கண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை

அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே!

துப்புரவு தொழிலாளர்கள் மூட்டை தூக்கும் தொழிலாளி

இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது!

அடிமைகள்

என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு போட்டு காண்பித்திருந்தாலும் நம் ஆட்கள் சுவற்றைக் கண்டால் ‘வீலிங்’ விடாமலா இருக்கப் போகிறார்கள்!

ஒன் பாத்ரூம்

கும்பகோணம் கும்பேஸ்வரஸ்வாமி கோயிலை ஒட்டிய ஷாப்பிங் சந்து. இங்கு பல பாரம்பரியமான பொருட்கள் கிடைக்கும். ‘அருக்கஞ்சட்டி’யிருந்து அரிவாள்மணை வரை வேறெங்கும் கிட்டாத வஸ்துக்களை இங்கு பெறலாம்!

கும்பேஸ்வரர் கடைத்தெரு

இதுதான் எங்கள் ஊர், “கீழ்வேளூர்” (கீவளூர்). திருவாரூர் – நாகைப்பட்டினம் சாலையில் நடுவில் அமைந்தது. நால்வர்களில் மூவரால் பாடல் பெற்ற சிவஸ்தலம். சுந்தர குஜாம்பிகை உடனுறை அக்‌ஷயலிங்கஸ்வாமி (கேடிலியப்பர்) மற்றும் வடபத்திரகாளி ஸ்வரூபத்துடன் அஞ்சுவட்டத்தம்மன், முருகன், குபேரன் சன்னதிகள் கொண்ட பெரிய கோயில். கோட்செங்கச் சோழனால் நிறுவப்பட்ட ‘மாடக்கோயில்’, பல சிறப்பான சிற்பங்களை தன்னகத்தே கொண்டது.

கீழ்வேளூர்

என்னங்க பண்றது, உயிர் வாழ்வதற்காக இது மாதிரி சிம்பிளா சாப்பிட வேண்டியிருக்கு பாருங்க! (Just eat to live!)

சிம்பிள் சாப்பாடு

விஐபி-யாக இருந்தால்தாங்க மைக் கிடைக்கும். அது ஒரு “ஆராதனை” தான், இருந்தாலும்..!

மைக்கில் ஓர வஞ்சனை

இது போன்ற காட்சியைக் காணக் கிடைப்பது இன்னும் எவ்வளவு நாட்களோ!

மாடும் கன்றுக்குட்டியும்

அடேங்கப்பா, சர்வ ரோக நிவாரணம். மூடுங்கப்பா அத்தனை ஆசுபத்திரிகளையும்!

ஆல்கியூர்

அம்மா, மீனக்‌ஷியம்மா, பக்தியும் வேணும், புத்தியும் வேணும்!

தாயே மீனாக்‌ஷி

கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் – சந்திரசேகரபுரம் மாரியம்மன் கோயிலில் இடப்பட்ட “மாவிளக்கு”. மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் இந்து சமயத்தவர்களின் அம்மன் வழிபாட்டு முறைகளுள் சிறந்த ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லப் பாகு, ஏலக்காய் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் பஞ்சில் நெய் ஊற்றி திரிப் போட்டு விளக்கேற்றப்படும். மேலதிக விவரங்களுக்கு இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்.

மாவிளக்கு

Leave a Reply

Your email address will not be published.