அவமான “கியூ”

ஐயகோ, இதென்ன அநியாயம்!

வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டார்களாமே! அதுவும் முன்னாள் பிரதமரை! நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதா? “கியூ” முறையெல்லாம் ஓட்டுப்போட மட்டும் உரிமையுள்ள பொது ஜனத்துக்கு மட்டும்தானே. மாஜி பிரதமர் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு ஏது வரிசை? பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைத்து அனைத்துச் சட்டங்களையும் ஒதுக்கி அவர்களுக்கு வேண்டுவன செய்வதுதானே அலுவலர்கள் கடமை?

வாகா எல்லையில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களை சுங்க இலாக்கா அதிகாரிகள் வரிசையில் வரும்படி கூறிவிட்டார்களாம். என்ன அவமானம்!

அதுமட்டுமா, 25 நிமிடங்கள் கழித்து அவருடைய இருக்கைக்கு வந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று எப்படி சொல்லப்போச்சு. அடடா, பெருத்த அவமானம்!!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அலுவல் பார்க்கும் அதிகாரிகள் எவ்விதமான சூழ்நிலையில் வேலை பார்க்கிறார்கள், அவர்களுடைய pressure situation என்ன, சிறிதுகூட தவறு நேராமல் “கம்பிமேல் நடப்பது” போன்று (cliché be excused!) பணியாற்றவேண்டிய நிலை. இவ்வளவுதூரம் கடைமையுணர்ச்சியுடன் இருக்கின்றார்களே என்று பாராட்ட வேண்டியவர், “அவமானம், அவமானம்” என்று குதிக்கிறாரே, இது என்ன demo-crazy!

ஆமாம், இவர் பிரதமராக இருக்கும்போதுதானே பிரதமரின் கார் வரக்கூடிய வழியில் “வாக்கிங்” போனார் என்று ஒரு அப்பாவி மனிதனை செக்யூரிட்டி ஆட்கள் பிரட்டி, பிரட்டி அடித்தார்கள்?

1 Comment


  1. ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø À¾Å¢Â¢Ä¢ÕôÀŧà ܼ Å⨺¢ø ÅÕÅ¡÷ ±ý¸¢È¡÷¸û. þí§¸ ±ýɼ¡¦ÅýÈ¡ø….

    ±ô§À¡Ð Á¡üÈí¸û ÅÕõ þí§¸?

    -¸¢Ã¢

Comments are closed.