நாலரைப் பாலா நச்சுப் பாலா!

aavin “வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு” என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை!

cow இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம் – இங்கு பால் என்று நாம் குறிப்பிடுவது பசு மற்றும் எருமைப் பாலைப் பற்றித்தான் – புலிப்பால், ஆட்டுப் பால், தாய்ப்பால் இவைகளைப் பற்றியல்ல!

child-milk அடிப்படையில் பால் அருந்துவதே மனிதனுக்குக் கெடுதல் என்று கூவி பால்காரர்கள்தம் வாழ்வாதாரத்தில் கைவைக்க முயல்வோர் பலருண்டு பாரில்! அந்த பால் எதிர்ப்புக் கழகத்தார்களிடம் “குறையென்ன கண்டீர் எந்தம் மக்கள் அன்றாடம் பருகிடும் ஆவின் பாலில்?” என்று கேட்போமா:-

  1. பாலிலுள்ள கொழுப்புச் சத்து** மனிதர்களை இதய நோய், நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் தாக்கக் காரணமாய் அமைகிறது
  2. பாலினுள் கலந்துள்ள பலவகையான புரதச் சத்துக்கள் பெரும்பாலானோருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. முன்னமையே பலவித ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களை இது இன்னும் கடுமையாகத் தாக்கக் கூடும். (The extremely allergic person can develop life-threatening Anaphylactic shock. Also, in several studies, Sudden Infant Death Syndrome (SIDS) has been linked with milk allergy.)
  3. பால் நம் அடிப்படை நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது
  4. பால் உண்ணுவதால் நிகழும் பக்க விளைவுகள் சிலருக்கு வேறு தீவிரமான நோய்களைத் தட்டி எழுப்பி வீரீயமடையச் செய்கிறது
  5. நான்கு வயது தாண்டினாலே பாலிலுள்ள “லாக்டோஸ்” எனப்படும் வேதியப் பொருளை ஜீரனிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. நம் மக்களில் 90% நபர்களுக்குத் தோன்றும் குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு இந்த லாக்டோஸே காரணம்
  6. பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பால் மூலம் எளிதாக மனிதனைத் தாக்குகின்றன
  7. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் பாலில் போதுமான அளவு இல்லை. அதனால்தான் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுருத்திவருகின்றனர்
  8. குடற்புண் உள்ளவர்களை பால் மேலும் படுத்துகிறது!

naalarai** சரி. இப்போது தலைப்புக்கு வருவோம். அதாவது கொழுப்பைக் கையிலெடுப்போம்!

குழந்தைகளுக்குக் கூட ஒரு வயது வரையில்தான் 3.5% கொழுப்புச் சத்து கொண்ட பாலைக் கொடுக்கலாம். நான்கு வயது வரை 2%. அதன் பின்னர் 1%-க்கு மேல் போகக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். முழுதும் கொழுப்பு நீக்கப்பட்ட (skimmed milk) பால்தான் அந்த வயதில் மிகச் சிறந்தது என்று அடித்துச் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இத்தகைய பாலை “கொட்டிய பால்” என்று கோவைப் பகுதியில் குறிப்பிடுவார்களாம்.

சுமார் 240 மில்லி லிட்டர் பாலில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்:-

  • நாலரைப் பால் (4.5% கொழுப்பு) – 150 கலோரி சத்து
  • 2% பால் – 120 கலோரி
  • 1% – 100 கலோரி
  • ஸ்கிம் செய்த பால் – 80 கலோரி

நாலரைப் பாலை ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் வீதம் அருந்தி வந்தால் ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ வீதம் உங்கள் எடை கூடும் அபாயம் இருக்கிறது. அதன் பின்விளைவுகளைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை!

பொதுவாகவே பாலிலுள்ள கொழுப்புச் சத்து, மாட்டின் கன்றுகள் எளிதில் வளர்ந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ள Saturated Fat வகையைச் சார்ந்தது. அதனை மனிதன் உட்கொள்ளும்போது இதய நோய் (Acute Myocardial Infarction) தோன்ற ஏதுவாகிறது.

மேலும் பாலிலுள்ள பாஸ்பரஸ் சத்தும் தன் பங்குக்கு சில கெடுதல்களைச் செய்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பால் முக்கிய எதிரியாகும்.

வயதானவர்களால் பாலை ஜீரணம் செய்யவே முடியாது. ஆனால் அவர்கள் தங்கள் நாக்கைக் கட்டுப் படுத்த முடியாமல் “எனக்கு நாலரைப் பாலில் காப்பி போட்டுக் கொடு” என்பார்கள். அது அவர்கள் மருத்துவர்களின் பர்சுகளை பெருக்கச் செய்யும் முயற்சிதானே தவிர வேறொன்றுமில்லை!

எனவே, தோழர்களே, “நாலரைப் பாலா நீ, வாவா, நாலு அறை தருகிறேன்” என்று விரட்டிவிட்டு உள்ளே கொட்டுங்கள் சில சொட்டுக்கள், “கொட்டிய பாலை”!

தரவுகள்:-

  • British Journal of Nutrition. 91(4):635-642, April 2004.
  • The Nutrition Society
  • American Institute for Cancer Research
  • American Academy of Pediatrics

2 Comments


  1. பயனுள்ள பதிவு.
    பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published.