கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். “லைனக்ஸ்”/”லினக்ஸ்” என்னும் இயங்குதளத்தின் (Operating System) பயன்பாடு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக:
- இலவச மென்பொருள் (Free Software)
- தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)
- மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)
- மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)
- திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
- திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)
- கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)
- கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS – Free and Open Source Software)
மேற்சொன்னவை அனைத்தும் மிகுந்த தத்துவ, கோட்பாட்டு சார்ந்த பொருளுடையவைகளாகவும், அவற்றைக் கையாளும்போது ஏதேனும் தவறான சொல்லாட்சியை அமைக்க நேர்ந்தால் அது பலர் மனங்களில் பெருங்குழப்பம் விளைவிக்கும் தாக்கம் கொண்டவையாகவும் அமைவது ஒரு நிதர்சனமான உண்மை. இத்தகைய சொற்பயன்பாடு குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்க் கணினி அமைப்பில் பெருந்தொண்டாற்றிவரும் திரு. மு.மயூரனின் பதிவில் வாசித்து இதுகுறித்த தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவர், “GNU/Linux – சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!” என்னும் தூக்கிவாரிப்போடும் தடாலடி தலைப்புடன் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.
இதைப் படித்தபின்னும் என்ன, தலை சுற்றுகிறதா? முதலில் அப்படித்தான் இருக்கும். இங்கேயே சற்று கைநனைத்து, சிறிது பங்களியுங்கள். நாளடைவில் நீங்களே இத்தகைய பரிபாஷையில் வல்லுனராகிவிடுவீர்கள்! ஆனால் இதனைத் தாண்டி அடுத்த திறக்கில் லைசன்ஸ், GPL, CC, Linus Torvalds vs Richard Stallman – இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி அல்லுசில்லாகி சுருண்டு மடங்கினால் நான் ஜவாப்தாரியல்ல! 😆
Permalink
அருமை!
Permalink
மிக்க நன்றி, அஷோக்பரன்.
எஸ்.கே