எனக்கு இரண்டுதான் பழக்கம்.
ஒன்று ஒரு கசப்பான அனுபவம். ஆனால் அங்கு நாலும்தான் வருமென்பதால் பரவாயில்லை.
மிகுந்த சலசலப்பாக இருந்த இடம் இப்போ சந்தடி குறைந்து கொண்டே வரும் டிரெண்டைக் காண முடிகிறது.
மார்ச் 2004 = 1062
மார்ச் 2005 = 742
ஏப்ரல் 2004 = 926
ஏப்ரல் 2005 = 247
நான் அடிக்கடி பங்கெடுக்கும் கிளப்போ ‘ஜிலோ’ – வென்றிருக்கிறது. அவ்வப்போது ஹரி கிருஷ்ணன் பா.ச. பகுதி – 2 பாட்டு 5 என்று எழுதுவார். அனைவரும் படித்து மௌனமாகிவிடுவர். பின் அன்புடன் ஒருவர் வந்து தலைகாட்டுவார். அவ்வளவுதான். இப்படியே போனால் அது ஒரிஜினல் கச்சேரி ரோடு கிளப்பைப் போன்றே “பொய்யாய், கனவாய், பழங்கதையாய்” ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆஸாத் போல் ஓரிருவர் ஏதோ சுலுப்பிவிட்டுப் பார்த்தனர். ம்ஹூம். நானும் “பார்ப்பனீயம்” என்று கூட எழுதிப் பார்த்தேன். அதற்கும் “பெப்பே”தான்! ஒருவேளை டோண்டுவின் பின்னூட்டக் குப்பியைத்தான் ரொப்புவார்கள் போலிருக்கிறது!
ஆமாம், இதற்கு என்ன காரணம்? வலைப்பூக்களின் பெருக்கத்தின் தாக்கமா? இயல்பான சோர்வா?(burnout?) முக்கிய கர்த்தாக்களின் விருப்பமின்மையா? அல்லது ” வழுவல கால வகையினானே” என்று கழண்டுவிடுவதுதான் வழியா?
அறிஞர்கள்தான் பதிலுரைக்க வேண்டும்.