பதிவு எஸ்.கே. பல நேரங்களில் பேருந்திலும் உணவகங்களிலும் அனுபவிக்கும் துன்பம் இது. சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு சில விஷயங்களை பழக்கப்படுத்த வேண்டும்.

    நான் கொஞ்சம் அதிகமாக பழகிவிட்டேன் போல, என் காலை யாராவது மிதித்தால் கூட நான் “ஸாரி” சொல்கிறேன்.


  2. பாவம் கிச்சு. ரொம்பதான் கஷ்டப் பட்டு இருக்கிறீர்கள்! நானும் உணவகங்களுக்குச் சென்றால் கைகழுவுமிடம் அருகே இனி அமரமாட்டேன். நான் அதிர நடந்தால் பூமிக்கு வலிக்குமோ என நினைப்பவன். எனவே நான் துப்பலில் இறங்கமாட்டேன். தைரியமாக நீங்கள் அருகே வரலாம்!


  3. துப்பறதுல இத்தனை விதம் இருக்குன்னு எனக்கு இப்பதான் தெரியும். னல்லா எழுதரீங்க. ஆனா இந்த வடமொழி தாக்கத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே. அதிகமா இருக்கோன்னு தோணுது.

Leave a Reply

Your email address will not be published.