கூகிள் குசும்புகள்!

Do a barrel roll in googleஇப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand name becoming generic.

சரி, இப்போது “Do a barrel roll” என்னும் சொற்றொடரை கூகிளில் தேடுங்கள். என்ன ஆகிறது உங்கள் புரௌசர் (உலாவி)? ஒருமுறை குட்டிக்கரணம் அடிக்கிறதா? இல்லையென்றால் நீங்கள் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பாவிப்பவராக இருக்கவேண்டும்; அல்லது அரதப் பழசான உலாவியை பயன்படுத்துபவராக இருக்கவேண்டும்! (கூகிள் குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்)

இப்போது “tilt” அல்லது “askew” என்னும் சொற்களை கூகிளில் தேடுங்கள். உங்கள் புரௌசர் சற்றே வலப்புறம் நாணிக் கோணிக்கொண்டு நிற்கிறதா?

அடுத்ததாக “ascii art” என்னும் சொல்லைத் தேடுங்கள்? என்ன ஆகிறது?

1 Comment


  1. nice sir…. like wise give google gravity in search and click the below link check whats happening????

Leave a Reply

Your email address will not be published.