இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:- இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன […]

சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில். வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் […]

சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் […]

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது “அபிதான கோசம்” என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல […]

வாரியாரின் மணிமொழிகள்

திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் “கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி” எடுத்த “மணிமொழிகள்” (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்: இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே. […]

வெற்றிகொடிகட்டு

இரயில் பயணங்களில் சில சிறுவர்கள் ஒரே இடத்தில் போரடித்துக்கொண்டு உட்காராமல் பெட்டிக்குப் பெட்டி இணைப்புக் கூண்டு (vestibule) வழியே தாண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு த்ரில்! அதுபோல் தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சில சமயம் நம் எதிரில் வந்து மோதிக்கொள்வதுண்டு. […]