வந்தே விட்டது!
ஆமாம். இனிமேல் "பலான" சமாசாரங்கள் – "சரோஜாதேவி கதைகள்" தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – "XXX" மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.
இந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆகவே நண்பர்களே, "ஆண் குறி" போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்!
சார்ந்த வகை: கணினி :: நாள்: ஜூன் 2nd, 2005. 2 மறுமொழிகள்.
இந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், "அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி" என்பதுபோல்! நான் சொல்வது உலகிலேயே மிகச் சிறிய வலைத்தளத்தைப் பற்றி. சரி, அதைப் பார்த்தேயாக வேண்டுமா?
இங்கே சென்றால் தெரியப் போகிறது!
ஆனால் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அலங்காரம் செய்யவேண்டி வந்து, அதற்கு சம்பந்தமில்லாதபடி அநியாயமாக "மூக்குக் கண்ணாடி" என்று பெயரிட்டு, உங்கள் மூக்குக்கு என் மேல் கோபம் வந்தால் நான் ஜவாப்தாரியல்ல! அதுவும் என் இந்தப் பதிவுக்கு அப்புறம்!
சார்ந்த வகை: கணினி :: நாள்: ஏப் 19th, 2005.
தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது "கட்டுக்கட" மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.
புரிந்தவர் சென்றனர், வென்றனர்! 
சார்ந்த வகை: கணினி :: நாள்: அக் 17th, 2004. 1 மறுமொழி.

சமீபத்திய மறுமொழிகள்