"வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு" என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று "வெளுத்தவர்கள்" இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை!
இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம் – இங்கு பால் என்று நாம் குறிப்பிடுவது பசு மற்றும் எருமைப் பாலைப் பற்றித்தான் – புலிப்பால், ஆட்டுப் பால், தாய்ப்பால் இவைகளைப் பற்றியல்ல!
அடிப்படையில் பால் அருந்துவதே மனிதனுக்குக் கெடுதல் என்று கூவி பால்காரர்கள்தம் வாழ்வாதாரத்தில் கைவைக்க முயல்வோர் பலருண்டு பாரில்! அந்த பால் எதிர்ப்புக் கழகத்தார்களிடம் "குறையென்ன கண்டீர் எந்தம் மக்கள் அன்றாடம் பருகிடும் ஆவின் பாலில்?" என்று கேட்போமா:-
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: நல்வாழ்வு :: நாள்: நவ 28th, 2007. 2 மறுமொழிகள்.
இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம்.
சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் "குடிசை", "முக்கு" கடைகளில் கிடைக்கும் ("சார், உங்களுக்காக சிறப்பு சலுகை. இரெண்டு வாங்கினால் ஒரு குட்டியூண்டு வெக்கி இலவசம்") "சப்புச்சரவு" வரட்டி போன்ற பன்ரொட்டிமேல் சீஸால் மெழுகி "பீட்ஸா" என்றழைக்கப்படும் வஸ்து வேட்பாளராக வராமலிருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்தேன். தவிர "சுத்த சைவ" ஓட்டல்களின் அசுத்தங்களையும், ஐந்து, ஆறு தாரகைகள கொண்ட உணவகங்களில் ஆழுறை நிலையில் (deep freeze) வைக்கப்பட்டு சூடேற்றப்பட்ட உயிரில்லாத "பொஃப்fபே" (வயிற்றுக்கு "பெப்பே") சாப்பாட்டையும் அனவரதமும் உள்ளே தள்ளிச் சலித்த எனக்கு, இயற்கை உணவு ஒரு மாறுதலாக இருக்குமே என்று தோன்றியது. முன்பெல்லாம் இயற்கை உணவு என்று சொன்னால் எங்கோ படித்த "People who eat natural food will die of natural causes" என்ற வாசகத்தை ஒப்பித்துவிட்டு அந்த தத்துவத்தையே கிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெட்டர் ஹாஃப் "பிட்டர் ஹாஃப்" ஆவதற்கு முன் "சரி"யென்றேன்.
சரி, சுருங்கச் சொல்வதானால் கேரளத்தைச் சேர்ந்த "ச்சோலையில்" நிறுவனத்தாரின் "சஞ்சீவனம்" நடத்தும் "கதலிவனம்" என்னும் முழுமையான இயற்கை உணவு நிலையத்திற்கு புறப்பட்டேன். இதற்காக காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிட்டு பக்குவமான பசியைத் தயார் நிலையில் வைத்திருந்தேன்.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: நல்வாழ்வு :: நாள்: அக் 23rd, 2005. 7 மறுமொழிகள்.
சமீபத்திய மறுமொழிகள்